கொண்டை வல்லூறு

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Aviceda|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கொண்டை வல்லூறு[2] ( Aviceda jerdoni ) என்பது மிதமான அளவிலான ஒரு பழுப்பு நிற பருந்து ஆகும். இதன் தலையில் உள்ள கருத்த வெள்ளை முனையோடு கூடிய கொண்டையைக் கொண்டு இதனை எளிதாக அடையாளம் காணலாம்.[3] இது தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. இது தெராய் மலையடிவாரத்தில் வாழ்கிறது. மேலும் பசுமையான காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் அரிதாக காணப்படுகிறது.[3]

கொண்டை வல்லூறு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Aviceda
இனம்:
இருசொற் பெயரீடு
Aviceda jerdoni
(பிளைத், 1842)

இதன் பொதுப் பெயரான ஜெர்டன் பசா மற்றும் லத்தீன் இருசொல் பெயரீடானது அறுவை சிகிச்சை நிபுணர் தாமஸ் சி. ஜெர்டனை நினைவுப்படுத்துவதாக உள்ளது.[4]

விளக்கம்

தொகு

அண்டங் காக்கை அளவுள்ள இது இது சுமார் 46 செ.மீ நீளம் இருக்கும். இதை பறக்கும் நிலையில் பார்க்கும்போது கிரெஸ்டட் கோஷாக் அல்லது குடுமிப் பருந்து என குழப்பம் ஏற்படும். ஆனால் இதன் நீண்ட நேரான கொண்டை, மிகவும் பரந்த, வட்டமான துடுப்பு வடிவ இறக்கைகள்,[3] பெரும்பாலும் வெளிறிய அடிப்பகுதி, வெள்ளைக் கன்னம் போன்றவற்றால் வேறுபடுகிறது.[5]

இது பரவியுள்ள பெரிய பகுதிக்குள் பல கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் கீழ்கண்டவை அடங்கும்:[6]

  • ஏ. ஜே. ஜெர்டோனி (பிளைத், 1842) – சிக்கிம் முதல் அசாம், பர்மா, சுமத்ரா
  • ஏ. ஜே. சிலோனென்சிஸ் (லெக், 1876) - தென் இந்தியா மற்றும் இலங்கை
  • ஏ. ஜே. போர்னென்சிஸ் (ஷார்ப், 1893) - போர்னியோ
  • ஏ. ஜே. மாக்னிரோஸ்ட்ரிஸ் (காப், 1847) - லூசன், மிண்டானாவ்
  • ஏ. ஜே. லுகோபியாஸ் (ஷார்ப், 1888) - ரோம்ப்லான், சமர், பலவான்
  • ஏ. ஜே. செலிபென்சிஸ் (ஸ்க்லெகல், 1873)

பரவல்

தொகு

இது வட இந்தியாவின் தெராய் மற்றும் கிழக்கு நேபாளம் மற்றும் வங்காள துவாரிலிருந்து அசாம் பள்ளத்தாக்கு வரையிலான கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் வசிக்கின்றது. மேலும் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், இலங்கை, வங்காளதேசம்,[7] பர்மா, தாய்லாந்து,[5] 1] [5] சுமாத்திரா,[8] சிங்கப்பூர் [9] பிலிப்பீன்சு [10] போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது.

பழக்கவழக்கங்கள்

தொகு

இவை காலை, மாலை அந்திவேளையில் இணையாக வெளிப்பட்டு இரை தேடும். எப்போதாவது, 3 முதல் 5 வரையிலான சிறிய குடும்ப கூட்டப் பறவைகளாக காடுகளின் விளிம்பிற்கு அருகில் பறக்கும்.[5] இந்தப் பறவைகள் கூட்டின் அருகே 'உயர்ந்து விரைவாக இறக்கையடித்து பறக்கும்' ஆற்றல் வாய்தவை.[3] இனப்பெருக்க காலம் வாழும் பகுதிக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் இப்பறவைகள் பொதுவாக ஏப்ரல், மே போன்ற சில சில மாதங்கள் தவிர கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் என அறியப்படுகிறது.[5] இவற்றின் உணவில் பல்லிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பெரிய பூச்சிகள் அடங்கும். இன்றைய குர்சியோங்கில் சேகரிக்கப்பட்ட இதன் ஒரு மாதிரியின் வயிற்றில் அகமிட் பல்லி, ஜபாலுரா வேரிகாட்டா, பல நீளமான வண்டுகள், கும்பிடுபூச்சி போன்றவற்றின் பாகங்கள் இருந்தன.[11]

காட்சியகம்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aviceda jerdoni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2020). "Aviceda jerdoni". IUCN Red List of Threatened Species 2020: e.T22694956A181759887. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22694956A181759887.en. https://www.iucnredlist.org/species/22694956/181759887. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 43–44.
  3. 3.0 3.1 3.2 3.3 Rasmussen, PC & Anderton JC 2005.
  4. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 180–181.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Ali, S & Ripley, SD 1983.
  6. Peters, James Lee (1931). Check-list of birds of the world. Volume 1. Cambridge: Harvard University Press. pp. 195–196.
  7. Bird Checklist of Bangladesh from the Website of Bangladesh Biodiversity Research Group Link பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  8. Buij, R. 2003 Breeding behaviour of Jerdon’s Baza Aviceda jerdoni at Gunung Leuser National Park, Sumatra, Indonesia: the first nesting record for Sumatra.
  9. Chan, YM, Wang, LK & We, YC (2007) Jerdon's Baza Aviceda jerdoni in Singapore.
  10. del Hoyo, J., Elliot, A. and Sargatal, J. (1994) Handbook of the birds of the world.
  11. D'abreu ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_வல்லூறு&oldid=3929280" இலிருந்து மீள்விக்கப்பட்டது