குடற்காய்ச்சல்

(குடற் காய்ச்சல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டைஃபாய்டு காய்ச்சல் என்பது, சால்மோனெல்லா டைஃபி அல்லது பொதுவாக குடற்காய்ச்சல் [1] என்று அழைக்கப்படும் ஒரு வகையான நோய் ஆகும். உலகம் முழுவதும் பொதுவாக, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் மலத்தினால் அசுத்தமாக்கப்பட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுவதால் இது பரவுகின்றது.[2] பின்னர், இந்த நுண்ணுயிரி (பாக்டீரியா) கிருமி, குடல் சுவரைத் துளைத்து நுழைந்து இரத்த விழுங்கணுக்களினால் விழுங்கப்படுகிறது. சால்மோனெல்லா டைஃபி, இன்னும் சரியாக சால்மோனெல்லா என்டெரிக்கா என்டெரிக்கா டைஃபி, இதற்குப் பிறகு அழிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில் தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு விழுங்கணுக்களில் தங்குவதற்கு ஏற்றால் போல மாறிவிடுகிறது. இதனால் அவை காம்ப்ளமெண்ட் மற்றும் நோயெதிர்ப்பு பதிலளிப்பு, பிஎம்என், ஆகியவற்றால் அழிக்க முடியாத அளவிற்குத் தடுப்பாற்றல் கொண்டதாக ஆகிவிடுகிறது. விழுங்கணுக்களினுள் இருக்கும் போது நிணநீர்ச்சுரப்பி கணுக்கள் மூலமாக கிருமி பரவத் தொடங்குகிறது. இதன் மூலம் அவற்றிற்கு நுண்வலையக தோலிய மண்டலம் (ரெடிகுலோஎண்டோதிலியல்) மற்றும் உடம்பின் மற்ற பல பாகங்களைச் சென்றடைய வழி கிடைக்கிறது. இந்த உயிரினம் அதனுடைய புறச்சுற்று இழைகளால் நகரக்கூடியதாக இருந்து ஒரு கிராம்-எதிர்மறை சிறிய கோலுருக்கிருமியாக இருக்கிறது. இந்த நுண்ணுயிரி37 °C (99 °F) மனித உடல் வெப்பநிலையில் சிறந்து வளர்கிறது.

Typhoid Fever
Rose spots on the chest of a patient with typhoid fever due to the bacterium Salmonella Typhi
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A01.0
ஐ.சி.டி.-9002
நோய்களின் தரவுத்தளம்27829
ஈமெடிசின்oph/686 med/2331
ம.பா.தD014435

அறிகுறிகள்

தொகு
 
குடற்காய்ச்சல் நிகழ்வு♦ தீவிரமாக பரவக்கூடிய ♦ நோய்ப்பரப்பு அதிகமான ♦ ஆங்காங்கே காணப்படும் நிகழ்வுகள்

குடற்காய்ச்சல் இருந்தால், மெதுவாக அதிகரிக்கும் காய்ச்சல்40 °C (104 °F), அதிகப்படியாக வியர்த்தல், இரைப்பை குடலழற்சி மற்றும் இரத்தம் வராத வயிற்றுப்போக்கு ஆகியவை காணப்படும். சில நேரங்களில் தட்டையான இளஞ்சிவப்பு நிறப் புள்ளிகள் கொண்ட படைகள் காணப்படலாம்.[3]

பொதுவாக, சிகிச்சை அளிக்கப்படாத குடற்காய்ச்சலின் போக்கு, ஒவ்வொன்றும் சுமார் ஒரு வாரம் நீடிக்கக் கூடிய நான்கு தனிப்பட்ட நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. முதல் வாரத்தில் மெதுவாக அதிகமாகும் காய்ச்சலோடு குறை-இதயத் துடிப்பு (பிராடிகார்டியா), உடல் சோர்வு, தலைவலி மற்றும் இருமல் ஆகியவை இருக்கும். நான்கில் ஒருவருக்கு, மூக்கில் இருந்து இரத்தம் வரும் (எபிஸ்டேக்ஸிஸ்) மற்றும் அடி வயிற்று வலி இருக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு. ல்யூகோபினியா அதாவது சுற்றுகின்ற இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதலும் ஈஸினோபீனியா, மற்றும் வடிநீர்ச்செல்லேற்றம், ஆகியவற்றுடன் ஒரு நேர்மறை டையசோ எதிர்விளைவு மற்றும் சால்மனெல்லா டைஃபீ அல்லது பாராடைஃபீக்கு இரத்த வளர்சோதனைகள் நேர்மறை முடிவுகளைக் காண்பிக்கின்றன. முதல் வாரத்தில் செய்யப்படும் வீடால் சோதனை எதிர்மறையாக இருக்கும்.

