கீதா இளங்கோவன்

இந்திய ஊரகவியலாளர், திரைப்பட படைப்பாளி

கீதா இளங்கோவன் ( Geeta Ilangovan ) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ஆவார். கீதா இளங்கோவன் சமூக மற்றும் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளை கையாளும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்பட திரைப்படங்களை உருவாக்குவதிலும் நூல்களை எழுதுவதிலும் ஈடுபடும் ஒரு படைப்பாளி ஆவார்.

கீதா இளங்கோவன்
கீதா இளங்கோவன்
பிறப்புசனவரி 1, 1971 (1971-01-01) (அகவை 53)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
தொழில்ஆவணப்பட இயக்குநர்
மொழிதமிழ்
தேசியம்இந்தியர்
வகைஅபுனைவு

கல்வி

தொகு

கீதா இளங்கோவன் இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கோயம்புத்தூர் பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து அறிவியலில் பட்டம் பெற்றார். அங்கு இவர் தன் வருங்கால கணவரை சந்தித்தார். [1] பின்னர் இவர் தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலை பட்டப் படிப்பில் இணைந்தார். [1]

பின்னர் கீதா இளங்கோவன் இ. கு. ப. தே நடத்திய இந்திய தகவல் சேவை தேர்வுக்கு பத்திரிகை முதுகலை பட்டதாரிக்கான பணிக்கு விண்ணப்பித்தார். 1998 இல், அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். [1] சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ஒன்றிய பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தில் ஊடகத் தகவல் அலுவலராகப் பணியாற்றுகிறார்.

தொழில்

தொகு

திரைப்பட உருவாக்கம்

தொகு

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய கீதா இளங்கோவனின் முதல் குறும்படமான 'லிட்டில் ஸ்பேஸ்' (2007) எஸ். சி. ஏ. ஆர். எப் இந்தியா விருதைப் பெற்றது. [1] [2] 2014 இல், சென்னை மகளிர் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டாவது சிறந்த ஆவணப்படமாக தேர்வு ஆனது. [3] கீதா இளங்கோவனின் 2010 ஆம் ஆண்டைய திரைப்படமான அஃறிணைகள் (2010) படமானது கண்ணியமான வேலைவாய்ப்பைப் பெற திருநங்கைகள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி கூறுவதாக இருந்தது. [1] இவர் 2018 ஆம் ஆண்டில், மாதவிடாய் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சினைகள் மற்றும் சாதி பாகுபாடுகள் தொடர்பாக குழந்தைகளுக்கான மூன்று உரையாடல் திரைப்படங்களை உருவாக்கினார். [4] 2012 இல் “மாதவிடாய்’’ என்ற ஆவணப் படத்தை உருவாக்கினார். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. 2014 இல் “நம்பிக்கை மனுஷிகள்’’ என்ற குறும்படத்தை முகநூலில் வெளியிட்டார். இது தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரு சகோதரிகளின் தன்னம்பிக்கை மிக்க நிறைந்த வாழ்வையும், நோயினால் சோர்ந்து போகாமல் தங்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்து உதவும் அவர்களின் வாழ்வை விளக்குவதாக இருந்தது.[5]

எழுத்தாக்கங்கள்

தொகு

இளங்கோவன் முதன்மையாக புனைகதை அல்லாதவற்றை எழுதுகிறார். பெண் ஊராட்சித் தலைவர்கள் பற்றி இவர் எழுதி தமிழ் இதழான அவள் விகடனில் வெளியான கட்டுரை 2005 இல் பஞ்சாயத்து ராஜ் ( இந்தியாவில் இருந்து பசி திட்டம் ) பெண்களின் சிறந்த அறிக்கைக்காக சரோஜினி நாயுடு விருதையும் ரூ . 200,000 ரொக்கப் பரிசையும் பெற்றது [6] இவரது கட்டுரைகள் "துப்பட்டா போடுங்க தோழி" என்ற பெயரில் இயர் ஸ்டோரிஸ் பப்பிகேசன்ஸ் ( Her stories Publication ) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Spreading positive vibes". The New Indian Express (Chennai). 2010-11-15. https://www.newindianexpress.com/education/edex/2010/nov/15/spreading-positive-vibes-203029.html. "Spreading positive vibes". The New Indian Express. Chennai. 2010-11-15.
  2. Trackitteam, Web (March 10, 2023). "THE MEDIA FOR MENTAL HEALTH AWARD | Scarf India".
  3. "Chennai women's International film festival". The Times of India. 2014-05-22.
  4. "NIS celebrated International Women's Day on 8th March 2022". National Institute of Siddha. 9 March 2022.
  5. "இந்த வார வல்லமையாளர்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-11-24. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  6. "Three journalists selected for Sarojini Naidu award". Zee News (in ஆங்கிலம்). 13 September 2005.
  7. Henry, Nikhila (16 March 2023). "Off With the Dupattas: Why TN Tribal Students Discarded Scarves To Beat Sexism". TheQuint (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_இளங்கோவன்&oldid=4108392" இலிருந்து மீள்விக்கப்பட்டது