குரங்கு பெடல்
குரங்கு பெடல் (Kurangu Pedal) என்பது 2024 இல் கமலா கண்ணன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்நாடகத் திரைப்படத்தில் சந்தோசு வேல்முருகன், வி. ஆர். இராகவன், எம். ஞானசேகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்சு சார்பில் சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சஞ்சய் ஜெயகுமார், சுமீ பாஸ்கரன் ஆகியோர் தயாரித்தனர்.
' | |
---|---|
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | கமலா கண்ணன் |
தயாரிப்பு |
|
கதை | கமலா கண்ணன் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சுமீ பாசுகரன் |
படத்தொகுப்பு | சிவானந்தீசுவரன் |
கலையகம் | சிவகார்த்திகேயன் புரொடக்சன்சு |
வெளியீடு | 3 மே 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சந்தோசு வேல்முருகன் - மாரியப்பன்
- வி. ஆர். இராகவன்
- எம்.ஞானசேகர்
- இரதீசு
- சாய் கணேசு
- காளி வெங்கட் - கந்தசாமி
- பிரசன்ன பாலசந்தர் -
- சென்சன் திவாகர்
- தக்சனா - மாரியப்பனின் தங்கை
வரவேற்பு
தொகுதி டைம்சு ஆஃப் இந்தியா வின் லோகேசு பாலச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு 5 இற்கு 3 என்று மதிப்பிட்டு, "குரங்கு பெடல் உண்மையில் அதன் நுணுக்கமான கதாபாத்திர சித்தரிப்புகளும், ஈர்க்கக்கூடிய எழுத்துடன் ஒரு ஏக்கம் நிறைந்த பயணத்தையும், வழங்க வழிவகுக்கிறது" என்று கூறினார்.[1] இந்து தமிழ் திசையின் திரைப்பட விமர்சகர் ஒருவர், "இரண்டாம் பாதியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அதை மறந்து இரசிக்கலாம். இவ்வளவு எளிமையான, அழகான படத்தை உருவாக்கியதில் நடிகர் சிவகார்த்திகேயன் பெருமைப்படலாம்" என்று குறிப்பிட்டதோடு, படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் என்ற மதிப்பீட்டை வழங்கினார்.[2]
தி இந்து கோபிநாத் இராஜேந்திரன், இப்படம் "குழந்தைப் பருவ ஆசைகள் குறித்த சமநிலையற்ற திரைப்படம். ஆனால் மனதைத் தூண்டும் கதை" என்று கூறினார்.[3]
சினிமா விகடன் விமர்சகர் ஒருவர் கலவையான விமர்சனங்களை அளித்தார்.[4]
ஓடிடி பிளேயின் அனுசா சுந்தர் படத்திற்கு ஐந்தில் இரண்டரை நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு, "குரங்கு பெடல் பெரிய உணர்ச்சிகளை காட்டாத ஒரு படம்". என்று கூறினார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kurangu Pedal Movie Review : An earnest attempt that engages in parts". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kurangu-pedal/movie-review/109746880.cms.
- ↑ "திரை விமர்சனம்: குரங்கு பெடல்". Hindu Tamil Thisai. 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-05-09.
- ↑ Rajendran, Gopinath (2024-05-04). "'Kurangu Pedal' movie review: An off-balanced yet heart-warming tale on childhood aspirations" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/movies/kurangu-pedal-movie-review-an-off-balanced-yet-heart-warming-tale-on-childhood-aspirations/article68137365.ece.
- ↑ R, ஹரி பாபு,Srinivasan (2024-05-03). "Kurangu Pedal Movie Review | Vikatan Review | Kamala Kannan | Sivakarthikeyan". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2024-05-09.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Kurangu Pedal Movie Review: Nostalgic tale which needs more exploration". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-09.