கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை
கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை (ஆங்கிலம்: Kemuning–Shah Alam Highway; மலாய்: Lebuhraya Kemuning–Shah Alam) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எல்கேசா (LKSA) எனும் சுருக்கப் பெயரும் உண்டு.
Expressway 13 | |
---|---|
கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை Kemuning–Shah Alam Highway | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு புரோலின்தாசு; லிந்தாசான் சா ஆலாம் நிறுவனம் (Prolintas; Projek Lintasan Shah Alam) (LKSA) | |
நீளம்: | 7.3 km (4.5 mi) |
பயன்பாட்டு காலம்: | 2007 – |
வரலாறு: | 2010-இல் முடிக்கப்பட்டது; |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | சா ஆலாம், கூட்டரசு சாலை 2 சந்திப்பு (Federal Highway Route 2 Interchange) |
BSA | |
தெற்கு முடிவு: | கெமுனிங் சந்திப்பு சா ஆலாம் விரைவுச்சாலை |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | சா ஆலாம், ஆலாம் இம்பியான், கோத்தா கெமுனிங், புக்கிட் ரீமாவ், கிள்ளான் மாநகரம், கிள்ளான் துறைமுகம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
7.3 km (4.5 mi) தொலைவு கொண்ட கெமுனிங்–சா ஆலாம் விரைவுச்சாலை, கோத்தா கெமுனிங் அருகே, E5 சா ஆலாம் விரைவுச்சாலையை (Shah Alam Expressway) கெமுனிங் சந்திப்பில் (Federal Highway Route 2 Interchange) இணைக்கிறது. பின்னர் கூட்டரசு சாலை 2-இன் (Federal Highway Route 2) வழியாக கிள்ளான் நகரம் வரைக்கும் செல்கிறது.
இதற்கு முன்பு எனும் வழிக் குறியீடு வழங்கப்பட்டது, ஆனால் பின்னர் என மாற்றப்பட்டது. மற்றும் அதன் பழைய எனும் வழிக் குறியீடு தெற்கு கெடா விரைவுச்சாலைக்கு (South Kedah Expressway) பயன்படுத்தப் படுகிறது.
வரலாறு
தொகுகெமுனிங்–சா ஆலாம் விரைவுச்சாலை கட்டுமானம் 2007-இல் தொடங்கியது. இந்த விரைவுச்சாலை பெர்சியாரான் சுல்தான் (Persiaran Sultan) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரைவுச்சாலை, சா ஆலாம் நகரத்தையும் சா ஆலாம் பிரிவு 24 வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கியது.
இது சா ஆலாம் மாநகராட்சி (MBSA) (Shah Alam City Council) நிர்வாக எல்லைக்குள் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமானங்கள் 2010-ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் நிறைவு அடைந்தன. 18 மே 2010-இல் இந்த விரைவுச்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.