தொற்றின் இரண்டாவது வாரத்தில், நோயாளி 40 °C (104 °F)டிகிரி செல்ஸியஸ் செல்லும் உயர்வெப்பக் காய்ச்சலில் குப்புறப் படுத்துக் கிடப்பார். மேலும் இருதட்டலையுடன் கூடிய குறை இதயத் துடிப்பு (நாடித்துடிப்பு பிரிதல்) ஆகியவை காணப்படும். உளக்குழப்பம் அடிக்கடி இருக்கும், அவ்வப்போது சாந்தமாகவும், சில சமயம் எரிச்சலுடனும் காணப்படுவர் இந்த உளக்குழப்பத்தின் காரணமாக குடற்காய்ச்சலுக்கு “பதற்றக் காய்ச்சல்” என்ற பெயரும் வழங்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு அடிவயிற்றிலும், மார்பின் அடியிலும் இளஞ்சிவப்பு (ரோஸ்) புள்ளிகள் தோன்றும் நுரையீரலின் அடியில் கீச்சொலி இருக்கும். அடி வயிறு விரிவடைந்து கீழ் வலது புறத்தில் அடியில் வலியோடு இரைச்சலும் கேட்கும். இந்த நிலையில் வயிற்றுப் போக்கு ஏற்படலாம்: ஒரு நாளில் 6-8 முறை வரை வெளியேறுதல், பச்சை நிறத்தில் பட்டாணி ரசம் போன்ற ஒரு வாசனையுடன் இருக்கும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படலாம். மண்ணீரல் மற்றும் நுரையீரல் விரிவடைந்தும் (ஹெபடோஸ்ப்ளனோமெகலி), மென்மையானதாகவும் இருக்கும். நுரையீரலில் அமில மாற்றங்களும் அதிகரிக்கும். இந்த கட்டத்தில் ஆண்டிO மற்றும் ஆண்டிH எதிர்பொருள்களுடனான வீடால் எதிர்விளைவு மிகவும் நேர்மறையாக இருக்கும். இரத்த வளர்சோதனைகள் சில நேரங்களில் இக்கட்டத்தில் தொடர்ந்து நேர்மறையாகவே இருக்கின்றன. (இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறி என்னவென்றால், முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் மதிய வேளையில் காய்ச்சல் அதிகமாவதாகும்.)

குடற்காய்ச்சலின் மூன்றாவது வாரத்தில் பல வகையான பிரச்சனைகள் உருவாகலாம்.

  • நெரிசலான பெயர்ஸ் திட்டுகளில் ரத்தம் கசிவதனால் ஏற்படும் குடல் இரத்தக் கசிவு (ஹெமரிட்ஜ்); இது மிக ஆபத்தானதாக ஆகலாம் ஆனால் பொதுவாக உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
  • கடைச்சிறுகுடலில் (டிஸ்டல் இலியம்) குடல் துளையிடுதல்: இது மிகத் தீவிரமான பிரச்சனை மற்றும் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இரத்தத்தில் நச்சுத்தன்மை அல்லது பரவலான வயிற்றழற்சி ஆகியவை ஏற்படும் வரை எந்த ஆபத்தான அறிகுறிகளும் இல்லாமலே இது ஏற்படும்.
  • மூளையழற்சி
  • மாற்றிடமேறிய சீழ்பிடித்த கட்டி, பித்தப்பை அழற்சி, இதய உள்ளுறையழற்சி மற்றும் எலும்பு அழற்சி

காய்ச்சல் அதிகமாக இருந்துகொண்டே இருக்கும் மற்றும் 24 மணி நேரத்தில் வெப்ப மாற்றங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். நீர் வற்றிப்போகும் காரணத்தால் நோயாளி மனக் குழப்பத்தோடு இருப்பார் (குடற்காய்ச்சல் நிலை). மூன்றாவது வாரத்தின் முடிவில் காய்ச்சல் குறையத் தொடங்குகிறது (டெஃபர்வெசன்ஸ்). இது நான்காவது மற்றும் ஐந்தாவது வாரத்திலும் தொடரும்.

