குளோரைல் புளோரைடு
குளோரைல் புளோரைடு (Chloryl fluoride) என்பது ClO2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக குளோரின் புளோரைடுகள் ஆக்சிசன் மூலங்களுடன் வினையில் ஈடுபடும்போது பக்கவிளைபொருளாக குளோரைல் புளோரைடு உருவாகிறது.[1] குளோரிக் அமிலத்தின் அசைல் புளோரைடாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குளோரின் ஈராக்சைடு புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13637-83-7 | |
ChemSpider | 123044 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139523 |
| |
பண்புகள் | |
ClFO2 | |
வாய்ப்பாட்டு எடை | 86.45 g·mol−1 |
அடர்த்தி | 3.534 கி/லி |
உருகுநிலை | −115 °செல்சியசு |
கொதிநிலை | −6 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகுளோரைல் புளோரைடு முதன்முதலில் 1942 ஆம் ஆண்டில் இசுமிட்சு மற்றும் சூமேக்கர் ஆகியோரால் கண்டறியப்பட்டது. குளோரின் ஈராக்சைடை புளோரினேற்றம் செய்து இவர்கள் குளோரைல் புளோரைடைத் தயாரித்தனர்.[2] சோடியம் குளோரேட்டு மற்றும் குளோரின் முப்புளோரைடு ஆகியவற்றின் எதிர்வினையால் குளோரைல் புளோரைடு மிகவும் வசதியாகத் தயாரிக்கப்படுகிறது.[3] வெற்றிடப் பின்னக் காய்ச்சி வடித்தலால் சுத்திகரிக்கப்படுகிறது. அதாவது இந்த உப்பை மற்ற பொருட்களிலிருந்து தனித்தனியாகத் தேர்ந்தெடுத்து ஒடுக்கப்படுகிறது. குளோரைல் புளோரைடு −6 °செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கும் வாயுவாகும்:
- 6 NaClO3 + 4 ClF3 → 6 ClO2F + 2 Cl2 + 3 O2 + 6 NaF
கட்டமைப்பு
தொகுO2F2 சேர்மத்திற்கு மாறாக, குளோரைல் புளோரைடு ஒரு பிரமிடு மூலக்கூறு கட்டமைப்பில் உள்ளது. இணைதிறன் கூடு எலக்ட்ரான் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை இக்கட்டமைப்பை கணித்துள்ளது. மாறுபட்ட கட்டமைப்புகள் ஆக்சிஜன் மற்றும் புளோரின் ஈந்தணைவிகள் நேர்மறை ஆக்சிசனேற்ற நிலைகளில் குளோரின் இருப்பதற்கான போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்புடைய Cl-O-F சேர்மமான பெர்குளோரைல் புளோரைடு, (ClO3F) நான்முகி வடிவத்தில் உள்ளது. தொடர்புடைய புரோமின் சேர்மமான புரோமைல் புளோரைடு (BrO2F) குளோரைல் புளோரைடு போன்ற அதே கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது, அதேசமயம் அயோடைல் புளோரைடு (IO2F) நிலையான நிலைமைகளின் கீழ் பல்லுரு பொருளை உருவாக்குகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Christe, K. O.; Wilson, R. D.; Schack, C. J. "Chloryl fluoride" Inorganic Syntheses, 1986, volume 24, pages 3–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-83441-6 https://onlinelibrary.wiley.com/doi/10.1002/9780470132555.ch2
- ↑ Schmitz, H.; Schumacheb, H. J. (1942-04-29). "Über eine neue Reaktion des Chlordioxyds. Die Bildung einer Verbindung der Formel ClO2F" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 249 (3): 238–244. doi:10.1002/zaac.19422490302. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786.
- ↑ Wiberg, Egon; Wiberg, Nils; Holleman, A. F. (2001). Inorganic chemistry. San Diego: Academic Press. p. 1797. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5. இணையக் கணினி நூலக மைய எண் 48056955.
- ↑ Holleman, A.F.; Wiberg, E.; Wiberg, N. (1995). Lehrbuch der anorganischen Chemie. de Gruyter. p. 501. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110126419. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.