குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி

குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின்[1] கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள பாதல்பூர் கிராமத்தில் 1997 ஆம் ஆண்டில் கலை பட்டதாரி கல்லூரியாக தொடங்கப்பட்ட ஒரு மகளிர் முதுகலை கல்லூரியாகும்.

குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி
முந்தைய பெயர்
குமாரி மாயாவதி அரசு மகளிர் பட்டக்கல்லூரி
குறிக்கோளுரைதேஜஸ்வினாவதித்மஸ்து
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கற்றல் மூலம் அறிவொளி
வகைஅரசு முதுகலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1997
நிறுவுனர்உத்திரப்பிரதேச அரசு
Academic affiliation
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் பேராசிரியர் திவ்யா நாத்
மாணவர்கள்2000
அமைவிடம்
பாதல்பூர்
, , ,
203207
,
28°35′28″N 77°31′07″E / 28.591010°N 77.518613°E / 28.591010; 77.518613
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி is located in உத்தரப் பிரதேசம்
குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி
Location in உத்தரப் பிரதேசம்
குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி is located in இந்தியா
குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி
குமாரி மாயாவதி அரசு மகளிர் முதுகலை கல்லூரி (இந்தியா)

மனிதநேயம், அறிவியல், வணிகம் மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை பயிற்றுவிக்கும் இந்த பெண்கள் கல்லூரி, உத்திரப்பிரதேச அரசின் உயர்கல்வித்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் பி++ தர மதிப்பீடும் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.(CGPA-2.91, பிப்ரவரி 2025 வரை செல்லுபடியாகும்)

ஐ எஸ் ஓ 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற இக்கல்லூரியானது சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2]

வரலாறு

தொகு

பாதல்பூர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கல்வி மூலமாக அதிகாரம் அளிப்பதை அடைவதற்காக, கல்வியில் சிறந்து விளங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இக்கல்லூரி, இப்பகுதியில் உள்ள சமூக-பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை வழங்குவதையும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இடைவெளியைக் குறைத்து, அதன் மூலம் முழுமையான தேசிய வளர்ச்சியைக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு 1997 ஆம் ஆண்டில் 26 மாணவர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் தற்போது 2000க்கும் அதிகமான மாணவர்கள் இளங்கலையில் 13 பாடங்களையும் முதுகலையில் 10 பாடங்களையும் கற்று வருகின்றானர். மேலும் கல்வியியல் பிரிவில் 100 மாணவர்களும், முனைவர் பட்ட ஆராய்ச்சிப்படிப்பிலும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "KMGC". Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)