கோண்டுவானா (இந்தியா)

கோண்டுவானா (Gondwana) மத்திய இந்தியாவின் ஒரு புவியியல் பகுதியாகும். இப்பகுதியின் கோண்டு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இப்பிரதேசத்திற்கு கோண்டுவானா எனப்பெயர் ஆயிற்று.

கோண்டுவானா பிரதேசம்
நாடு India
பிரதேசம்மத்திய இந்தியா
தலைமையிடம்நாக்பூர்
பகுதிகள்
பட்டியல்
மொழிஇந்தி

கோண்டு மக்கள் அதிகம வாழும் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் உள்ள விதர்பா, விதர்பாவுக்கு வடக்கில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலப் பகுதிகள், மேற்கு சத்தீசுகர் மாநிலப் பகுதிகள், வடக்கு தெலங்கானா மாநிலப் பகுதிகள், மேற்கு ஒடிசா பகுதிகள் மற்றும் தெற்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளைக் கொண்டது கோண்டுவானா பிரதேசம் ஆகும். தக்காணப் பீடபூமியின் வடக்கில், 600 முதல் 700 மீட்டர் உயரத்தில் அமைந்த கோண்டுவானா பிரதேசம் மலைக்குன்றுகளால் சூழ்ந்தது.

கோண்டுவானா தட்பவெப்பம், வெப்பமாகவும், பாதி வறண்டதாகவும் இருக்கும். இயற்கை தாவரங்கள், வறண்ட பருவமழை காடு மற்றும் பருவமழை புதர்க் காடுகள் கொண்டது. இதன் பெரும் பகுதிகள் இன்னும் காடுகளாக உள்ளது. இப்பகுதியில் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் கொண்ட பல தேசியப் பூங்காக்கள் உள்ளன.

கோண்ட்வானாவில் பட்டியல் பழங்குடி இனமக்கள் ஒப்பீட்டளவில் அதிக விகிதத்தில் உள்ளனர், இதில் கோண்டு மக்களும் அடங்குவர். பட்டியல் பழங்குடியினர் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கோண்டுவான பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கோண்டு மக்கள் தொகை பெரும்பான்மையாக உள்ளது.

வரலாறு

தொகு
 
1525-இல் மத்திய இந்தியாவில் கோண்டுவானா இராச்சியம், (வெள்ளை நிறத்தில்)

மத்திய இந்தியாவின் கோண்டுவான பிரதேசத்தில் கோண்டு மக்கள் உள்ளிட்ட பல பழங்குடியின மக்களின் இராச்சியங்கள் ஆட்சி செய்தது.

பெரிஷ்தா எனும் பாரசீக வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, 1398-ஆம் ஆண்டு முதல் கோண்டுவானா பிரதேசத்தின் முதல் மன்னராக நரசிங் ராய் ஆட்சி செய்தார். இவர் இறுதியாக மால்வா சுல்தான் ஹோஷங் ஷாவால் கொல்லப்பட்டார். கிமு 14 முதல் 17-ஆம் நூற்றான்டு வரை கோண்டுவானா பிரதேசத்தை கார்கா-மண்ட்லா, தேவ்கர் மற்றும் சன்டா-சிர்பூர் இராச்சியங்கள் ஆண்டது. 1733-இல் மராத்தியப் பேரரசின் பேஷ்வாக்கள் புந்தேல்கண்ட் பிரதேசத்தை கைப்பற்றினர். 1735-இல் கோண்டுவானா பிரதேசத்த்தின் கார்க்கா-மண்ட்லா இராச்சியத்தை மராத்தியப் பேரரசின் கீழ் கொண்டு வந்தனர். 1743-இல் மராத்திய போன்சலே வம்சத்தினர் நாக்பூரில் தங்கள் இராச்சியத்தின் தலைமையிட நகரத்தை நிறுவி, 1751-இல் தேவ்கர் மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளையும் கைப்பற்றினர். 19-ஆம் நூற்றான்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் மராத்தியர்களை வென்று கோன்டுவானா பிரதேசத்தை கைப்பற்றினர்.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டுவானா_(இந்தியா)&oldid=3959879" இலிருந்து மீள்விக்கப்பட்டது