கும்மாடி குதூகாலம்மா
கும்மாடி குதூகாலம்மா (ஆங்கிலம்: Gummadi Kuthuhalamma; தெலுங்கு: గుమ్మడి కుతూహలమ్మ; 1 சூன் 1949 - 15 பிப்ரவரி 2023) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியிலும் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். குதூகாலம்மா 1985 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக வேபாஞ்சேரி தொகுதியிலிருந்து 1985 முதல் 2009 வரையிலும் கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 2009 முதல் 2014 வரையிலும் பணியாற்றினார்.[1]
கும்மாடி குதூகாலம்மா Gummadi Kuthuhalamma | |
---|---|
உறுப்பினர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 1985–2014 | |
தொகுதி | తెలుగు (te) (1985–2009) கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி (2009–2014) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கண்டுகூர், பிரகாசம் மாவட்டம், சென்னை மாநிலம், இந்திய மேலாட்சி அரசு | 1 சூன் 1949
இறப்பு | 15 பெப்ரவரி 2023 திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (until 2014) தெலுங்கு தேசம் கட்சி (2014 முதல்) |
குதூகாலம்மா 15 பிப்ரவரி 2023 அன்று தனது 73ஆவது வயதில் திருப்பதியில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Congress legislator Gummadi Kutuhalamma joins Telugu Desam". Deccan Chronicle. 18 March 2014. https://www.deccanchronicle.com/140318/nation-politics/article/congress-legislator-gummadi-kutuhalamma-joins-telugu-desam.
- ↑ "Kuthuhalamma: మాజీ మంత్రి కుతూహలమ్మ కన్నుమూత" (in Telugu). Andhra Jyothi. 15 February 2023. https://www.andhrajyothy.com/2023/andhra-pradesh/chittoor/former-minister-kuthuhalamma-passes-away-chittoor-andhrapradesh-suchi-1011413.html.