நோய் அறுதியிடல்

தொகு

ஏதாவது இரத்தம், எலும்புச் சோறு மற்றும் மல பரிசோதனை மற்றும் வீடால் சோதனை (O-சோமாடிக் மற்றும் H-கசையிழை ஆண்டிஜன் ஆகியவற்றிற்கு எதிரான சால்மோனெல்லா எதிர் பொருட்களின் தெரிவது) மூலம் நோய் கண்டறியப்படுகிறது. தீவிர தொற்று நோய்களில் மற்றும் அவ்வளவு செல்வமில்லாத நாடுகளில், வீடால் சோதனை மற்றும் இரத்த வளர்சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் போது, மலேரியா, பேதி அல்லது மூச்சுக்குழலழற்சி ஆகியவற்றை ஒதுக்கிய பிறகு, குளோராம்ஃபெனிசால் உடனான மருத்துவ சோதனை நேரம் பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும்.[4]

"குடற்காய்ச்சல்" (எண்டரிக் ஃபீவர்) என்ற சொல் குடற்காய்ச்சல் மற்றும் இணைகுடற்காய்ச்சல் இரண்டையும் குறிக்கிறது.[5]

சிகிச்சை

தொகு

எதிர்ப்புத்திறன் பொதுவாக இல்லாத போது சிப்ரோஃபுளோக்ஸாசின்[5][6] போன்ற ஃபுளோரோக்யூனோலோன் சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படும். இல்லையெனில், செஃப்டிரியாக்ஸோன் அல்லது செஃபோடாக்ஸைம் போன்ற மூன்றாவது தலைமுறை, செஃபலோஸ்போரின் முதல் தேர்வாக இருக்கும்.[7][8][9] செஃபிக்ஸைம் என்பதும் பொருத்தமான வாய்வழி மாற்று மருந்தாகும்.[10][11]

குடற்காய்ச்சல் பெரும்பாலான நோயாளிகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. வளர்ந்த நாடுகளில் குடற்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஆம்பிசிலின், குளோராம்ஃபெனிகோல், டிரைமீதோபிரிம்-சல்ஃபாமீதோக்ஸாசோல், அமோக்ஸிசைலின் மற்றும் சிப்ரோஃபுளோக்ஸாசின் போன்ற நுண்ணுயிர் எதிர் பொருள் மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகிறது. நுண்ணுயிர் எதிர் பொருள் மருந்துகளோடு ஏற்ற நேரத்தில் சிகிச்சை அளிப்பது நோயாளி இறப்பதற்கான விகிதத்தை சுமார் 1 சதவீதமாக குறைக்கிறது.

சிகிச்சை அளிக்காமல் இருந்தால், குடற்காய்ச்சல் 3 வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை இருக்கும். சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகளில் 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரையானவர்களுக்கு மரணம் ஏற்படுகிறது. ஆயினும் சில சமுதாயங்களில் நோயாளி இறப்பு விகிதம் 47 சதவீதம் வரைக் கூட இருக்கலாம்.

எதிர்ப்பாற்றல்

தொகு

ஆம்பிசிலின், குளோராம்ஃபெனிகோல், டிரைமீதோபிரிம்-சல்ஃபாமீதோக்ஸாசோல் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசின் ஆகியவற்றிற்கு எதிர்ப்பாற்றல் இப்போது பொதுவாக இருப்பதால், கடந்த 20 வருடங்களாக இந்த மருந்துகள் முதல் நிலை சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படுவதில்லை. இந்த மருந்துகளுக்கு எதிர்பாற்றல் இருக்கும் குடற்காய்ச்சல் பலமருந்து எதிர் குடற்காய்ச்சல் என்றழைக்கப்படுகிறது. (MDR குடற்காய்ச்சல்).

குறிப்பாக இந்திய துணைகண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் சிப்ரோஃபிளோக்ஸாசின் எதிர்ப்பு, வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது. தென் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து அல்லது வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் குடற்காய்ச்சல்களுக்கு சிப்ரோஃபிளோக்ஸாசின் மருந்தை முதல் நிலையாக உபயோகிப்பதை பல மையங்கள் தவிர்த்து வருகின்றன. இந்த நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் நிலை சிகிச்சை செஃப்டிரியாக்ஸோன் ஆகும். எதிர்பாற்றலுடைய மக்களில் செஃப்டிரியாக்ஸோன் மற்றும் ஃபுளோரோக்யூனோலோன் மருந்துகளை விட அசித்ரோமைசின் சிறப்பானது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.[12] செஃப்டிரியாக்ஸோனோடு ஒப்பிடும் போது அசித்ரோமைசின் நோய் மறுபடி தாக்குவதை கணிசமாகக் குறைக்கிறது.

