கூந்தல் கயிறு

மாந்தரின் தலைமுடியால் திரிக்கப்பட்ட கயிற்றைக் கூந்தல் முரற்சி (அல்லது முரச்சி) என்று பரணர் பாடிய சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அரசன் நன்னன் இத்தகைய கயிற்றிணைப் பயன்படுத்தினானாம்.[1] அரசன் அறுகை உழிஞை சூடிப் போரிட்டான். மோகூர் மன்னன் பழையன் அவனைக் காட்டுக்கு ஓடும்படி விரட்டினான். அறுகை தலைமறைவாக வாழ்ந்துவந்தான். அறுகை கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனின் நண்பன். எனவே இந்தச் செங்குட்டுவன் நண்பனுக்காக மோகூரைத் தாக்கினான். வென்றான். மோகூர் மன்னன் காவல் மரமான வேம்பை வெட்டி வீழ்த்தினான். அந்த மரத்தால் தனக்கு முரசு செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான். வேப்ப மரத் துண்டைக் கயிற்றால் கட்டி யானையால் தன் நாட்டுக்கு இழுத்துவந்தான். இழுத்து வரும்போது கயிறு தேயாமல் இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகத் தேயாத மயிர்க் கயிற்றைப் பயன்படுத்தினான். போரில் தோற்று உயிரிழந்த பழையன் படையினரின் மகளிர் மொட்டை அடித்துக்கொண்ட கூந்தலைப் [2] பயன்படுத்தி இழுத்துவரும் கயிற்றைத் திரித்துக்கொண்டான். [3][4] இந்தக் கயிறு வலிமை மிக்கது. [5]

மேற்கோள்

தொகு
  1. பொற்புடை
    விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
    வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
    கூந்தல் முரற்சியின் கொடிதே (நற்றிணை 270 – பரணர் பாடல்)

  2. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
  3. பழையன் காக்கும் கரும்சினை வேம்பின்
    முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
    வால்இழை கழித்த நறும்பல் பெண்டிர் 15
    பல்இருங் கூந்தல் முரற்சியால்
    குஞ்சர ஒழுகை பூட்டி (பதிற்றுப்பத்து – பதிகம் 5

  4. நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை 10
    சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
    புலம்பெயர்ந்(து) ஒளித்த களையாப் பூசற்(கு) 5
    அரண்கடா உறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
    மோகூர் மன்னன் முரசம் கொண்டு
    நெடுமொழி பணித்(து)அவன் வேம்புமுதல் தடிந்து 15
    முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
    ஒழுகை உய்த்த (பதிற்றுப்பத்து 44 – பரணர் பாடல்)

  5. https://www.bloglikes.com/blogs/2016-09-26/sanne-visser-unveils-super-strong-rope-bags-made-from-human-hair[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூந்தல்_கயிறு&oldid=3433742" இலிருந்து மீள்விக்கப்பட்டது