கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Coimbatore Institute of Engineering and Technology), என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இதை 2001-ல் கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளை (கோ. க. க. அ.) நிறுவியது. இந்த கல்லூரியின் வளாகமானது கோயம்புத்தூரிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், நரசிபுரத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனமானது பசுமையான குன்றுகளால் சூழப்பட்ட மிக அழகிய, அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கல்வி வசதிக்கும், சுய மேம்பாட்டுக்கும் இந்த வளாகத்தில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.
குறிக்கோளுரை | Light the Light within |
---|---|
வகை | சுயநிதி |
உருவாக்கம் | 2001 |
முதல்வர் | என். நாகராசன் |
அமைவிடம் | , , 10°59′44″N 76°46′24″E / 10.995504°N 76.773427°E |
இணையதளம் | www |
இருப்பிடம்
தொகுஇந்த கல்லூரி கோயமுத்தூரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரசிபுரத்தில், 26.5 ஏக்கர்கள் (107,000 m2) பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. [1]
கல்வி
தொகுஇக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ-யின் ஒப்புதலுடன் பின்வரும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
இளநிலை படிப்புகள்
- பி. இ. குடிசார் பொறியியல்
- பி. இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி. இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி. இ. 'மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி. இ. இயந்திரப் பொறியியல்
- பி. இ. எந்திர மின்னணுவியல் பொறியியல்
- பி. டெக். தகவல் தொழில்நுட்பம்
முதுநிலை படிப்புகள்
- எம். இ. பொறியியல் வடிவமைப்பு
- எம். இ. தொடர்பு அமைப்புகள்
- எம். இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- முதுநிலை வணிக மேலாண்மை
அம்சங்கள்
தொகுஇக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைவுபெற்றுள்ளது. இது புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிறுவனம் பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றுள்து. மேலும் இது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
- ↑ "Anna University, Chennai". www.annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.