சிப்ரோஃபிளோக்ஸாசின் ஏற்புத்திறன் குறைகின்றதைப் பற்றிய பரிசோதனைக் கூட சோதனையில் ஒரு தனிப்பட்ட பிரச்சனை உள்ளது: தற்போதைய பரிந்துரைகள் என்னவெனில், தனிப்பாடுகள் ஒரே நேரத்தில் சிப்ரோஃபிளோக்ஸாசின் (CIP) மற்றும் நாலிடிக்ஸிக் அமிலம் (NAL) ஆகியவற்றிற்கு சோதனை செய்யப்பட வேண்டும். CIP மற்றும் NAL இரண்டிற்கும் உணர்திறன் உள்ள தனிப்பாடுகளை “சிப்ரோஃபிளோக்ஸாசின் உணர்திறன் உடையது” என அறிவிக்க வேண்டும் மற்றும் CIP உணர்திறன் உடைய ஆனால் NAL உணர்திறன் இல்லாதவற்றை “சிப்ரோஃபிளோக்ஸாசின் உணர்திறன் குறைவானவை” என்றும் அறிவிக்கவேண்டும். ஆயினும் 271 தனிப்பாடுகளில் பகுப்பாய்வு செய்த போது சிப்ரோஃபிளோக்ஸாசின் ஏற்புத்திறன் குறைபாடுள்ள 18% தனிப்பாடுகளை (MIC 0.125–1.0 மிகி/l) இந்த முறையில் கண்டுபிடிக்க இயலவில்லை.[13] இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்றும் தெரியாமல் உள்ளது. உலகில் (மேற்கத்திய நாடுகள் உட்பட) உள்ள பெரும்பாலான பரிசோதனை கூடங்கள் டிஸ்க் சோதனை முறையை நம்பி உள்ளன மேலும் அவைகளால் எம்ஐசி(MIC)க்காக சோதனை செய்யமுடியாது.

தடுப்புமுறை

தொகு
 
டெக்சாஸ், சான் அகஸ்டின் பள்ளியில் மருத்துவர் குடற்காய்ச்சல் தடுப்புமருந்து வழங்குகிறார்.

குடற்காய்ச்சலை தடுக்க சுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவையே மிக முக்கியமான வழிகள் ஆகும். குடற்காய்ச்சல் விலங்குகளைத் தாக்காது ஆகையால் பரவுதல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நடக்கிறது. மனித மலம் அல்லது சிறுநீர், உணவு அல்லது குடி நீரோடு தொடர்பு கொள்ளும் வகையில் உள்ள சூழ்நிலைகளிலேயே குடற்காய்ச்சல் பரவுகிறது. பாதுகாப்பான முறையில் உணவு தயார் செய்வது மற்றும் கைகளை சுத்தம் செய்வது ஆகியவை குடற்காய்ச்சலைத் தடுக்க மிகவும் முக்கியமானவையாகும்.

குடற்காய்ச்சலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் தற்போது இரண்டு தடுப்பூசிகளை பரிந்துரைக்கிறது:[14] இவை உயிருள்ள வாய்வழி TY21a தடுப்புமருந்து (விவோடிஃப் பெர்னா என விற்கப்படுவது) மற்றும் ஊசி மூலம் போடக்கூடிய குடற்காய்ச்சல் பாலிசாக்கரைட் தடுப்பூசி (சனோஃபி பேஸ்சரால் டைஃபிம் Vi என்றும் கிளாக்ஸோ சிமித்கிளைன் நிறுவனத்தால் டைஃபெரிக்ஸ் என்றும் விற்கப்படுகிறது). இரண்டும் 50 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை தடுப்பாற்றல் உடையது மற்றும் குடற்காய்ச்சல் அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகிறது. புதிய முறைகள் கையாளப்பட முடியாத நாடுகளில் இன்னும் பழைய முழு-செல் தடுப்பு மருந்து புழக்கத்தில் உள்ளது, ஆனால் இந்த தடுப்பு மருந்து இப்போது பரிந்துரைக்கப்படுவதில்லை. இதற்கு உள்ள அதிகப்படியான பக்க விளைவுகளே இவை பரிந்துரைக்கப்படாததற்கான காரணமாகும். (முக்கியமாக ஊசி இடப்பட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம்).[14]

 
குடற்காய்ச்சல் நுண்ணுயிர் (பாக்டீரியா) ஒரு நீர் கிணறை பாதிக்கும் பல்வேறு வகைகள் பற்றிய 1939 கருத்துப் படம் (நடுவில்)

