குருக்கள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சிவாசாரியர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஆதி சைவர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தமிழகத்தில் சிவாகமங்களின்படி குருத்துவம், கோயில் பூஜை ஸ்தானிகம் போன்றவற்றை ஆதிகாலம்தொட்டு செய்யும் தூய தமிழ் அந்தணர் ஆகையால் ஆதி சைவர் எனப்பட்டனர்.
சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளிட்ட பெரும்பான்மை நாயன்மார் ஆதி சைவராவர். சேரமானால் அளிக்கப்பட்ட நாட்டினை சுந்தரமூர்த்தி ஆதி சைவருக்கு அளித்துச்சென்றார். அவ்வாதிசைவரே இன்றைய கொங்குநாட்டு குருத்துவம் பெற்றுள்ளனர்.[1][2]
இவர்கள் அன்றி, ஆகமங்களின்படி பூஜைகள் செய்ய மூவேந்தர்களால் நியமனமான பிற அந்தணர்களான சோழியர், மகா சைவர் என தனித்து வழங்கப்படுகின்றனர். இவருள் தில்லைவாழ் அந்தணர் ஒரு அகமணக்குழுவினர்.
ஆதி சைவர், மகா சைவர், திருச்செந்தூர் முக்காணியர் என்போர் ஆகம பூஜைகள் செய்யும் ஆதித்தமிழ் அந்தணராவர்.
வடமாள், பிருகச்சரணம் உள்ளிட்ட பிற குடியேற்ற பிராமணருக்கு ஆகமங்களில் தீட்சை அதிகாரம் இல்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Saivacharyas honoured". www.tamilartsacademy.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
- ↑ Pondheepankar (2009-09-30). "கொங்க குலகுருக்கள்: குலகுருவின் மகத்துவம்". கொங்க குலகுருக்கள். பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.