கானூரி இலட்சுமண ராவ்

இந்திய அரசியல்வாதி

கானூரி லக்ஷ்மணா ராவ் சுருக்கமாக கே. எல். ராவ் (15, சூலை 1902   - 18 மே 1986) என்பவர் ஒரு இந்திய பொறியியலாளரும், பத்ம பூசண் விருது பெற்றவரும் ஆவார். [2] இவர் இந்திய நடுவண் அமைச்சரவையில் பாசனம், மின்னுற்பத்தித் துறை அமைச்சராகவும், 1962 முதல் 1977 வரை விஜயவாடா தொகுதிக்கான காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

கானூரி இலட்சுமண ராவ்
பாசனம் மற்றும் மின்னுற்பத்தித் துறை அமைச்சர்
பதவியில்
20 சூலை 1963[1] - ??
பிரதமர் சவகர்லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
தொகுதி விஜயவாடா
விஜயவாடா தொகுதி மக்களவை உறுப்பினர்
பதவியில்
1962 - 1977
முன்னவர் டாக்டர் கோமர்ராஜு அச்சனம்பா
பின்வந்தவர் கோடி முரளி
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 15, 1902(1902-07-15)
பிரித்தானிய இந்தியா, விஜயவாடாவுக்கு அருகில், கன்கிபாடு
(தற்போது ஆந்திரப் பிரதேசம்)
இறப்பு 18 மே 1986(1986-05-18) (அகவை 83)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கையொப்பம்

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்விதொகு

ராவ் ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் கன்கிபாடு என்ற சிற்றூரில் ஒரு நடுத்தர வர்க்க பிராமண விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு கிராம அலுவலர் ஆவார். ராவ் தனது ஒன்பதாவது வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது அடிபட்டு ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். இவர் சென்னை மாகாணக் கல்லூரியில் இடைநிலை (+2) படிப்பைப் படித்தார். அடுத்து தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தை கிண்டி பொறியியல் கல்லூரியில் முடித்தார். மேலும் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர் எனும் பெருமை இவருக்கு உண்டு. இவர் 1939 இல் தனது முனைவர் பட்டத்தை ஐக்கிய இராச்சியத்தில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பெற்றார் .

அங்கிகாரங்கள்தொகு

பாசனத் திட்டப் பணிகளில் பங்களித்ததற்காக ராவுக்கு 1963 ஆம் ஆண்டு பத்ம பூசண் வழங்கப்பட்டது. இவர் மின்சக்தி மற்றும் நீர்ப்பாசன மத்திய வாரியத்தின் தலைவராக இருந்தார். மேலும் 1958-59 மற்றும் 1959-1960 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய பொறியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார் . [3] இவர் 1957-61 மற்றும் 1961-65 இல் பன்னாட்டு மண் இயக்கவியல் மற்றும் புவித்தொழில்நுட்பப் பொறியியல் சங்கத்தின் (ஆசியா) துணைத் தலைவராக இருந்தார். [4] 1960 ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் 1968 இல் பொறியியல் துறையில் ரூர்கி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் .

பொறியியல் தொழில்தொகு

இவர் ரங்கூன் மற்றும் பர்மாவில் பேராசிரியராக பணிபுரிந்தார். தன் முனைவர் பட்டத்தை முடித்த பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் கட்டப் பொறியியல் மற்றும் வலிவூட்டிய கற்காரை என்ற ஒரு நூலை எழுதினார். இந்தியா திரும்பிய பின்னர், இவர் சென்னை அரசாங்கத்தில் வடிவமைப்புப் பொறியாளராக பணியாற்றினார். 1950 இல் புது தில்லி வித்யூத் ஆணையத்தின் நிருவாகியாக (வடிவமைப்பு) பதவி வகித்தார். 1954 இல் தலைமை பொறியியலாளராக பதவி உயர்வு பெற்றார். [5]

இவர் தன் சுயசரிதையை தி குசேக்ஸ் கேண்டிடேட் என்ற பெயரில் எழுதியுள்ளார். [6]

அரசியல் வாழ்க்கைதொகு

இவர் 1961 இல் விஜயவாடா மக்களவைத் தொகுதியிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜயவாடா தொகுதியில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 20, சூலை 1963 அன்று, ராவ் மத்திய பாசனம், மின்னுற்பத்தித் துறை அமைச்சராக பதவியேற்றார். இவர் இத்துறை அமைச்சராக இருந்தபோது பல பாசன அணைத் திட்டங்களை வடிவமைத்தார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் மற்றும் தெலங்கானாவின் நலகொண்டா மாவட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப் பெரியது என்று பாராட்டப்படும் நாகார்ஜுன சாகர் அணை திட்டத்துக்கு மூலகர்த்தா இவர்தான் . ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் ராவ் தொடர்ந்து பதவிவகித்தார்.   [ சான்று தேவை ]

அங்கீகாரம்தொகு

குண்டூர் மாவட்டத்தின் பெல்லம்கொண்டாவில் உள்ள புலிச்சினாலா திட்டத்துக்கு 2006 ஆம் ஆண்டு கே. எல் ராவ் சாகர் திட்டம் என பெயரிடப்பட்டது. [7]

மேற்கோள்கள்தொகு

  1. Ravi Baghel (14 February 2014). River Control in India: Spatial, Governmental and Subjective Dimensions. Springer Science & Business Media. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-04432-3. https://books.google.co.in/books?id=LVC-BAAAQBAJ&pg=PA126&dq=kanuri+lakshmana+rao&hl=en&sa=X&ved=0CCIQ6AEwAWoVChMI3NDAlbfnxgIVQY-OCh1NhwYC#v=onepage&q=kanuri%20lakshmana%20rao&f=false. பார்த்த நாள்: 19 July 2015. 
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. "Past Presidents of Institute of Engineers". 16 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "Pulichintala named after K. L. Rao". 26 மே 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 November 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானூரி_இலட்சுமண_ராவ்&oldid=3335723" இருந்து மீள்விக்கப்பட்டது