கோதிகுட்டலபள்ளி
கோதிகுட்டலபள்ளி (Kothigutalapalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது மேகலசின்னம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.
கோதிகுட்டலபள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635120 |
பெயராய்வு
தொகுகோதி என்னும் தெலுங்கு சொல்லுக்கு குரங்கு என்பது பொருள். அப்படியே குட்டல என்பதற்கு தெலுங்கில் மலைகள் என்பது பொருள். இப்பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளன. எனவே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,058 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4,402 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,127, பெண்களின் எண்ணிக்கை 2,275 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 66.92% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
மேற்கோள்
தொகு- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 105.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Kothigutalapalli Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help)