குருவிக்கரம்பை
குருவிக்கரம்பை (Kuruvikkarambai) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்தில் உள்ள ஒரு சிறியக் கிராமம்.[2][3] இது மாவட்டத் தலைநகரான தஞ்சாவூருக்குத் தெற்கே 68 கிமீ, சேதுபாவாசத்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 383 கி.மீ. தோலைவிலும் அமைந்துள்ளது.
குருவிக்கரம்மை | |
---|---|
கிராமம் | |
குருவிக்கரம்பை அஞ்சல் | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பேராவூரணி |
அரசு | |
• ஊராட்சி மன்றத் தலைவர் | எஸ். வைரவன் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,768[1] |
தமிழ் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | பட்டுக்கோட்டை/TN 49 |
இந்த ஊருக்கு, விவசாயம் முக்கிய ஆதாரமாக உள்ளது. சுற்றிலும் இருக்கும் தென்னை மரங்கள் இந்த ஊருக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றது.
குருவிக்கரம்பை வடக்கே பேராவூரணி வட்டம், பட்டுக்கோட்டை வட்டம்,கறம்பக்குடி வட்டத்தைக் கொண்டும் மற்றும் மேற்கே அறந்தாங்கி வட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. இது வங்காள விரிகுடாவிற்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் 'குருவிக்கரம்பை' சண்முகம் இந்த கிராமத்தை சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.census2011.co.in/data/village/639147-kuruvikarambai-i-tamil-nadu.html
- ↑ "KURUVIKKARAMBAI Village in THANJAVUR | eTamilNadu.org". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
- ↑ "Kuruvikarambai I Village Population - Peravurani - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.