பரவுதல்

தொகு

பொது சுகாதார நிலைகள் மற்றும் மோசமான சுகாதாரப் பழக்கங்கள் மூலமாக சில நேரங்களில் மலம் உண்டு வாழும் பறக்கும் பூச்சிகள் நுண்ணுயிர் கிருமியை பரப்பலாம். மக்களை மலம் கழித்தபின் மற்றும் உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்ய ஊக்கப்படுத்தும், பொதுக் கல்வி பிராச்சாரங்கள், இந்த நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதில் முக்கியமான ஒரு அம்சத்தை வகிக்கின்றன. அமெரிக்க நோய் கட்டுப்படுத்துவதற்கான மையத்தின் புள்ளி விவரப்படி, குடி நீரில் குளோரின் கலக்கப்படுவதன் மூலம் குடற்காய்ச்சல் பரவுவது மிக அதிக அளவில் அமெரிக்காவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர், குடற்காய்ச்சலின் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோயை பரப்பக் கூடியவராக இருக்கலாம். அதாவது எந்த அறிகுறியும் இருக்காது ஆனால் மற்றவருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். நோய் கட்டுபாட்டு மையங்களின் படி, குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5% மக்கள் உடல் சரியான பிறகும் குடற்காய்ச்சல் நோயை பரப்பக் கூடியவராக இருக்கின்றனர் என்பதாகும். அறிகுறியில்லாமல் நோய் பரப்பியவர்களில் மிகப் பிரபலமானவர் மேரி மல்லான் (“குடற்காய்ச்சல் மேரி” என பொதுவாக அழைக்கப்படுபவர்). இந்த இளம் சமையல்காரர் 53 பேருக்கு இந்த நோயை பரப்பினார், அதில் 3 பேர் இறந்து விட்டனர். ஆரோக்கியமாக இருந்தும் ஒரு "பெரும் நோயை பரப்பியவர்களில்", மல்லான் முதலாவது நபர் ஆவார்.

மேலும் குடற்காய்ச்சல் நோயாளிகள் உருவாகாமல் இருக்க பல பரப்பு-தன்மையுடையவர்கள் தனி அறையில் வெளியே விடப்படாமல் அடைக்கப்பட்டனர். மனநிலை அடிக்கடி மிக மோசமடைந்து அவர்கள் இருந்த இடம் காரணமாக பைத்தியமாகவே ஆனார்கள்.[15]

புறப்பரவியல்

தொகு

வருடத்தில் 1.6 முதல் 3.3 கோடி வரையுள்ள நோயாளிகள், 5,00,000 முதல் 6,00,000 வரை மரணங்களை ஏற்படுத்தும் அதி-நோய்ப்பரவல் இடங்களில், குடற்காய்ச்சல் நோயை உலக சுகாதார நிறுவனம் மிகத் தீவிரமான பொது ஆரோக்கியப் பிரச்சனையாக அறிவித்துள்ளது. இந்நோய் குழந்தைகளையும் 5 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாலிபர்களையும் அதிகமாக தாக்குகின்றது.[16]

வேற்றுப்பண்புடைய நன்மை

தொகு

குடற்காய்ச்சலைப் போலல்லாமல் வேற்றுப்பண்புடைய நன்மை இருப்பதால் நீர்ப்பை இழைப்பெருக்கம் தற்போதைய அளவுகளுக்கு (UKவின் 1600ல் ஒருவருக்கு) உயர்ந்திருக்கலாமென்று எண்ணப்படுகின்றது.[17] CFTR புரதமானது இரண்டு நுரையீரல்களிலும் குடலுக்குரிய மேலணியிலும் காணப்பட்டு, CFTR புரதத்தின் விகாரமான நீர்ப்பை இழைப்பெருக்க வடிவம், குடலுக்குரிய மேலணி வழியாக குடற்காய்ச்சல் நுண்ணுயிரி உடலுக்குள் செல்வதை தடுக்கிறது.

வரலாறு

தொகு

சுமார் கி.மு. 430-426 ல் குடற்காய்ச்சல் என சிலர் நம்பிய, ஒரு கொடுமையான கொள்ளைநோய், ஏதென்ஸ் நகரின் தலைவன் பெரிகில்ஸ் உட்பட மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை அழித்ததாகக் கருதப்படுகிறது. பண்டைய உலகில் தன்னுடைய ஆதிக்கத்தை காட்டக் கூடிய ஏதென்ஸ் நகரின் பொற்காலம் எனக் கருதப்பட்ட பெரிகில்ஸின் ஆட்சி முடிவுக்கு வந்து, பலம் ஏதென்ஸிலிருந்து ஸ்பார்டா நகருக்குச் சென்றது. பண்டைய வரலாற்று நிபுணர் தூசிடைட்ஸ் இந்நோயால் பாதிக்கப்பட்டார், ஆனால் அவர் பிழைத்து இந்த கொள்ளைநோயைப் பற்றி எழுதினார். அவரது எழுத்துகளே இந்த நோய்வெடிப்பைப் பற்றிய முதல் ஆதாரங்கள் ஆகும். இந்த கொள்ளை நோயின் காரணம் பல காலங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிஞர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் தொற்று நோய் டைஃபஸ் தான் இதற்கு காரணம் என கருதினர். ஆயினும், 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குடற்நோய்க்கு காரணமான நுண்ணுயிர் கிருமி போன்ற அமைப்புடைய DNA தொடரை கண்டறிந்தனர்.[18] விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை மறுத்தனர். பல் கூழில் இருந்து எடுக்கப்பட்ட DNAவில் பல முறைசார்ந்த தவறுகள் இருப்பதாக அவர்கள் கருதினர்.[19] மோசமான சுகாதார பழக்கங்கள் மற்றும் பொது சுகாதார நிலைகள் ஆகியவற்றின் காரணமாகவே இந்த நோய் பொதுவாக பரவுகிறது; பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், அட்டிகாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையும் ஒரு பெரிய சுவரின் பின் கூடாரங்களில் வாழ்ந்தனர்.

