கோடா
கோடா (Godda) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள கோடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஜார்கண்ட் மாநிலத்தின் பட்டு நகரம் எனப்பெயர் பெற்றது. இது மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கே 328 கிலோ மீட்டர் தொலைவிலும், இதன் தென்மேற்கில் தன்பாத் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜார்கண்ட்-பிகார் மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 133 கோடா நகரம் வழியாகச் செல்கிறது.
கோடா | |
---|---|
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் கோடா நகரத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°50′N 87°13′E / 24.83°N 87.22°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | கோடா |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.59 km2 (3.32 sq mi) |
ஏற்றம் | 87 m (285 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 48,480 |
• அடர்த்தி | 5,600/km2 (15,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 814133 |
தொலைபேசி குறியீடு | 06422 |
வாகனப் பதிவு | JH-17 |
இணையதளம் | godda |
அமைவிடம்
தொகுகோடா நகரம் 24°50′N 87°13′E / 24.83°N 87.22°E பாகையில்,[1] கடல் மட்டத்திலிருந்து 77 மீட்டர் (252 அடி) உயரத்தில் இராஜ்மகால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இதனருகே இராஜ்மகால் நிலக்கரி வயல்கள் அமைந்துள்ளன.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 20 வார்டுகளும், 8,969 வீடுகளும் கொண்ட கோடா பேரூராட்சியின் மக்கள் தொகை 48,480 ஆகும். இதில் ஆண்கள் 25,707 பேர்; பெண்கள் 22,773 பேர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.3% ஆகவுள்ளது. இதன் மக்கள்தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,796 மற்றும் 1,971 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.85%, இசுலாமியர் 22.56%, கிறித்தவர்கள் 0.89% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[2]
பொருளாதாரம்
தொகுஇந்நகரத்தைச் சுற்றி நெல், கோதுமை, சிறுதானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்நகரத்தைச் சுற்றி நிலக்கரி வயல்கள் உள்ளது. இதனால் இந்நகரத்தில் இரும்பாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்கள் அதிகம் உள்ளது.[3][4][5]
இணைப்புப் பாதைகள்
தொகுதேசிய நெடுஞ்சாலை எண் 133 மற்றும் இருப்புப் பாதைகள் கோடா நகரை பிற இந்திய நகரங்களுடன் இணைக்கிறது. கோடா தொடருந்து நிலையத்திலிருந்து ஏப்ரல் 8, 2021 முதல் பாகல்பூர், கயா வழியாக தில்லிக்கு புதிய விரைவுவண்டி துவங்கப்பட்டது.[6] மேலும் ராஞ்சி போன்ற நகரங்களுக்கும் தொடருந்துகள் செல்கின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Godda
- ↑ Godda Population, Religion, Caste, Working Data Godda, Jharkhand - Census 2011
- ↑ Majumdar, Rakhi (2013-04-30). "JSPL to come up with 1320 MW thermal power plant at Godda". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/energy/power/jspl-to-come-up-with-1320-mw-thermal-power-plant-at-godda/articleshow/19800964.cms?from=mdr.
- ↑ Chandrasekhar, Aruna. "In final days of Modi government, Adani project in Jharkhand becomes India's first power sector SEZ". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "The best site". www.esselmining.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "Indian Railways launches Hansdiha-Godda new line in Jharkhand; starts Godda-New Delhi Humsafar special train".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Godda Railway Station
வெளி இணைப்புகள்
தொகு- Godda Administration Website பரணிடப்பட்டது 2017-12-29 at the வந்தவழி இயந்திரம்