கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் (பிறப்பு;18 பிப்ரவரி 1992) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர்தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.

கீர்த்தி பாண்டியன்
2019 ம் ஆண்டில் தும்பா பட பத்திரிகையாளர் சந்திப்பில் கீர்த்தி பாண்டியன்
பிறப்பு18 February 1992 (1992-02-18) (வயது 32)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்செட்டிநாடு வித்யாஷ்ரம்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019ம் ஆண்டு முதல்
உறவினர்கள்கவிதா பாண்டியன் (சகோதரி)
கிரணா பாண்டியன் (சகோதரி)
ரம்யா பாண்டியன் (பெரியப்பா மகள்)

2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தில் அறிமுகமான இவர் இயக்குனர் கோகுல் இயக்கிய தப்பிப்பிழைக்கும் வகை திரைப்படமான அன்பிற்கினியாளில் (2021) முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியானபாராட்டைப் பெற்றுள்ளார். கீர்த்தி பாண்டியன் தும்பாவில் முன்னணி நடிகையாக நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கீர்த்தி பாண்டியன், 18 பிப்ரவரி 1992 அன்று சென்னையில் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்துள்ளார்.[1] இவருக்கு கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்,[2] இவரது பெரியப்பா மகளான (அக்கா) ரம்யா பாண்டியனும், தமிழ் நடிகையே.[3] கீர்த்தி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படித்துள்ளார்.[1]

திரைவாழ்க்கை தொகு

2015–2018 தொகு

பட்டம் பெற்ற பிறகு, பாண்டியன் பாலே மற்றும் சல்சா வகை நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார், பின்னர் 2015 ம் ஆண்டு நாடக நடிப்புக்கு மாறினார். இவரது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏ&பி குரூப்ஸின் தலைமை இயக்குனராகவும் இருந்த அதே நேரத்தில் சிங்கப்பூரில் இவரது சொந்த விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.[4][5][6] இவரின் நிறம் மற்றும் வயதிற்கேற்ற எடை இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் பல்வேறு இயக்குநர்களால், நிராகரிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை பிடிக்காமல் இவரும் பல படங்களை நிராகரித்துள்ளார்.[7][8][9][10][11][12]

2019–தற்போது தொகு

கீர்த்தியை இயக்குனர் ஹரிஷ் ராம் அணுகி, தும்பா (2019) படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்து அதன்படி, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.[13][14][15] மலையாளத் திரைப்படமான ஹெலனின் (2019) தமிழ் பதிப்பான அன்பிற்கினியாள் (2021) என்ற படத்தில் தனது தந்தையுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[16][17][18] அதைத்தொடர்ந்து ZEE5 இணையதளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற நகைச்சுவை இணையத் தொடரிலும் நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து நடித்துள்ளார்.[19] கொஞ்சம் பேசினால் என்ன மற்றும் கண்ணகி ஆகியவை கீர்த்தியின் வரவிருக்கும் படங்களில் அடங்கும்.[20][21]

திரைப்படவியல் தொகு

திரைப்படங்கள் தொகு

முக்கிய குறிப்பு
  இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் பங்கு
2019 தும்பா வர்ஷா குமரன்
2021 அன்பிற்கினியாள் அன்பிற்கினியாள் சிவம் (அன்பு)
கொஞ்சம் பேசினால் என்ன சஞ்சனா
கண்ணகி அறிவிக்கப்படும்

தொலைக்காட்சி தொகு

ஆண்டு திரைப்படம் பங்கு ஸ்ட்ரீமிங் சேனல்
2019 தபால்காரர் ராகினி ZEE5

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஆண்டு விருது வகை திரைப்படம் விளைவாக பங்கு
2019 ஃபெமினா விருதுகள் ஃபெமினா சூப்பர் மகள் தும்பா வெற்றி வர்ஷா [22]
2021 ஜீ சினி விருதுகள் தமிழ் சிறந்த பெண் அறிமுகம் பரிந்துரை
விகடன் விருதுகள்
எடிசன் விருதுகள் தமிழ்
2022 SIIMA சிறந்த நடிகைக்கான தமிழ் விருது அன்பிற்கினியாள் பரிந்துரை அன்பிற்கினியாள் சிவம் (அன்பு)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Actress Keerthi Pandian". Nettv4u. Archived from the original on 10 September 2021. பார்க்கப்பட்ட நாள் 10 September 2021.
  2. "Helen Tamil remake titled Anbirkiniyal". சினிமா எக்ஸ்பிரஸ். 15 February 2021. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  3. "Bigg Boss Tamil 4 contestant Ramya Pandian's profile, photos and everything you need to know". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 October 2020. Archived from the original on 22 December 2020. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  4. "Keerthi Pandian On Why It's Important To Understand The Business Of Films". Film Companion. 2 March 2021. Archived from the original on 4 April 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  5. "On Stage". Keerthi Pandian. Archived from the original on 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  6. "A&P Groups". IndiaMART. Archived from the original on 15 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  7. "Keerthi Pandian gets emotional on stage, reveals being body shamed!". சினிமா எக்ஸ்பிரஸ். 18 June 2019. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  8. Balachandran, Logesh (18 August 2021). "People are more accepting of dark skin tones now: Keerthi Pandian". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 September 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.
  9. "Keerthi Pandian reveals that she was body shamed by directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 June 2019. Archived from the original on 8 September 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.
  10. "I will outshine as a performer, not just as heroine: Keerthi Pandian". News Today. 19 February 2019. Archived from the original on 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  11. "Another dad-daughter duo to hit the silver screen". தி டெக்கன் குரோனிக்கள். 9 February 2020. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  12. "Humans are the worst creatures on the planet: Keerthi Pandian". சினிமா எக்ஸ்பிரஸ். 23 June 2019. Archived from the original on 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  13. "Keerthi Pandian debuts in fantasy adventure". தி டெக்கன் குரோனிக்கள். 23 June 2019. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  14. S, Srivatsan (20 February 2019). "'Thumbaa' was an instinctive yes, says Keerthi Pandian". தி இந்து. Archived from the original on 8 September 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.
  15. "Arun Pandian's daughter Keerthi makes her film debut". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 February 2019. Archived from the original on 8 September 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.
  16. "Keerthi Pandian signs her second film in Tamil". DT Next. 8 February 2020. Archived from the original on 4 April 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.
  17. "Arun Pandian and daughter Keerthi's film titled Anbirkiniyal". DT Next. 16 February 2021. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  18. "5 fantastic thrillers from South India that you can binge watch". Telangana Today. 16 July 2021. Archived from the original on 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
  19. "Web series 'Postman' delivers promising entertainment". Daily News and Analysis. 26 June 2019. Archived from the original on 10 September 2021. பார்க்கப்பட்ட நாள் 10 September 2021.
  20. "First look of Keerthi Pandian's 'Kannagi' out". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 August 2021. Archived from the original on 8 September 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.
  21. "First look of Vinoth Kishan & Keerthi Pandian film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  22. "Femina Super Daughter Awards 2019 recognizes and honors prominent parent-daughter duos". moviegalleri.net. 27 November 2019. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_பாண்டியன்&oldid=3789724" இலிருந்து மீள்விக்கப்பட்டது