குடல்செருகல்
குடல்செருகல் (Intussusception) என்பது உடலின் உள்ளுறுப்பான குடலின் ஒரு பகுதி அதற்கு அருகிலுள்ள குடல் பகுதியுடன் மடிந்து இணையும் மருத்துவ நிலையை குறிக்கிறது.[1]. பொதுவாக சிறுகுடலில் அதிகமாகவும் பெருங்குடலில் அரிதாகவும் இக்குறைபாடு தோன்றுகிறது[1]. வந்து வந்து போகும் வயிற்று வலி , வாந்தி, வயிற்று வீக்கம், மலத்துடன் இரத்தம் கழிதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும்[1]. பெரும்பாலும் சிறு குடல் அடைப்பு இதனால் ஏற்படுகிறது[1] . வயிற்றறையின் உட்சுவர் அழற்சி, குடலில் நுண்துளை போன்ற பிற சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்[1].
குடல்செருகல் Intussusception | |
---|---|
கணிப்பொறி பருவரைவு அலகீடு காட்டும் குடல் செருகல் | |
சிறப்பு | குழந்தை நோயியல், பொது மருத்துவம் |
அறிகுறிகள் | வயிற்று வலி , வாந்தி, வயிற்று வீக்கம், மலத்துடன் இரத்தம் கழிதல்[1] |
சிக்கல்கள் | வயிற்றறையின் உட்சுவர் அழற்சி, குடலில் நுண்துளை[1] |
வழமையான தொடக்கம் | 6 முதல் 18 மாத குழந்தைகளுக்கு வலியானது சில நாள் முதல் வாரக் கணக்கில் இருக்கும்[1] |
காரணங்கள் | தெரியவில்லை[1] |
நோயறிதல் | மருத்துவப் படிமவியல்[1] |
ஒத்த நிலைமைகள் | வயிற்றின் பின்முனை சுருக்கம்[1] |
சிகிச்சை | மலக்குடல் கழுவல், அறுவை சிகிச்சை[1] |
மருந்து | டெக்சாமெத்தசோன்[2] |
குழந்தைகளில் குடல்செருகல் குறைபாடு தோன்றுவதற்கான காரணம் பொதுவாக தெரியவில்லை; பெரியவர்களில் தோன்றுவதற்கு ஏதாவதொரு முன்னணி காரணம் சில நேரங்களில் அறியமுடிகிறது[1]. [1]. பல்வேறு நோய்த்தொற்றுகள், நீர்மத்திசு அழற்சி, குடலில் தசை விழுது போன்ற சிறு கட்டிகள் தோன்றுவது போன்றவை இந்நோயால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளாகும்.. [1]. கருப்பை உட்சவ்வு நீட்சி, குடல் ஒட்டிக்கொள்ளுதல், குடல் புற்று[1] போன்ற ஆபத்துகள் பெரியவர்களிடத்தில் இந்நோயினால் உண்டாகலாம். மருத்துவப் படிமவியல் மூலம் பெரும்பாலும் இக்குறைபாடு கண்டறியப்படுகிறது[1]. நோய் காண்பதற்கு குழந்தைகளிடத்தில் மீயொலி பரிசோதனையும் பெரியவர்களிடத்தில் சி. டி.அலகீடு எனப்படும் கணிப்பொறி பருவரைவு அலகீடு பரிசோதனையும் விரும்பப்படுகிறது.[1].
குடல்செருகல் என்பது அவசர மற்றும் விரைவான சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாகும்.[1]. இச்சிகிச்சை வெற்றிகரமாக இல்லாவிட்டால் அறுவை சிகிச்சையுடன் கூடிய மலத்துவாரத்தின் வழியாக நீர் ஏற்றி குடல் கழுவும் எனிமா சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது[1]. டெக்சாமெத்தசோன் மருந்துகளை நோயாளிக்கு அளிப்பதன் மூலம் அபாயத்தை குறைப்பது மற்றொரு சிகிச்சை முறையாகும்[2]. பெரியவர்களுக்கு குடலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் சிகிச்சை பெரும்பாலும் தேவைப்படுகிறது[1]. குடல்செருகல் நோய் பெரியவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.[1]. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.[1]. ஆறு முதல் பதினெட்டு மாதங்கள் வரை வயதுள்ள குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்[1].