இந்த காய்ச்சலுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. வாயுக் காய்ச்சல், அடிவயிற்றுக் காய்ச்சல் (டைஃபசு), குழந்தை தணிந்தேறும் காய்ச்சல், மெதுவான காய்ச்சல், பதற்றக் காய்ச்சல், பைதோஜெனிக் காய்ச்சல் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. "டைஃபாய்டு" என்ற பெயர் டைஃபசு என்ற வார்த்தையிலிருந்து லூயிஸ் என்பவரால் 1829ம் ஆண்டு வழங்கப்பட்டது.

 
ஒரு மருத்துவமனை படுக்கையில் மேரி மல்லான் (“குடற்காய்ச்சல் மேரி")1907ல் குடற்காய்ச்சல் பரப்புபவர் எனும் காரணத்துக்காக வலுக்கட்டாயமாக அவர் 3 வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் மறுபடியும் 1915ல் இருந்து 1938ம் ஆண்டு அவர் இறக்கும் வரை தனிமைப்படுத்தப்பட்டார்.

19ம் நூற்றாண்டின் முடிவில் சிகாகோ நகரில் குடற்காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 1,00,000 பேரில் 65 பேராக இருந்தது. 1891 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் உயிரிழப்பு 1,00,000 மக்களில் 174 பேராக இருந்தது.[20] குடற்காய்ச்சல் மேரி என்றும் அழைக்கப்படும் மேரி மல்லான், மிகவும் பரவலாக பேசப்பட்ட நோய்ப்பரப்புவர் ஆவார். ஆனால் அவர் தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தினார் என்று இல்லை. 1907ஆம் ஆண்டில், கண்டறியப்பட்டு மற்றும் தடயப்படுத்தப்பட்ட முதல் அமெரிக்க நோய் பரப்புபவர் இவர் தான். இவர் நியூயார்க் நகரில் சமையல்காரராக இருந்தார். பல நூறு மக்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இவரை பலர் கருதினர். நாற்பத்தி ஏழு நோயாளிகளுக்கும் மூன்று மரணங்களுக்கும் இவரோடு நெருங்கிய தொடர்பு உண்டு.[21] பொது சுகாதார அதிகாரிகள் அவர் அவருடைய சமையல் வேலையை விட வேண்டும் அல்லது அவரது பித்தப்பை அகற்றப்பட வேண்டும் என்று கூறினர். மேரி தனது வேலையை விட்டு விட்டார் ஆனால் வேறு பெயரில் மறுபடியும் வேலைக்கு சேர்ந்தார். மற்றுமொரு முறை குடற்காய்ச்சல் பரவத் தொடங்கிய போது அவரைக் கைது செய்து தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் அவரைத் தனிமைப்படுத்தினர். 26 வருடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்த பின்னர் நுரையீரல் அழற்சியால் இறந்தார்.

1897ம் ஆண்டு, ஆல்முரோத் எட்வர்டு ரைட் ஓர் ஆற்றல் வாய்ந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். 1909ம் ஆண்டு ஃப்ரெட்ரிக் எஃப்.ரசல் எனும் அமெரிக்க இராணுவ மருத்துவர், ஒரு அமெரிக்க குடற்காய்ச்சல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். இரண்டு வருடங்கள் கழித்து மொத்த இராணுவத்துக்கே நோயெதிர்ப்புக்காக தடுப்பூசி போடப்பட்ட முதல் தடுப்பூசி நிகழ்ச்சி இவரது தான். அமெரிக்க ராணுவத்தில் நோய் விகிதம் மற்றும் இறப்பு விகிதத்துக்கு குடற்காய்ச்சல் மிக முக்கியமான காரணமாக இருந்தது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் தடுப்பூசிகளின் காரணமாக 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பல வளர்ந்த நாடுகளில் குடற்காய்ச்சலின் விகிதம் வெகுவாகக் குறைந்தது. 1942 ஆம் ஆண்டில் மருத்துவ பயிற்சியில் நுண்ணுயிர் எதிர்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. தற்போது, வளர்ந்த நாடுகளில் குடற்காய்ச்சல் அளவு 10,00,000 பேரில் 5 பேராக உள்ளது.

