குமாரராசு அச்சமாம்பா

இந்திய அரசியல்வாதி

மருத்துவர் குமாரராசு அட்சமாம்பா (Komarraju Atchamamba) (6 செப்டம்பர் 1906 - 20 அக்டோபர் 1964) இந்திய வழக்கறிஞரும், மகப்பேறியல் மருத்துவரும், மகளிர் நலவியல் நிபுணரும், அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். [1]

குமாரராசு அச்சமாம்பா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957 - 1962
முன்னையவர்அரிந்திரநாத் சட்டோபாத்யாயா
பின்னவர்கானூரி இலட்சுமண ராவ்
தொகுதிவிஜயவாடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1906-09-06)6 செப்டம்பர் 1906
குண்டூர், இந்தியா
இறப்பு20 அக்டோபர் 1964(1964-10-20) (அகவை 58)
விசயவாடா, இந்தியா
துணைவர்வி. வெங்கட்ராம சாத்திரி
பிள்ளைகள்1 மகள்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

குமாரராசு அச்சமாம்பா, 1906 ஆம் ஆண்டு குண்டூரில் வரலாற்றாசிரியர் குமாரராசு வெங்கட லட்சுமண ராவ் மற்றும் அவரது மனைவிக்கு பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1924 இல் காக்கிநாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் பெண் தொண்டர்களின் மாணவர் தலைவராக இருந்தார். 1928 ஆம் ஆண்டில், சென்னை நகரில் சைமன் குழுவிற்கு எதிராக பெண் மாணவர்கள் நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின் தலைவியாகவும் இருந்தார். 1943-1948 காலகட்டத்தில், இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னர், 1948 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1957 இல், விஜயவாடாவிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கில் பிரசுதி - சிசு போஷனா என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இது குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றிய பாரம்பரிய தவறான எண்ணங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. மகிளா என்ற பெண்களுக்கான இதழையும் வெளியிட்டார். [2] 1940 இல் வி. வெங்கடராம சாஸ்திரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு தன்யா என்ற மகள் பிறந்தார்.

இறப்பு தொகு

அச்சமாம்பா 20 அக்டோபர் 1964 இல் இறந்தார் [3] 2006 இல், இவரது பிறந்த நூற்றாண்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "Second Lok Sabha Members". பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  2. Satyavathi, Kondaveeti (May 2009). "Hitha Suchani to Bhumika: Women's Magazines in Telugu". Sparrow Newsletter 61 (16–17): 3–4. http://www.sparrowonline.org/downloads/SNL17.pdf. பார்த்த நாள்: 15 October 2010. 
  3. "Tenth Session". Lok Sabha Debates 35 (1): 15. 16 November 1964. https://eparlib.nic.in/bitstream/123456789/2951/1/lsd_03_10_16-11-1964.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரராசு_அச்சமாம்பா&oldid=3934960" இலிருந்து மீள்விக்கப்பட்டது