கொழுப்பு உடல்
கொழுப்பு உடல் (Fat body) என்பது முதன்மையாகச் சேமிப்பு உயிரணுக்களால் ஆன மாறக்கூடிய தன்மையுடைய பூச்சி திசு ஆகும். இது பூச்சியின் உட்புற உடல் குழி முழுவதும் (கீமோசீல்) கீமோலிம்ப் மற்றும் மேற்றோல், செரிமான உறுப்புகள் மற்றும் சூலகம் போன்ற உறுப்புகளுக்கு அருகில் காணப்படுகின்றன. ஊட்டக்கூறு சேமிப்பு மற்றும் வளர்சிதை மாற்றமே இதன் முக்கிய செயல்பாடுகளாகும். இதற்காக இவை பொதுவாகப் பாலூட்டிகளில் உள்ள கொழுப்பு திசு மற்றும் கல்லீரலின் கலவையுடன் ஒப்பிடப்படுகிறது. இருப்பினும், இது இயக்குநீர் ஒழுங்குபாடு, நோய்த்தடைக் காப்பு, கருவுணவாக்கம், நுண்ணுயிர் எதிர்பொருள் மூலக்கூறுகளின் உற்பத்தி தளம் போன்ற பல்வேறு பிற பணிகளில் உதவக்கூடும்.[1]
இதன் இருப்பு, கட்டமைப்பு, உயிரணு கலவை, இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் பூச்சிகளிடையே பேரினத்திற்குப் பேரினம் வேறுபடுவதுடன், ஒரே பேரினத்தின் வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையிலும் அல்லது ஒரு சிற்றினத்தின் வளர் நிலைகளுக்கு இடையில் கூட வேறுபடுகின்றன.
செயல்பாடுகள்
தொகுகொழுப்பு உடல் கொழுப்பு சேமிப்பு மற்றும் வளர்சிதை மாற்றம், நாளமில்லா சுரப்பி கட்டுப்பாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் உதவுகிறது. கொழுப்பு உடலில் மைசிட்டோசைட்டுகள் எனப்படும் சிறப்பு உயிரணுக்கள் உள்ளன. இவை இவற்றுக்குள் வாழும் இணைவாழ்வு வாழும் நிலைக்கருவிலிகளைக் கொண்டுள்ளன.[2] கொழுப்பு உடல் குறியீடுகள் எனப்படும் ஒழுங்குமுறை மூலக்கூறுகள் மூலம் கொழுப்பு உடல் பூச்சிகளின் வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை ஒழுங்குபடுத்துகிறது.[3]
வளர்ச்சி
தொகுகொழுப்பு உடல் கருவளர்ச்சியின் போது மைய அடுக்கிலிருந்து தோன்றுகின்றது. பொதுவாக மெல்லிய தாள்கள், நாடாக்கள் அல்லது சிறிய முடிச்சுகள் ஆகியவற்றின் வலையமைப்பால் ஆனது. இது குருதிக்குழியில் இணைப்பு திசு மற்றும் மூச்சுக்குழாய் மூலம் தொடர்புடையது. இதனால் இதன் பெரும்பாலான உயிரணுக்கள் குருதி நிணநீர் நேரடி தொடர்பில் உள்ளன.[4][5][6]
பிற கணுக்காலிகள்
தொகுகொழுப்பு உடல் குறித்து பூச்சிகளில் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது கெலிசரேட்டா, ஓடுடைய கணுக்காலி மற்றும் மிரியபோடாவின் அனைத்து முக்கிய வகுப்புகளிலும் காணப்படும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Arrese, Estela L.; Soulages, Jose L. (1 January 2010). "Insect Fat Body: Energy, Metabolism, and Regulation". Annual Review of Entomology 55 (1): 207–225. doi:10.1146/annurev-ento-112408-085356. பப்மெட்:19725772.
- ↑ Skowronek, Patrycja; Wójcik, Łukasz; Strachecka, Aneta (June 2021). "Fat Body—Multifunctional Insect Tissue" (in en). Insects 12 (6): 547. doi:10.3390/insects12060547. பன்னாட்டுத் தர தொடர் எண்:2075-4450. பப்மெட்:34208190.
- ↑ Li, Sheng; Yu, Xiaoqiang; Feng, Qili (7 January 2019). "Fat Body Biology in the Last Decade" (in en). Annual Review of Entomology 64 (1): 315–333. doi:10.1146/annurev-ento-011118-112007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-4170. பப்மெட்:30312553. https://www.annualreviews.org/doi/full/10.1146/annurev-ento-011118-112007.
- ↑ 4.0 4.1 Coons, Lewis B. (December 2013). Biology of ticks. pp. 287–308.
- ↑ Chapman, R.F. The Insects: Structure and Function. pp. 132–145.
- ↑ Cohen, Ephraim. Encyclopedia of Insects. pp. 356–357.