2004-05ல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட நோய் பாதிப்பில் 42,000 நோயாளிகள் மற்றும் 214 மரணங்கள் பதிவு செய்யப்பட்டது.[16]

19ம் நூற்றாண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் குடற்காய்ச்சல் சுவேட் மில்லியார் என்றும் அறியப்பட்டது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரபலமானவர்கள்

தொகு

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரபலமானவர்களில் சிலர்:

  • அபிகேல் ஆடம்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது அமெரிக்க முதல் பெண்மணி, ஜான் ஆடம்ஸின் மனைவி.
  • சாக்ஸ்-கோபர்க்-கோதாவின் ஆல்பர்ட், பிரித்தானிய இளவரசர் துணைவர், ராணி விக்டோரியாவின் கணவர்
  • எட்வார்ட் VII, பிழைத்துக்கொண்டார்
  • லூயிசா மே ஆல்காட், லிட்டில் உமன் ரெகார்ட்ஸ் எழுதியவர், மருத்துவமனை ஸ்கெட்ச்சுகளின் மூலம் நோயைப் பற்றிக்கொண்டார்.
  • சார்லஸ் டார்வின், இயற்கையாளர், HMS பீகிளோடு 1835ஆம் ஆண்டு சில்லி சென்ற போது நோய்த்தொற்று பெற்றார்
  • யூஜீனியா டடோலினி, புகழ் பெற்ற இத்தாலிய பாடகர், 1872ஆம் ஆண்டு பாரிஸ் நகரில், இந்த நோயால் இறந்தார்.
  • வில்லியம் வாலஸ் லிங்கன், அமெரிக்காவின் 16வது அதிபரான ஆபிரகாம் லிங்கன் மற்றும் மேரி டாட் லிங்கனின் மூன்றாவது மகன். பிப்ரவரி 20, 1862ல் இந்த நோயால் இறந்தார்.

கற்பனை கதாப்பாத்திரங்கள்

தொகு
  • கில்பர்ட் பிளைத் (ஆனி ஆஃப் கிரீன் கேபிள்ஸ் தொடர்) எல்.எம். மோண்ட்கோமரியின் ஆனி ஆஃப் த ஐலேண்டில் குடற்காய்ச்சலால் இறக்கும் தருவாய்க்கு சென்றார்.
  • வால்டர் பிளைத் (பிந்தைய ஆனி ஆஃப் கிரீன் கேபிள்ஸ் புத்தகங்களில் ஆனி மற்றும் கில்பர்ட் பிளைத்தின் மகன்) “ரில்லா ஆஃப் இங்கில்சைட்”ல் குடற்காய்ச்சலில் இருந்து தேறிக்கொண்டிருந்தார் மற்றும் அவர் WWI தொடங்கும் போது ஈடுபடாததற்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
  • தாமஸ் மானின் நாவலான பட்டன்புரூக்ஸில் ஜோஹான் “ஹான்னோ” பட்டன்புரூக், குடற்காய்ச்சலால் இறக்கிறார் மற்றும் இந்த புத்தகத்தில் இந்த நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஒரு பெரிய மருத்துவ விளக்கமும் அளிக்கப்பட்டது.
  • ஜான் எச். வாட்சன் (ஷெர்லாக் ஹோம்சின் புகழ்பெற்ற நண்பர்) இந்தியாவில் குடற்காய்ச்சலால் இறக்கும் தருவாய்க்கு சென்றதால், இங்கிலாந்திற்கு திரும்ப சென்ற போது தான் துப்பறியாளர் ஹோம்சை சந்தித்தார்.
  • கான் வித் த விண்ட் ஸ்கார்லட் ஓ'ஹாராவின் தாய் மற்றும் தங்கைகள்.
  • சுத்ரீ என்ற பெயர் கொண்ட கார்மாக் மெக்கார்த்தி நாவலில் சுத்ரீ நாவலின் கடைசி பக்கங்களில் குடற்காய்ச்சலால் இறக்கும் நிலைக்குச் சென்றார்.

