குர்ஜா நகரம்
குர்ஜா (Khurja), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளபுலந்தசகர் மாவட்டதில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான புலந்தசகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. குர்ஜா நகரம் பீங்கான் மட்பாண்ட உற்பத்திக்கு புகழ்பெற்றது.
குர்ஜா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°15′8″N 77°51′6.41″E / 28.25222°N 77.8517806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | புலந்தசகர் |
தோற்றுவித்தவர் | முகலாயப் பேரரசு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,42,636 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 203131 |
தொலைபேசி குறியீடு எண் | (+91)5738 |
வாகனப் பதிவு | UP 13 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 27 வார்டுகளும், 21,548 வீடுகளும் கொண்ட குர்ஜா நகரத்தின் மக்கள் தொகை 121,207 ஆகும். அதில் ஆண்கள் 63,825 மற்றும் பெண்கள் 57,382 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 66.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 16,316 மற்றும் 40 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 58.11%, இசுலாமியர் 39.97%, சீக்கியர்கள் 0.25%, கிறித்தவர்கள் 0.24% மற்றும் பிறர் 1.43% ஆகவுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு