கீலான் மாகாணம்
கிலான் மாகாணம் (Gilan Province (Persian: اُستان گیلان, Ostān-e Gīlān, also Latinized as Guilan)[10] என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இது காசுப்பியன் கடல் ஓரமாக, ஈரானின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ளது. இது மஜன்தரன் மாகாணத்திற்கு மேற்காகவும், அர்தாபில் மாகாணத்தின் கிழக்கிலும், சஞ்சன் மாகாணம் மற்றும் கஜின் மாகாணங்களுக்கு வடக்கிலும் உள்ளது.[11] இதன் வடக்கில் அஜர்பைஜான் குடியரசையும், காசுபியன் கடல் பகுதியில் உருசியாவையும் எல்லையாக கொண்டுள்ளது.
கிலான் மாகாணம் Gilan Province اُستان گیلان | |
---|---|
மாகாணம் | |
![]() | |
![]() கிலான் மாகாண மாவட்டங்கள் | |
![]() ஈரானில் கிலான் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 37°16′39″N 49°35′20″E / 37.2774°N 49.5890°Eஆள்கூறுகள்: 37°16′39″N 49°35′20″E / 37.2774°N 49.5890°E | |
நாடு | ![]() |
வட்டாரம் | மூன்றாம் வட்டாரம் |
தலைநகரம் | இராசுத்து |
மாவட்டங்கள் | 16 |
அரசு | |
• ஆளுநர் | முஸ்தபா சலாரி.[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,042 km2 (5,422 sq mi) |
மக்கள்தொகை (2016)[2] | |
• மொத்தம் | 25,30,696 |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
நேர வலயம் | IRST (ஒசநே+03:30) |
• கோடை (பசேநே) | IRST (ஒசநே+04:30) |
முதன்மை மொழிகள் | கிலாக்கி தாலீஷ் |
பிற மொழிகள் | பாரசீகம்[3] குர்தி |
இந்த மாகாணத்தின் வட பகுதியானது தெற்கு (ஈரானிய) தாலீசின் ஒரு பகுதி பகுதியாகும். மாகாணத்தின் மையத்தில் அதன் முதன்மை நகரான ராஷ்ட் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தில் அஸ்தாரா, அஸ்தானே-இ அஷ்பிரிய்யா, புமன், லஹிஜான், லாங்ரூட், மாசூல், மஞ்சுல், ருட்கர், ருட்ஸர், ஷாஃப்ட், ஹாஷ்ட்பார் (நகரம்), சோம்மே சாரா ஆகிய பிற நகரங்கள் உள்ளன.
இதன் பிரதான துறைமுகமாக பந்தர்-இ அன்சாலி (முன்பு பண்டார்-இ பாஹ்லவி) துறைமுகம் உள்ளது.
புவியியலும் காலநிலையும்தொகு
கிலான் மாகாணமானது ஈரப்பத வெப்பமண்டல கால நிலையை உடையது. இது ஈரானில் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதியாகும். தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் 1,900 மில்லி மீட்டர் (75 அங்குலம்) வரையில் கூட அதிகமான மழைப்பொழிவு இருக்கும். என்றாலும் பொதுவான மழையளவு கிட்டத்தட்ட 1,400 மில்லி மீட்டர் (55 அங்குலம்) ஆகும். மாகாணத்தின் தலைநகராக ராஷ் நகரம் உள்ளது. இந்த நகரமானது சர்வதேச அளவில் "வெள்ளி மழை நகரம்" என்றும், ஈரானில் "மழை நகரம்" எனவும் அறியப்படுகிறது.
இங்கு செப்டம்பர் மற்றும் திசம்பர் மாதங்களுக்கு இடையே மிகக் கடுமையான மழைப்பொழிவு இருக்கும். ஏனெனில் அச்சமயத்தில் சைபீரிய உயர்நில கடல் காற்று வலுவாக வீசுவதே காரணமாகும். ஆனால் ஏப்ரல் முதல் சூலை வரை குறைந்த அளவு மழை இருந்தாலும் ஆண்டு முழுவதும் மழை பொழிகிறது. கடலோர சமவெளிகளில் சதுப்பு தன்மை காரணமாக மிக அதிகமான ஈரப்பதம் நிலவுகிறது.
