கே. ஏ. கிருஷ்ணசாமி

இந்திய அரசியல்வாதி
(கே.ஏ.கிருஷ்ணசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே.ஏ.கிருஷ்ணசாமி (K.A.Krishnaswamy மார்ச் 24, 1932 - மே 18, 2010) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு அமைச்சராக பணியாற்றியவர்.

கே.ஏ.கிருஷ்ணசாமி
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்
தொகுதிஆயிரம் விளக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-03-24)மார்ச்சு 24, 1932 [1]
கணியூர்,திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புமே 18, 2010(2010-05-18) (அகவை 78)
சென்னை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்புனிதவதி
பிள்ளைகள்அருண், முகில்,மாங்கனி, கயல்விழி
வாழிடம்சென்னை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணியூரில் பிறந்தார். இவரது மனைவி பெயர் புனிதவதி. இவருக்கு அருண், முகில் என்ற இரு மகன்களும், மாங்கனி, கயல்விழி என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது அண்ணன் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கே. ஏ. மதியழகன்.

அரசியலில்

தொகு

கே.ஏ.கே. என அழைக்கப்படும் கே. ஏ. கிருஷ்ணசாமி திராவிட மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். ஒருமுறை 1972 - 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், மூன்றுமுறை 1980, 1984, மற்றும் 1991ல் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றினார்.

புரட்சித்தலைவர் என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆருக்கு கே. ஏ. கிருஷ்ணசாமி வழங்கினார்.

ஆதாரம்

தொகு
  1. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/k.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._கிருஷ்ணசாமி&oldid=3943457" இலிருந்து மீள்விக்கப்பட்டது