க. வி. தேவநாயகம்

(கே. டபிள்யூ. தேவநாயகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் (Kanapathipillai William Devanayagam, 26 மார்ச்சு 1910 – 17 டிசம்பர் 2002) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.

கே. டபிள்யூ. தேவநாயகம்
K. W. Devanayagam

நாஉ
KWDevanayagam.jpg
நிதி அமைச்சர்
பதவியில்
23 சூலை 1977 – பெப்ரவரி 1980
பின்வந்தவர் நிசங்கா விஜேரத்தின
உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
பெப்ரவரி 1980 – 18 பெப்ரவரி 1989
கல்குடா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1965–1989
முன்னவர் பி. மாணிக்கவாசகம்
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 26, 1910(1910-03-26)
செங்கலடி, மட்டக்களப்பு
இறப்பு 17 திசம்பர் 2002(2002-12-17) (அகவை 92)
கொழும்பு
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் சென் யோசப் கல்லூரி, கொழும்பு
இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் கத்தோலிக்கர்
இனம் இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கைதொகு

தேவநாயகம் 1910 மார்ச் 26 இல்[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே செங்கலடி என்ற கிராமத்தில் உடையார் குடும்பத்தில் கணபதிப்பிள்ளை வில்லியம், பியற்றிஸ் தங்கம் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[2] இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, கொழும்பு சென் யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[3][4] விளையாட்டில் ஈடுபாடு கொண்ட தேவநாயகம், 1930 ஆம் ஆண்டில் பாடசாலைத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார். கிழக்கிலங்கை டென்னிசு சம்பியன் பட்டத்தை வென்றார்.[3][4] பள்ளிப் படிப்பை முடித்தது, இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து வழக்கறிஞரானார்.[3] பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[3][4]

அரசியலில்தொகு

1947 நாடாளுமன்றத் தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் வி. நல்லையாவிடம் 2,400 வாக்குகளால் தோற்றார்.[5] 1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 6,566 வாக்குகள் பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[6] 1970 1977 தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.[7][8]

அமைச்சரவையில்தொகு

1977 சூலையில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9] பின்னர் 1980 பெப்ரவரியில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][10] 1989 வரை அவர் இப்பதவில் இருந்தார். 1989 இறுதிப் பகுதியில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார்.[2]

சமூகப் பணிதொகு

தேவநாயகம் அனைத்திலங்கை கூட்டுறவு சங்கங்களின் பிரதித் தலைவராக இருந்தார். இவரின் பெயரில் மட்டக்களப்பு நகரில் 'தேவநாயகம் மண்டபம்' நிறுவப்பட்டது. இவரது அரசியல் செல்வாக்கினால் மட்டக்களப்பில் வந்தாறுமூலையில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது.

கலாநிதிப் பட்டம்தொகு

தேவநாயகத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 ஏப்ரலில் (மறைவிற்குப் பின்னரான) கௌரவக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]

மறைவுதொகு

தேவநாயகம் 2002 டிசம்பர் 17 இல் கொழும்பில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

  1. "Devanayagam, Kanapathipillai William". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 அமரர் கே.டபிள்யு+. தேவநாயகத்துக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கலாநிதிப் பட்டம்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், 10 மே 2013
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Ex-Justice Minister Devanayagam dies". தி ஐலண்டு]]. 18 டிசம்பர் 2002. Archived from the original on 2016-03-04. https://web.archive.org/web/20160304050351/http://www.island.lk/2002/12/18/news22.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Perera, Supun (23 சனவரி 2003). "K. W. Devanayagam - the gentle politician". டெய்லி நியூஸ். Archived from the original on 13 மே 2007. https://web.archive.org/web/20070513212247/http://www.dailynews.lk/2003/01/23/fea07.html. 
  5. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-18 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2015-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-18 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-18 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  8. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-18 அன்று பார்க்கப்பட்டது.
  9. Rajasingham, K. T.. "Chapter 25: War or peace?". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-04-16. https://web.archive.org/web/20020416074026/http://www.atimes.com/ind-pak/DB02Df03.html. பார்த்த நாள்: 2013-08-18. 
  10. Rajasingham, K. T.. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. https://web.archive.org/web/20020622185747/http://www.atimes.com/ind-pak/DB16Df06.html. பார்த்த நாள்: 2013-08-18. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வி._தேவநாயகம்&oldid=3547269" இருந்து மீள்விக்கப்பட்டது