குட்டிப்புரம் தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ளள ஒரு தொடருந்து நிலையம்


குட்டிப்புரம் தொடருந்து நிலையம் (Kuttippuram railway station, குறியீடு: KTU) என்பது கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது. [1]

குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்குட்டிப்புரம், மலப்புறம் மாவட்டம், கேரளம்
 India
ஆள்கூறுகள்10°50′44″N 76°02′01″E / 10.8456019°N 76.0337296°E / 10.8456019; 76.0337296
ஏற்றம்13 m
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்Shoranur–Mangalore section
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து நிறுத்தம், வாடகை தானுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt–grade
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுKTU
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) Palakkad
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1888; 137 ஆண்டுகளுக்கு முன்னர் (1888)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம் is located in இந்தியா
குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம் is located in கேரளம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம் (கேரளம்)

வரலாறு

தொகு

குட்டிப்புரத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றான திரூர் தொடருந்து நிலையமானது கேரத்தின் பழமையான தொடருந்து நிலையம் ஆகும். [2] திரூரில் இருந்து பேப்பூர் வரையிலான இருப்புப் பாதை மாநிலத்தின் பழமையான இருப்புப் பாதையாகும், இது தானூர், பரப்பனங்காடி மற்றும் வள்ளிக்குன்னு தொர்ருந்து நிலையங்களையும் கொண்டுள்ளது. [2] திரூர் - பேப்பூர் தொடருந்து பாதை 1861, மார்ச் 12 இல் செயல்படத் தொடங்கியது. [3] அதே ஆண்டில், திருரூரில் இருந்து குட்டிப்புரம் வரை திருநாவாய் வழியாக இருப்புப் பாதை அமைக்கப்பட்டு, 1861 மே முதல் நாளில் இருந்து செயல்படத் தொடங்கியது [2] குட்டிப்புரம் தொடருந்து நிலையம் மாநிலத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். [2] பின்னர் 1862 இல், குட்டிப்புரத்தில் இருந்து பட்டாம்பி வரை இருப்புப் பாதை விரிவுபடுத்தப்பட்டது, பின்னர் அது மீண்டும் அதே ஆண்டில் பட்டாம்பியில் இருந்து போத்தனூர் வரை விரிவாக்கப்பட்டது. [2] பின்னர் 1861-1862 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பேப்பூர் - போதனூர் பாதையின் விரிவாக்கமாக சென்னை - மங்களூர் இருப்புப் பாதை உருவாக்கப்பட்டது. [2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "30 COVID-19 Special Arrivals at Kuttippuram SR/Southern Zone - Railway Enquiry".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും...". Mathrubhumi. 17 June 2019 இம் மூலத்தில் இருந்து 30 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201130082010/https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/kerala-first-railway-line-tirur-to-beypore-1.3880175. 
  3. "'Lifeline' of Malabar turns 125". The Hindu. 29 December 2012. https://www.thehindu.com/news/national/kerala/lifeline-of-malabar-turns-125/article4250472.ece.