அறிகுறிகள்
தொகுஅவ்வப்போது வயிற்று வலி, குமட்டல், வாந்தி சில நேரங்களில் பித்தப்பையிலிருந்து வரும் பச்சை நிற வாந்தி, கால்கள் மார்பு பகுதிக்கு இழுக்கப்படுவது, இடைவிடாத மிதமானது முதல் கடுமையான தசைப்பிடிப்பு, வயிற்று வலி ஆகியவை ஆரம்பகால அறிகுறிகளில் அடங்கும். குடல்செருகல் நோயின் அறிகுறியான வயிற்று வலி ஒரு குறுகியகால வலியாகும். குடல் பிரிவு இடைவிடாமல் சுருங்குவது நிறுத்தப்படுவதால் இவ்வயிற்று வலி தற்காலிகமாக போய்விடுகிறது. இரத்தம் மற்றும் சளியுடன் காணப்படும் மலப்போக்கு, உடல் சோம்பல் மற்றும் சோர்வு போன்றவை இந்நோய் பாதிப்பிற்கு பின்னரான பிற்கால அறிகுறிகளாகும். உடல் பரிசோதனையின் மூலம் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்து கொத்திறைச்சி வடிவ தசை இருப்பதை அறிந்து குடல்செருகல் நோயை உணரமுடியும்.[3]. நோய் அறிகுறிகளை சொல்லமுடியாத குழந்தைகள் அழுவார்கள். வாய்மொழியாக சொல்லமுடியாத நிலையில் இருப்பவர்கள் முழங்கால்கள் மார்பு நோக்கி இழுக்கப்பட்டு வலிமிகுந்த சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள்.
குடல்செருகல் நோயின் அறிகுறி காய்ச்சல் அல்ல. ஆனால் குடல்செருகலால் தோன்றும் வளையம் குடலில் சிதைவை உண்டாக்கலாம். இழையநசிவு காரணமாக தமனிக்கு செல்லும் இரத்தக்குழாயில் குருதியோட்டம் குறைகிறது. இதனால் குடலில் நுண் துளை தோன்றி இரத்தம் நஞ்சாவதால் காய்ச்சல் ஏற்படும். அரிதான சந்தர்ப்பங்களில், குடல்செருகல் என்பது குழந்தைகளில் நோயெதிர்ப்பு-மைய்ய நாள அழற்சி நோயான இனோச்-சிகோன்லென் பர்புரா எனப்படும் இரத்தத் தோல் புடைப்பு நோயின் சிக்கலாகவும் இது இருக்கலாம். இப்பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இதற்கான பாரம்பரியமான அறிகுறிகளுடன் கூடுதலாக கடுமையான வயிற்று வலியும் இருக்கும் .
காரணம்
தொகுகுடல்செருகலுக்கான காரணங்கள் தெளிவாக நிறுவப்படவில்லை அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை. குழந்தைகளில் குடல்செருகல் நோய்க்கான காரணங்கள் 90% அறியப்படாத காரணத்தினால் எழுகின்றன. அவற்றில் நோய்த்தொற்றுகள், உடற்கூறியல் காரணிகள் போன்றவை அடங்கும் [1].
- மெக்கெலின் குழலுறுப்பு
- தசை விழுது
- போலி குடல்நீர் கட்டிகள்
- குடல்வால்
- பேயர் திட்டுகளின் மிகைப்பெருக்கம்
- மூலமறியா தான்தோன்றி
.
ரோட்டா வைரசு தடுப்பூசியின் முந்தைய தயாரிப்புகள் குடல்செருகலுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய தயாரிப்புகள் இதற்கான தடுப்பூசியாக்க் கருதப்படுவதில்லை [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 Marsicovetere, P; Ivatury, SJ; White, B; Holubar, SD (February 2017). "Intestinal Intussusception: Etiology, Diagnosis, and Treatment.". Clinics in colon and rectal surgery 30 (1): 30–39. doi:10.1055/s-0036-1593429. பப்மெட்:28144210.
- ↑ 2.0 2.1 Gluckman, S; Karpelowsky, J; Webster, AC; McGee, RG (1 June 2017). "Management for intussusception in children.". The Cochrane Database of Systematic Reviews 6: CD006476. doi:10.1002/14651858.CD006476.pub3. பப்மெட்:28567798.
- ↑ Cera, SM (2008). "Intestinal Intussusception". Clin Colon Rectal Surg 21 (2): 106–13. doi:10.1055/s-2008-1075859. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-0043. பப்மெட்:20011406.
- ↑ Lu, Hai-Ling; Ding, Ying; Goyal, Hemant; Xu, Hua-Guo (4 October 2019). "Association Between Rotavirus Vaccination and Risk of Intussusception Among Neonates and Infants". JAMA Network Open 2 (10): e1912458. doi:10.1001/jamanetworkopen.2019.12458.