கோபால் வல்லப் பட்நாயக்

இந்திய நீதிபதி

நீதிபதி கோபால் வல்லவ் பட்டநாயக் (Justice Gopal Ballav Pattanaik) (பிறப்பு 19 டிசம்பர் 1937) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். பின்னர் ஒடிசா உயர் நீதிமன்ற அமர்வின் நிரந்தர நீதிபதியாகவும், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் 19 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் 32வது[3] தலைமை நீதிபதியானார்.[4] [5] 2002ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி கோபால் வல்லவ் பட்டநாயக்
2018இல் பட்நாயக்
32வது இந்திய தலைமை நீதிபதி
பதவியில்
8 நவம்பர் 2002[1] – 18 திசம்பர் 2002
நியமித்தவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
முன்னவர் பூபிந்தர் நாத் கிர்பால்
பின்வந்தவர் வி. நா. கரே[2]
தனிநபர் தகவல்
பிறப்பு 19 திசம்பர் 1937 (1937-12-19) (அகவை 85)
கட்டக், ஒடிசா, இந்தியா.
குடியுரிமை இந்தியர்
தேசியம்  இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) மீரா பட்நாயக்
பிள்ளைகள் அமர், ரிங்கு, அஞ்சன்
பெற்றோர் ராஷ்பிகாரி பட்நாயக் (தந்தை), பிதுலதா தேவி (தாய்)
படித்த கல்வி நிறுவனங்கள் ஈவிங் கிறிஸ்த்துவக் கல்லூரி, அலகாபாத் பல்கலைக்கழகம்
ராவன்ஷா கல்லூரி
மதுசூதன் சட்டக் கல்லூரி
பணி நீதிபதி
விருதுகள் உத்கல் ரத்னா 2021

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

19 திசம்பர் 1937 அன்று இந்தியாவின் ஒடிசா- பிதுலதா தேய் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். பட்நாயக் ஒடிசாவின் கட்டக்கில் வளர்ந்தார். பின்னர், ராவன்ஷா கல்லூரியில் படித்து பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஈவிங் கிறிஸ்த்துவக் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் ஒடிசாவிலுள்ள உத்கல் பல்கலைக்கழகத்தின் மதுசூதனன் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

1962ஆம் ஆண்டில், இவர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார். இவர், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றார். முதல் தலைமுறை வழக்கறிஞராக, இவரது வழக்கறிஞர் வாழ்க்கை மறைந்த வழக்கறிஞர் பிமல் பால், பாரிஸ்டர் பீரேந்திர மோகன் பட்நாயக் ஆகியோரின் அறைகளில் தொடங்கியது. நீதிபதி சௌரி பிரசாத் மகாபத்ரா இவரை வழக்கறிஞர் தொழில் செய்ய ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.[6]

1971 இல், அவர் ஒரிசா மாநில அரசுக்கான நிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1974இல் இவர் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில அரசு வழக்கறிஞராகவும் ஆனார். 1983இல், ஒரு நிரந்தர நீதிபதியாக ஒரிசா உயர் நீதிமன்றத்தின்]] அமர்வுக்கு உயர்த்தப்பட்டார்.[7] 1995இல், இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பாட்னா உயர் நீதிமன்றத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். 8 நவம்பர் 2002 அன்று இந்தியாவின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

சொந்த வாழ்க்கை தொகு

இவர் இப்போது தனது மனைவி மீராவுடன் புதுடில்லியில் வசிக்கிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடுவராக செயல்படுகிறார். இவருக்கு அமர், அஞ்சன், ரிங்கு ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு