கேசனி தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், கங்கனி ஊராட்சிக்குட்பட்ட சிற்றூர் ஆகும்[4]. கப்பலூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. கப்பலூரிலிருந்து ஏம்பல் செல்லும் சாலையை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளது.

கேசனி
—  சிற்றூர்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கு 2016 நிலவரப்படி மொத்தம் 35 வீடுகளே உள்ளன. இவர்கள் அனைவரும் முக்குலத்தோரில் ராஜகுல அகமுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள். இந்தக் கிராமத்தில் வேறு ஜாதியினர் யாரும் இல்லை. இங்குள்ள மக்களின் பூர்வீகம் ராமநாதபுரம் எனக் கருதப்படுகிறது. ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிதான் இவர்களின் குலதெய்வம்.

தற்போது ஏரியாக இருக்கும் கண்மாய்ப் பகுதியின் வடபகுதியில் பெரும் கல் மண்டங்கள் புதைந்த நிலையில் உள்ளன. கல்லால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு சிலைகள், தேர்ச் சக்கரங்கள் கண்மாய்க்குள் புதைந்த நிலையில் உள்ளன. கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் வாசிக்கும் நிலையில் இல்லை.

விவசாயம் மட்டுமே பூர்வீகத் தொழில்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015., பக்கம் 1854
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசனி&oldid=2027818" இலிருந்து மீள்விக்கப்பட்டது