கே. சி. லோகேசுவரன்
கணபதிப்பிள்ளை கதிரவேல்பிள்ளை லோகேசுவரன் (Kanapathipillai Cathiravelpillai Logeswaran) இலங்கைத் தமிழ் அரச அதிகாரியாவார். இவர் மேல் மாகாண ஆளுநராகப் பணியாற்றினார். தற்போது மேல் மாகாண ஆளுநராக 2018 ஏப்ரல் 12 முதல் பொறுப்பேற்றுள்ளார்.[1]
கே. சி. லோகேஸ்வரன் K. C. Logeswaran | |
---|---|
10-வது வடமேல் மாகாண ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | அமரா பியசீலி இரத்திநாயக்கா |
6வது மேல் மாகாண ஆளுநர் | |
பதவியில் 23 சனவரி 2015 – 11 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | அலவி மௌலானா |
பின்னவர் | ஏமகுமார நாணயக்காரா |
தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் | |
பதவியில் டிசம்பர் 1999 – பெப்ரவரி 2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
முன்னாள் கல்லூரி | இலங்கைப் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசு அதிகாரி |
ஆரம்ப வாழ்க்கை
தொகுலோகேசுவரன் யாழ்ப்பாணம், பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர்.[2][3] பள்ளிப் படிப்பை அடுத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4]
பணி
தொகுபட்டப் படிப்பின் பின்னர் லோகேசுவரன் இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.[3] இலங்கையின் வவுனியாவில் 1963 முதல் 1968 வரை பல்வேறு பிரதேச செயலகங்களில் பணியாற்றினார்.[5] 1980 முதல் 1981 வரை யாழ் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றினார்.[4] 1981 அக்டோபரில் வவுனியா மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக 1988 சூலை வரை பணியாற்றினார்.[6] பின்னர் இலங்கைத் தேசியக் காவல்படையின் ஆணையத்தின் செயலர், இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர், இலங்கை நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் எனப் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மூத்த அரச அதிகாரியாகப் பணியாற்றினார்.[3][4][7] 1999 இல் தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு, 2003 பெப்ரவரி வரை மணியாற்றினார்.[4][8]
ஆளுநர்
தொகு2015 சனவரி 23 அன்று இலங்கையின் புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன லோகேசுவரனை மேல் மாகாண ஆளூநராக நியமித்தார்.[9][10] 2018 ஏப்ரல் 12 இல் வடமேற்கு மாகாண ஆளுநராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "7 new Governors take oath before President". நியூஸ் ரேடியோ. 12-04-2018. பார்க்கப்பட்ட நாள் 13-04-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Sivathasan, S. (10 ஆகத்து 2013). "My Reminiscences Of St. John’s College, Jaffna". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/my-reminiscences-of-st-johns-college-jaffna/.
- ↑ 3.0 3.1 3.2 "SLT Lanka Bell merger off". சண்டே ஒப்சர்வர். 29 பெப்ரவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924112029/http://www.sundayobserver.lk/2004/02/29/bus06.html.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Annual Report 2003". ஸ்ரீ லங்கா டெலிகொம்.
- ↑ Wijayadasa, K. H. J. (21 சூலை 2013). "DRO (1939 – 1963) Man for All Seasons". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053322/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84019.
- ↑ "Former Government Agents, Vavuniya District". Vavuniya District Secretariat. Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-26.
- ↑ Hadjirin, Arshad M. (9 மார்ச் 1997). "Postmasters hit by hike". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/970309/newsm.html.
- ↑ "Welfare Benefits Board gets new Head". டெய்லிநியூஸ். 28 அக்டோபர் 2003. http://archives.dailynews.lk/2003/10/28/new30.html.
- ↑ "Three new governors appointed". டெய்லிமிரர்]. 23 சனவரி 2015. http://www.dailymirror.lk/62019/oneryner.
- ↑ "New Governors". டெய்லிநியூஸ். 24 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150125140829/http://www.dailynews.lk/?q=local/new-governors.
- ↑ "New Governors take oaths before President Sirisena". The Sunday Times. sundaytimes.lk. 12-04-2018. http://www.sundaytimes.lk/article/1042054/new-governors-take-oaths-before-president-sirisena. பார்த்த நாள்: 12-04-2018.