கீழ்வெண்மணிப் படுகொலைகள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வாகும். இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[1][2]
வரலாறு
தஞ்சாவூர் மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து, விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலைத் தருபவை ஆக இருந்தன. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிகக் குறைந்த ஊதியம் மிகக் குறைந்த வேளை உணவு வழங்கப்பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வாழ்க்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நல்ல வாழ்க்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும், அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் அவர்களை பணி அமர்த்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960 ஆம் ஆண்டு இந்திய - சீனா போரால், எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களைப் பெரிதும் வாட்டியது.
தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன.[3] கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும், பி. சீனிவாசராவ்வும் சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். இதனை ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.[3]
1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகளும் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.[4] அங்கு உள்ள நினைவகத்தில் ஒரு கண்ணாடி குடுவையில், அச்சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் அஸ்தி, சம்பவம் நடந்த சில நாட்கள் பிறகு சுதந்திர போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களின் பெயர் மற்றும் வயது விபரம்
1 | தாமோதரன் (1) | 12 | ஆசைத்தம்பி (10) | 23 | ராஞ்சியம்மாள் (16) | 34 | பாப்பா (35) |
2 | குணசேகரன் (1) | 13 | ஜெயம் (10) | 24 | ஆண்டாள் (20) | 35 | ரத்தினம் (35) |
3 | செல்வி (3) | 14 | ஜோதி (10) | 25 | கனகம்மாள் (25) | 36 | கருப்பாயி (35) |
4 | வாசுகி (3) | 15 | நடராஜன் (10) | 26 | மாதாம்பாள் (25) | 37 | முருகன் (40) |
5 | ராணி (4) | 16 | வேதவள்ளி (10) | 27 | வீரம்மாள் (25) | 38 | சீனிவாசன் (40) |
6 | நடராஜன் (5) | 17 | கருணாநிதி (12) | 28 | சேது (26) | 39 | அஞ்சலை (45) |
7 | தங்கையன் (5) | 18 | சந்திரா (12) | 29 | சின்னப்பிள்ளை (28) | 40 | சுந்தரம் (45) |
8 | வாசுகி (5) | 19 | சரோஜா (12) | 30 | ஆச்சியம்மாள் (30) | 41 | பட்டு (46) |
9 | ஜெயம் (6) | 20 | சண்முகம் (13) | 31 | குஞ்சம்பாள் (35) | 42 | கருப்பாயி (50) |
10 | நடராஜன் (6) | 21 | குருசாமி (15) | 32 | குப்பம்மாள் (35) | 43 | காவேரி (50) |
11 | ராஜேந்திரன் (7) | 22 | பூமயில் (16) | 33 | பாக்கியம் (35) | 44 | சுப்பன் (70) |
இந்தச் சம்பவத்தால் 106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று 1973, ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
பரவலர் பண்பாட்டில்
- இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல் என்ற புதினத்தை எழுதி 1975 ஆண்டு வெளியிட்டார். இந்த புதினத்தை அடிப்படையாக கொண்டு கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டது.
- இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு சோலை சுந்தரபெருமாள் செந்நெல் என்ற புதினத்தை எழுதியுள்ளார்.
- இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ராமையாவின் குடிசை என்னும் ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்து உள்ளது.[5] ஒரு மணிநேரம் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் அவர்கள் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) செய்தி இதழ் செய்தி வெளியிட்டது.
- கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' என்ற தமிழ்த் திரைப்படத்தில், கீழ்வெண்மணி நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில் காட்சியமைக்கப்பட்டிருந்தது.[6]
படக்காட்சியகம்
-
கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சின்னம்
-
கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம், திறப்பு விழா 2014
மேற்கோள்கள்
- ↑ உழைக்கும் மக்களை ஒடுக்க நினைத்த கீழ் வெண்மணி படுகொலைகள்
- ↑ கீழவெண்மணி... தமிழகத்தை உலுக்கிய 'ரத்த சரித்திரம்
- ↑ 3.0 3.1 ஜி.ராமகிருஷ்ணன் (25 டிசம்பர் 2013). "வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்!". தீக்கதிர்: pp. 4.
- ↑ "வெண்மணியில் வெந்து மடிந்த நம் கண்மணிகள்". தீக்கதிர்: pp. 4. 9 மார்ச் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 11 மார்ச் 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-18. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.
- ↑ "Is Dhanush-starrer 'Asuran' based on the 1968 Kilvenmani massacre in Tamil Nadu? Find Out - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
வெளி இணைப்புகள்
- பாரதி கிருஷ்ணகுமார் முழு உரை - கீழ்வெண்மணி படுகொலையின் 50வது நினைவேந்தல் - காணொளி
- தோழர் தியாகு உரை - கீழ்வெண்மணிப் படுகொலை நினைவு கருத்தரங்கம்- காணொளி
- VENMANI MARTYRS’ DAY OBSERVED பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்
- நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு
- 'ராமய்யாவின் குடிசை' வெளியீட்டு விழா
- தமிழகத்தில் தலித்துகளின் நிலை
- Keezhavenmani revisited, S. VISWANATHAN
- கீழவெண்மணி படுகொலை – ஆவணப்படம் பரணிடப்பட்டது 2010-12-27 at the வந்தவழி இயந்திரம்
- கீழ்வெண்மணி தீர்ப்பை மாற்றுமா நீதிமன்றம்?
- அமைவிடம்