குஞ்செராப் கணவாய்
குஞ்செராப் கணவாய் ( Khunjerab Pass ) என்பது காரகோரம் மலைகளில் 4,693 மீட்டர் உயரமுள்ள (15,397 அடி) மலைப்பாதையாகும். பாக்கித்தானின் வடக்கு எல்லையில் (கில்கித்-பால்டிஸ்தானின் ஹன்சா மற்றும் நகர் மாவட்டங்கள்) மற்றும் சீனாவின் தென்மேற்கு எல்லையில் (சிஞ்சியாங்) ஒரு மூலோபாய நிலையில் இக் கணவாய் உள்ளது. முச்சிலிகா கணவாய் என்பது குஞ்சேரப் கணவாய்க்கு அருகில் 36.97374°N 75.2973°E இல் 5,314-மீட்டர் உயரம் (17,434 அடி) அமைந்துள்ள மற்றொரு மலைப்பாதையாகும்.
குஞ்செராப் கணவாய் | |
---|---|
குஞ்செராப் கணவாய் | |
ஏற்றம் | 4,693 மீ (15,397 அடி)காரகோரம் நெடுஞ்சாலை |
அமைவிடம் | ஹன்சா பாக்கித்தான் - வடக்கு நிலங்கள் / சிஞ்சியாங், சீனா |
மலைத் தொடர் | காரகோரம் |
ஆள்கூறுகள் | 36°51′00″N 75°25′42″E / 36.85°N 75.4283°E |
சொற்பிறப்பியல்
தொகுஇதன் பெயர் உள்ளூர் வாகி மொழியின் இரண்டு வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது: "குன்" என்றால் இரத்தம் மற்றும் "செராப்" என்றால் ஊற்று அல்லது அருவியிலிருந்து வரும் சிற்றோடை எனப் பொருள்.
குறிப்பிடத்தக்கமை
தொகுகுஞ்செராப் கணவாய் சர்வதேச எல்லைக் கடக்கும் உலகின் மிக உயரமான நடைபாதையும் காரகோரம் நெடுஞ்சாலைலையில் உள்ள மிக உயரமான இடமுமாகும். கணவாயின் குறுக்கே சாலை அமைக்கும் பணி 1982 இல் நிறைவடைந்தது. [1] நீளமான, ஒப்பீட்டளவில் தட்டையான பாதையானது குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும் [2] [3] காரணத்தால் பொதுவாக கனரக வாகனங்கள் நவம்பர் 30 முதல் மே 1 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பின்னர் அனைத்து வாகனங்களுக்கும் திசம்பர் 30 முதல் ஏப்ரல் 1 வரை சாலை மூடப்படும். புனரமைக்கப்பட்ட காரகோரம் நெடுஞ்சாலை குஞ்செராப் கணவாய் வழியாக செல்கிறது.
சூன் 1, 2006 முதல், கில்கித்திலிருந்து கஷ்கர், சின்சியாங்கிற்கு தினசரி பேருந்து சேவை உள்ளது. [4]
உலகின் மிக உயரமான பணம் எடுக்கும் இயந்திரம்
தொகுபாக்கித்தான் குதியில் உலகின் மிக உயரமான பணம் எடுக்கும் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளாது. இது பாக்கித்தானின் தேசிய வங்கி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. [5]
2007 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் நிர்வாகத்தில் உள்ள கில்கித்-பால்டிஸ்தானில் சீனாவை போக்குவரத்துடன் இணைக்க இந்க் கணவாய் வழியாக ஒரு தொடருந்துப் பாதை அமைப்பதை மதிப்பீடு செய்ய ஆலோசகர்கள் [6] பணியமர்த்தப்பட்டனர். நவம்பர் 2009 இல் 750 கிமீ நீளமுள்ள அவேலியன் பகுதியை (466 மைல்) இணைக்கும் ஒரு பாதை அமைப்பதற்கான ஆய்வு தொடங்கியது.[7] இருப்பினும், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
புகைப்படங்கள்
தொகு-
குஞ்செராப் கணவாய், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கடவு
-
குஞ்செராப் கணவாய் சாலை
-
குஞ்செராப் கணவாயில் சீன மற்றும் பாக்கித்தான் வீரர்கள்
-
எல்லைக்கு அருகில் சீனா-பாக்கித்தான் நட்பு நினைவுச்சின்னம்
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 刘欣 (2013-05-03). "重寻玄奘之路" [Rediscover the path taken by Xuanzang] (in சீனம்). 东方早报. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
1966年,时任新疆军区副司令员的张希钦在主持修筑中巴公路时,为避敌国空袭,放弃了巴方主张的走宽阔的明铁盖达坂的方案,而取道地势高峻的红其拉甫山口。
- ↑ "Snowfall at Khunjerab Pass, Gilgit-Baltistan - Travel and Tourism". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-06-11.
- ↑ "Khunjerab Pass". www.dangerousroads.org. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.
- ↑ Road widening work has begun on 600 km (370 mi) of the highway.
- ↑ World's Highest ATM Atlas Obscura (www.atlasobscura.com). Retrieved on 2019-07-26.
- ↑ Online Asia Times South Asia Feb 24, 2007. "China-Pakistan rail link on horizon." Syed Fazl-e-Haider.
- ↑ "Maps, Weather, Videos, and Airports for Kashi, China".
மேலும் சில ஆதாரங்கள்
தொகு- Curzon, George Nathaniel. 1896. The Pamirs and the Source of the Oxus. Royal Geographical Society, London. Reprint: Elibron Classics Series, Adamant Media Corporation. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-5983-8 (pbk); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-3090-2 (hbk).
- King, John 1989. Karakoram Highway : the high road to China. Hawthorn, Victoria, Lonely Planet Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86442-065-X
- Episode 13/30 of the NHK television series The Silk Road, a series originally shown in Japan in the early 1980s.