கிலா மரங்கொத்தி

கிலா மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
மெலனெர்பெசு
இனம்:
மெ. யூரோபிஜியாலிசு
இருசொற் பெயரீடு
மெலனெர்பெசு யூரோபிஜியாலிசு
(பெயர்டு, 1854)
பரவல் (பச்சை நிறத்தில்)

கிலா மரங்கொத்தி (Gila woodpecker-மெலனெர்பெசு யூரோபிஜியாலிசு) என்பது தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு மெக்சிகோ பாலைவனப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு நடுத்தர அளவிலான மரங்கொத்தி சிற்றினம் ஆகும். இது அமெரிக்காவில், தென்கிழக்கு கலிபோர்னியா, தெற்கு நெவாடா, அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோ பகுதிகளில் காணப்படுகிறது.[2]

விளக்கம்

தொகு
 
உயரக் கற்றாழையில் துளை கூடு அருகில்

கிலா மரங்கொத்திப் பறவையின் முதுகு மற்றும் இறக்கைகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வரிக்குதிரை போன்ற வடிவத்துடன் காணப்படுகின்றன. கழுத்து, தொண்டை, வயிறு மற்றும் தலை ஆகியவை சாம்பல் நிறத்தில் உள்ளன. ஆண் தலையின் மேற்புறத்தில் ஒரு சிறிய சிவப்பு தொப்பி போன்று காணப்படும். பெண் மற்றும் குஞ்சுகள் ஒரே மாதிரிக் காணப்படும். ஆனால் இவற்றுக்குத் தலைப்பகுதியில் சிவப்பு பகுதி இல்லை. பறக்கும் போது வெள்ளை இறக்கை திட்டுகள் காணப்படும் அடர் வாலின் மையப்பகுதி வெள்ளைக் கம்பிகளைக் கொண்டுள்ளது. இப்பறவைகள் 8-10 அங்குலம் நீளமுடையன.

இந்த மரங்கொத்தியின் குரல் உருளும் சூர் ஒலியுடன் கூடியது.

பரவல்

தொகு

இந்த மரங்கொத்தியின் வாழிடம் சோனோரன் பாலைவனத்தில் காணப்படும் பாலைவனப் புதர் ஆகும்[3]

நடத்தையும் சூழலியலுல்

தொகு

இனப்பெருக்கம்

தொகு

இவை சாகுவாரோ கற்றாழை அல்லது மெசுகைட் மரங்களில் துளை போன்ற கூடுகளை உருவாக்குகின்றன.[4] சாகுவாரோ கற்றாழையில் ("பூட்" என்று அழைக்கப்படும்) இந்த மரங்கொத்திகளால் தோண்டியெடுக்கப்பட்ட குழிகளை எல்ப் ஆந்தை உட்படப் பல்வேறு பிற சிற்றினங்களால் பயன்படுத்தப்படுகின்றன.[5][6] இவை இக்கூடுகளில் பொதுவாக 3 முதல் 4 வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன. இருப்பினும் இவை 6 அல்லது 7 வரை இடக்கூடியன.[7][8] வருடத்திற்கு 2 முதல் 3 முறை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் பெண் இரு பறவைகளும் முட்டையினை அடைகாப்பதோடு குஞ்சுகளுக்கு உணவும் அளிக்கின்றன.[7]

உணவு வழங்குதல்

தொகு

பிற மரங்கொத்தி, போன்று இதன் உணவு பூச்சிகளால் ஆனது. இது பட்டையில் துளையிடுவதன் மூலம் பெறப்படுகிறது.[8] கிலா மரங்கொத்திகள் அனைத்துண்ணி வகையின. இவை பழங்கள், தேன், விதைகள், பல்லிகள், முட்டைகள், புழுக்கள் ஆகும். இவை சிறிய பறவைகளின் இளம் குஞ்சுகளைக் கூட உட்கொள்கின்றன.[7]"Gila Woodpecker". </ref> இவை மனிதர்களால் பாடும் பறவைகளுக்கு வைக்கப்படும் உணவினையும், தேனை உறிஞ்சுவதாகவும் அறியப்படுகிறது.[5]

நிலை

தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இந்த இனம் குறைந்த அக்கறை கொண்ட இனமாக மதிப்பிடுகிறது.[9] இது கலிபோர்னியாவில் அருகிய இனமாகும். இங்கு இதன் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. அரிசோனாவில் இதன் எண்ணிக்கை வலுவாக உள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக இதனுடைய வாழ்விடங்களைக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.[10]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Melanerpes uropygialis". IUCN Red List of Threatened Species 2016: e.T22680853A92882402. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680853A92882402.en. https://www.iucnredlist.org/species/22680853/92882402. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Robbins, C.S., Bruun, B., Zim, H.S.; Birds of North America. New York: Western Publishing Company, Inc. (1966).
  3. "Gila Woodpecker Overview, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  4. Bird tracks and sign.
  5. 5.0 5.1 "Gila Woodpecker Fact Sheet". www.desertmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
  6. "Gila Woodpecker". Nature Conservancy. Archived from the original on 2016-12-15. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28. Although they do not use them immediately, waiting first for the sap to harden, Gila Woodpeckers excavate cavities in cacti and trees as nesting sites.
  7. 7.0 7.1 7.2 "Gila Woodpecker". Audubon (in ஆங்கிலம்). 2014-11-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
  8. 8.0 8.1 "Gila Woodpecker Life History, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
  9. "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
  10. "Gila Woodpecker". The Audubon Birds & Climate Change Report (in ஆங்கிலம்). 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலா_மரங்கொத்தி&oldid=3934455" இலிருந்து மீள்விக்கப்பட்டது