இங்கு கடலோரத்தில் வீசும் குளிர்ந்த காறாறானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை பெரும் எண்ணிக்கையில் கவர்கிறது. மாகாணத்தின் பெரும் பகுதியானது மலைப் பகுதியாகவும், பசுமையான காடுகளைக் கொண்டதாக உள்ளது. காஸ்பியன் கடற்கரையை ஒட்டியுள்ள கடலோர சமவெளிப் பகுதியானது முக்கியமாக நெல் பயிரிடப் பயன்படுகிறது. இங்கு உள்ள விவசாயிகளால் கெர்டே, ஹஷெமி, ஹசானி, கரிப் போன்ற பலவகை நெல் வகைகள் தொடர்ந்து விளைவிக்கப்படுகிறது.[12]
மாகாணத்தின் பெரும்பகுதியில் 1990 மே மாதம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டது. இதில் சுமார் 45,000 பேர் இறந்தனர். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஈரானிய திரைப்பட இயக்குநரான அப்பாஸ் கியரோஸ்தமி தனது திரைப்படங்களான லைஃப் அண்ட் நத்திங் மோர் ... மற்றும் தி ஆலிவ் ட்ரீஸ் ஆகிய படங்களை உருவாக்கினார்.
மக்கள்வகைப்பாடுதொகு
கிலான் மாகாணத்தில் பெரும்பான்மையினராக கிலாக் மற்றும் தலேஷ் மக்கள் உள்ளனர். சிறுபான்மையினராக அஜர்பைஜான்கள் மக்கள் உள்ளனர். மற்றும் சிறிய குழுக்களாக ஜோர்ஜியர்கள், ஆர்மீனியர்கள், சர்கேசியர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஆவர்.
மாகாணத்தில் கிலான் - கிலாக்கி மொழி, தலேஷி மொழி, பாரசீக மொழி, சிறிய அளவில், டாடி மொழி மற்றும் குர்தி மொழி ஆகிய ஐந்து ஈரானிய மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளில் (பாரசீக மொழி தவிர்த்து) ஏனைய மொழிகள் ஈரானிய வடமேற்கு கிளை மொழிகள் ஆகும். மேலும் ஈரானிய மொழிகளைச் சேராதவைகளில் முதன்மையாக அசர்பைஜான் மொழி, சியார்சிய மொழி, அருமேனிய மொழி, செர்கேசியன் மொழி, மற்றும் சில ஜிப்சி மொழிகள் (ரோமானியம்) போன்ற மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. மூன்று மில்லியன் மக்கள் கிலாக்கி மொழியை முதலாவது அல்லது இரண்டாவது மொழியாகப் பேசுகின்றனர்.
ஆண்டு |
1996 | 2006 | 2011[13] |
---|---|---|---|
தோராயமான மக்கள் தொகை | 2,241,896 | 2,404,861 | 2,480,874 |
மேற்கோள்கள்தொகு
- ↑ astankhabar பரணிடப்பட்டது 2018-08-28 at the வந்தவழி இயந்திரம்,.
- ↑ Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது 31 மே 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Guilan Government Province website பரணிடப்பட்டது 11 திசம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ library Great Encyclopedia of Islam – Astara
- ↑ Encyclopædia Iranica:Manjil பரணிடப்பட்டது 17 மே 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Archived copy". 20 மார்ச்சு 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 மார்ச்சு 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "Archived copy". 3 திசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 ஆகத்து 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "HugeDomains.com - TalesHan.com is for sale (Tales Han)". www.taleshan.com. 24 செப்டெம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Archived copy". 21 சூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 ஆகத்து 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ [1] பரணிடப்பட்டது 17 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம் University of Guilán
- ↑ "همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 (1 Tir 1393, Jalaali). Archived from the original on 23 June 2014. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces.
- ↑ Pazuki, Arman; Sohani, Mehdi (2013). "Phenotypic evaluation of scutellum-derived calluses in ‘Indica’ rice cultivars" (PDF). Acta Agriculturae Slovenica 101 (2): 239–247. doi:10.2478/acas-2013-0020. Archived from the original on 28 February 2014. http://archive.wikiwix.com/cache/20140228144011/http://aas.bf.uni-lj.si/september2013/08Pazuki.pdf. பார்த்த நாள்: February 2, 2014.
- ↑ "IRAN: Gilan". 21 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.