கே. அரிகரன்

இந்திய திரைப்பட இயக்குநர்

கே. அரிகரன் (K. Hariharan (director)) என்பவர் தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். தற்போது இவர் க்ரியா பல்கலைக்கழகத்தில் திரைப்பட ஆய்வுகள் பேராசிரியராக உள்ளார். மகாராட்டிர மாநிலம் பம்பாயில் பிறந்த இவரது தந்தை எச். கிருஷ்ணன் ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான அரிகரன் 1976 ஆம் ஆண்டு காசிராம் கொத்தவால் என்ற ஒரு சோதனைத் திரைப்படத்தை உருவாக்குவதற்காக தனது உடன் பயின்ற தோழர்களுடன் இணைந்து "யுக்ட் பிலிம் கோ-ஆப்பரேட்டிவ்" என்ற கூட்டுறவை உருவாக்கினார். இவர் தமிழ் திரைப்பட்டமான ஏழாவது மனிதன், திரைப்படத்தில் இயக்கினார். அப்படம் தமிழில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. மேலும் மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் செயின்ட் ஜார்ஜ் (சிறந்த திரைப்படம்) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கே. அரிகரன்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பேராசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
44
வாழ்க்கைத்
துணை
டாக்டர் ரமா அரிகரன்
விருதுகள்சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது 1983

வாழ்க்கை

தொகு

அரிகரன் மகாராட்டிர மாநிலம் பம்பாயில் பிறந்தார். பம்பையில் உள்ள போடர் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்கம் குறித்த படிப்புக்கு இணைந்தார்.[1][2] இவரது தந்தை, எச் கிருஷ்ணன் ஒரு தகுதிவாய்ந்த ஒளிப்பதிவாளராவார். அவர் ஈஸ்ட்மேன் கோடாக்கின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[2] திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளிவந்த பிறகு, அரிகரன் தனது கல்லூரித் தோழர்களுடன் சேர்ந்து "யுக்ட் பிலிம் கோ-ஆப்பரேட்டிவ்" என்ற கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கினார். அக்குழுவில் சயீத் அக்தர் மிர்சா, கமல் சுவரூப் மற்றும் அவர்களது திரைப்பட கல்லூரியின் மூத்த முன்னாள் மாணவர் மணி கவுல் ஆகியோர் அடங்குவர்.[3] இந்த கூட்டுறவு நிறுவனமானது மராத்தியில் காசிராம் கொத்தவால் என்ற ஒரு சோதனைத் திரைப்படத்தை உருவாக்கியது.[4][5] இத்திரைப்படத்தை "ஒரு மறைமுகக் கலை என்று விவரித்து, 1978 இல் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் நுழைந்தது.[6] எண்ணியல் முறையில் மீட்டெடுக்கப்பட்ட பிறகு 2014 திரைப்பட விழாவில் அப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.[2] அதன் பிறகு இவர் வி. சாந்தராமின் வற்புறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார், இதன் மூலம் வான்டட் தங்கராஜ் (1979) திரைப்படத்தை இயக்கினார், இதன் வழியாப தமிழில் திரைப்பட இயக்குனராகவும் அறிமுகமானது.[6] படம் வெளியான பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்து தமிழ் படங்களில் பணியாற்றத் தொடங்கினார். ரகுவரன் அறிமுகமான இவரது எழாவது மனிதன், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும், ஆப்ரோ-ஆசிய ஒற்றுமை விருதையும் வென்றது.[2][5] 35வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் செயின்ட் ஜார்ஜ் (சிறந்த திரைப்படம்) விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.[7] 1991 ஆம் ஆண்டில், ஓம் பூரி மற்றும் தீப்தி நவால் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த கரண்ட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படமானது, இந்திய விவசாயிகளின் துயரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இவர் வார்சா திரைப்பட விழா, தாலின் சர்வதேச திரைப்பட விழா, சினிமாலயா திரைப்பட விழா, ஜியோஞ்சு திரைப்பட விழா, IFFK திருவனந்தபுரம், இந்திய தேசிய திரைப்பட விருதுகள் போன்ற பல திரைப்பட விழாக்களில் நடுவர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளார்.

அரிகரன் டாக்டர் ரமா அரிகரனை மணந்து சென்னையில் வசிக்கிறார். சென்னை எல்வி பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்குநராக இருந்தார். கிரியா பல்கலைக்கழகத்தில் படைப்பாக்கக் கலைப் பேராசிரியராகவும், மீடியா ஆய்வகத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி, மற்றும் பென்சில்வேனியா மற்றும் மியாமி பல்கலைக்கழகங்களில் வருகைதரு ஆசிரியர் ஆவார்.[4] இவர் சென்னை எல். வி. பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் இயக்குநரும், ஐதராபாத்தில் உள்ள மகிந்திரா எகோல் சென்ட்ரலில் துறைத் தலைவரும் ஆவார். அரியானாவின் சோனேபத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணியைச் செய்த பிறகு, 2021 பிப்ரவரி வரை கே. ஆர். இ. ஏ. பல்கலைக்கழகத்தில் ஊடக ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார். பெங்களூரில் உள்ள Dharithree மற்றும் கணியம்பாடியில் உள்ள கார்டன் ஆஃப் பீஸ் பள்ளியின் பரணிடப்பட்டது 2022-02-08 at the வந்தவழி இயந்திரம் அறங்காவலராக, மேம்பட்ட எண்ணியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வேலூர் தற்போது இரண்டு கிராமப்புற பள்ளிகளின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறையை மேம்படுத்தி வருகிறார்.

திரைப்படவியல்

தொகு

விருதுகள்

தொகு
பெற்றது
பரிந்துரைக்கப்பட்டது

குறிப்புகள்

தொகு
  1. "Dubashi (The Translator)". Children's Film Society of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 "Merging with the mainstream" இம் மூலத்தில் இருந்து 4 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140504140210/http://www.hindu.com/2000/07/09/stories/1309078m.htm. பார்த்த நாள்: 1 July 2013. 
  3. "Five films from FTII kitty for 64th Berlin film fest". http://timesofindia.indiatimes.com/city/pune/Five-films-from-FTII-kitty-for-64th-Berlin-film-fest/articleshow/29966880.cms. பார்த்த நாள்: 23 November 2014. 
  4. 4.0 4.1 "Dubashi (The Translator)". Children's Film Society, India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
  5. 5.0 5.1 "30th National Film Awards". Directorate of Film Festivals. p. 24. Archived from the original (PDF) on 3 October 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
  6. 6.0 6.1 "Lessons from cinema" இம் மூலத்தில் இருந்து 4 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140504140212/http://www.hindu.com/mp/2010/05/15/stories/2010051553670800.htm. பார்த்த நாள்: 1 July 2013. 
  7. "35th Moscow Film Festival -1983". Moscow International Film Festival. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அரிகரன்&oldid=3718139" இலிருந்து மீள்விக்கப்பட்டது