கோடாட் (Kodad), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் மண்டலின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[3][4] இது மாவட்டத் தலைமையிடமான சூர்யபேட்டைக்கு தென்கிழக்கே 44 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை எண் 65-இல் ஐதராபாத்திற்கும், விஜயவாடாவிற்கும் இடையே உள்ளது.

கோடாட்
நகரம்
கோடாட் is located in தெலங்காணா
கோடாட்
கோடாட்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கோடாட் நகரத்தின் அமைவிடம்
கோடாட் is located in இந்தியா
கோடாட்
கோடாட்
கோடாட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°59′52″N 79°57′55″E / 16.99778°N 79.96528°E / 16.99778; 79.96528
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
மாவட்டம்சூரியபேட்டை
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கோடாட் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்31.19 km2 (12.04 sq mi)
ஏற்றம்[1]114 m (374 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்65,234
 • அடர்த்தி2,100/km2 (5,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்508 206
தொலைபேசி குறியீடு எண்+91–8683
வாகனப் பதிவுTS-29
எழுத்தறிவு74.12%

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 15,879 வீடுகள் கொண்ட கோடாட் நகரத்தின் மக்கள் தொகை 64,234 ஆகும். அதில் ஆண்கள் 32,010 மற்றும் 32,224 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,309 மற்றும் 3,583 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.65%, இசுலாமியர் 15.46%, கிறித்தவர்கள் 1.54% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர். [5]

போக்குவரத்து தொகு

இதன் அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த விஷ்ணுபுரம் தொடருந்து நிலையம் ஆகும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Elevation for Pedakurapadu". Veloroutes. பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
  2. "Cities, Towns and Outgrowth Wards". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.
  3. "District Census Handbook - Nalgonda" (PDF). Census of India. p. 13,476. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
  4. "Suryapet district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2016.
  5. Kodad Population, Religion, Caste, Working Data Nalgonda, Andhra Pradesh - Census 2011
  6. VNUP/Vishnupuram Railway Station


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடாட்&oldid=3574076" இலிருந்து மீள்விக்கப்பட்டது