கீழ்குந்தா


கீழ்குந்தா, (Kilkundha), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 26 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு குந்தா நீர்மின்னாக்கத் திட்டம் செயல்படுகிறது.[3]

கீழ்குந்தா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் குந்தா
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 8,886 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/kilkundah

அமைவிடம்தொகு

கீழ்குந்தா, உதககமண்டலத்திலிருந்து 33 கீமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேல் குந்தா ஊராட்சி 5 கிமீ; பிக்கெட்டி 6 கிமீ; பாலகோலா ஊராட்சி 20 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

24.21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,636 வீடுகளும், 8886 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. குந்தா நீரேற்று புனல்மின் உற்பத்தி திட்டம்
  4. கீழ்குந்தா பேரூராட்சியின் இணையதளம்
  5. Kilkunda Town Panchayat Population Census 2011
  6. http://www.townpanchayat.in/kilkundah/population
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்குந்தா&oldid=2726912" இருந்து மீள்விக்கப்பட்டது