குறிப்புகள்

தொகு
  1. MedlinePlus Encyclopedia Typhoid fever
  2. Giannella RA (1996). "Salmonella". Baron's Medical Microbiology (Baron S et al., eds.) (4th ed.). Univ of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9631172-1-1.
  3. CDC Disease Info typhoidfever_g
  4. Ryan KJ, Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ed.). McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0838585299. {{cite book}}: |author= has generic name (help)
  5. 5.0 5.1 Parry CM, Beeching NJ (2009). Treatment of enteric fever. 338. பக். b1159. doi:10.1136/bmj.b1159. 
  6. Thaver D, Zaidi AK, Critchley JA, et al. (2008). "Fluoroquinolones for treating typhoid and paratyphoid fever (enteric fever)". Cochrane Database Syst Rev 8 (4): CD004530. பப்மெட்:18843659. 
  7. Soe GB, Overturf GD (1987). "Treatment of typhoid fever and other systemic salmonelloses with cefotaxime, ceftriaxone, cefoperazone, and other newer cephalosporins". Rev Infect Dis 9 (4): 719–736. http://www.jstor.org/stable/4454162. 
  8. Wallace MR, Yousif AA, Mahroos GA, et al. (1993). "Ciprofloxacin versus ceftriaxone in the treatment of multiresistant typhoid fever". Eur J Clin Microbiol Infect Dis 12 (12): 907–910. doi:10.1007/BF01992163. 
  9. Dutta P, Mitra U, Dutta S, et al. (2001). "Ceftriaxone therapy in ciprofloxacin treatment failure typhoid fever in children". Indian J Med Res 113: 210–213. பப்மெட்:11816954. 
  10. Bhutta ZA, Khan IA, Molla AM (1994). "Therapy of multidrug-resistant typhoid fever with oral cefixime vs. intravenous ceftriaxone". Pediatr Infect Dis J 13 (11): 990–994. பப்மெட்:7845753. 
  11. Cao XT, Kneen R, Nguyen TA, Truong DL, White NJ, Parry CM (1999). "A comparative study of ofloxacin and cefixime for treatment of typhoid fever in children. The Dong Nai Pediatric Center Typhoid Study Group". Pediatr Infect Dis J 18 (3): 245–8. பப்மெட்:10093945. 
  12. Effa EE, Bukirwa H (2008). "Azithromycin for treating uncomplicated typhoid and paratyphoid fever (enteric fever)". Cochrane Database of Systematic Reviews (1). doi:10.1002/14651858.CD006083.pub2. 
  13. Cooke FJ, Wain J, Threlfall EJ (2006). "Fluoroquinolone resistance in Salmonella typhi (letter)". Brit Med J 333 (7563): 353–4. doi:10.1136/bmj.333.7563.353-b. 
  14. 14.0 14.1 "Typhoid vaccines: WHO position paper". Wkly. Epidemiol. Rec. 83 (6): 49–59. February 2008. பப்மெட்:18260212. http://www.who.int/wer/2008/wer8306/en/index.html. 
  15. லாங்க் குரோவ் மருத்துவமனை, சர்ரே பற்றி BBC URL: http://news.bbc.co.uk/today/hi/today/newsid_7523000/7523680.stm
  16. 16.0 16.1 "Typhoid Fever". World Health Organization. Archived from the original on 2011-11-02. பார்க்கப்பட்ட நாள் 2007-08-28.
  17. Weinberg ED (2008). "Survival advantage of the hemochromatosis C282Y mutation". Perspectives in biology and medicine 51 (1): 98–102. doi:10.1353/pbm.2008.0001. பப்மெட்:18192769. http://muse.jhu.edu/cgi-bin/resolve_openurl.cgi?issn=0031-5982&volume=51&issue=1&spage=98&aulast=Weinberg. 
  18. Papagrigorakis MJ, Yapijakis C, Synodinos PN, Baziotopoulou-Valavani E (2006). "DNA examination of ancient dental pulp incriminates typhoid fever as a probable cause of the Plague of Athens". Int J Infect Dis 10 (3): 206–14. doi:10.1016/j.ijid.2005.09.001. பப்மெட்:16412683. 
  19. Shapiro B, Rambaut A, Gilbert M (2006). "No proof that typhoid caused the Plague of Athens (a reply to Papagrigorakis et al.)". Int J Infect Dis 10 (4): 334–5; author reply 335–6. doi:10.1016/j.ijid.2006.02.006. பப்மெட்:16730469. 
  20. "1900 Flow of Chicago River Reversed". Chicago Timeline. Chicago Public Library. Archived from the original on 2007-03-07. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  21. "Nova: The Most Dangerous Woman in America".

கூடுதல் வாசிப்பு

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடற்காய்ச்சல்&oldid=3924860" இலிருந்து மீள்விக்கப்பட்டது