கோலாகாட் தொழில்முறையல்லா நாடகச் சங்கம்

கோலாகாட் தொழில்முறையல்லா நாடகச் சங்கம் (Golaghat Amateur Theatre Society) என்பது இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு சமூகமாகும். இவர்கள் கவிதை, புதினம் மற்றும் சிறுகதை போன்ற இலக்கியம் மற்றும் வரைதல், ஓவியம், ஒளிப்படவியல் போன்ற காட்சிக் கலைகள்போன்றவற்றை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தும் வரலாற்றைக் கொண்ட கோலாகாட் மற்றும் அசாமின் கலைத் துறையைச் சார்ந்தவர்களாவர். அசாமில் உள்ள கோலாகாட்டில் இந்தச் சங்கம் நிகழ்த்துக்கலை மற்றும் காட்சிக்கலையினை நிகழ்த்தும் மக்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

கோலாகாட் தொழில்முறையல்லா நாடகச் சங்கம்
சுருக்கம்GATS
உருவாக்கம்1895; 130 ஆண்டுகளுக்கு முன்னர் (1895)[1]
தலைமையகம்தோதார் அலி
கோலாகாட்
சேவை பகுதி
அசாம், கோலாகாட்
உறுப்பினர்கள்
செயல் உறுப்பினர்கள் - 24 இணை உறுப்பினர்கள் - 8 + ஆயுட்கால உறுப்பினர்கள்
ஆட்சி மொழி
அசாமிய மொழி, இந்திய ஆங்கிலம்
தலைவர்
எ. பருவா[2]
துணைத்தலைவர்
எம். இராய்[3]

வரலாறு

தொகு

1895ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, கோலாகாட் தொழில்முறையல்லா நாடகச் சங்கம் மறைந்த ஜாய் சந்திர மைத்ரா மற்றும் பிறர் தலைமையிலான பரோபகாரிகள் குழுவால் உருவாக்கப்பட்டது. இவர்கள் அசாம் மாநிலத்தில் நாடக மற்றும் கலாச்சாரச் திறமைகளைக் குறிப்பாக கோலாகாட் பகுதியில் மேம்படுத்துவதற்கான மையத்தை உருவாக்கத் திட்டமிட்டு இதனைத் தோற்றுவித்தனர். இச்சங்கத்தின் நிரந்தர நாடக அரங்கம், பொதுவாக "தொழில்முறையல்லா நாடக அரங்கம்"[4] என அழைக்கப்படுகிறது. இது அசாம் மாநிலத்தில் உள்ள பழமையான நாடகக் கலை கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் இது 117 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. சங்கத்தின் பாரம்பரியம் மற்றும் கலைத் துறையில் அசாமியக் கலாச்சாரத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை ஆற்றிவரும் இந்த அமைப்பு இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் இதன் வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டது.[5][6]

கட்டமைப்பு

தொகு

சங்கம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான கலாச்சார நிகழ்வுகளை நடத்துகிறது. இதன் நிர்வாகக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறையின்படி செயல்படுகின்றது.[7] வாழ்நாள் உறுப்பினர்களைத் தவிர, 32 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவைச் சங்கம் கொண்டுள்ளது.

தற்போது

தொகு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடிமக்கள் நாடக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் 1981ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற நாடக கலைஞர் மறைந்த சுரேந்திர நாத் சைகியாவின் நினைவாக "அனைத்து அசாம் நாடகப் போட்டியை" சங்கம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.[8] பயிற்சி அரங்குகளுக்கு மேலதிகமாக, அசாமிய இலக்கியத்தின் கவிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் திறமைகளை அங்கீகரிப்பதில் இச்சமூகம் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. Sharma, Anil Kumar (2007). "Quit India Movement In Assam, Quit India and Student and Woman Movements in Golaghat District, page 6". Anil Kumar Sharma. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183242424. https://books.google.com/books?id=gZmusO1pWjUC&q=ameteur+theatre+society&pg=PA6. 
  2. "Members of Executive Body members, GATS". 2014. http://amateurtheatresociety.org/list-of-executive-body-for-the-year-2012-13-2013-14/. 
  3. "Members of Executive Body members, GATS". 2014. http://amateurtheatresociety.org/list-of-executive-body-for-the-year-2012-13-2013-14/. 
  4. "Golaghat District Journalist Association's golden jubilee celebrations underway, The Eastern Today". ET Correspondent. 27 November 2015. http://www.eastern-today.com/entries/assam/golaghat-district-journalist-association-s-golden-jubilee-celebrations-underway. 
  5. "Ideas is what he likes to talk about, Rediff.com (News)". The Rediff Special. 20 May 2004. http://www.rediff.com/news/2004/may/20spec2.htm. 
  6. Bhushan, K.; Katyal, G. (2004). Manmohan Singh: Visionary to Certainty – Ideas is what he likes to talk about, page 77. APH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176486941.
  7. "Golaghat to witness new theatre, The Telegraph - Calcutta - Gauhati". Ritupallab Saikia. 19 June 2014 இம் மூலத்தில் இருந்து 12 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140812140031/http://www.telegraphindia.com/1140620/jsp/northeast/story_18529364.jsp#.WHQXgbaLQcg. பார்த்த நாள்: 20 June 2014. 
  8. "A brief introduction, GATS".
  9. "Book Quest, Volume I, Issue II - Awards and Honours" (PDF). Book Quest. 9 March 2014.
  10. "Golaghat Ratna Award conferred, The Assam Tribune". Correspondent. 20 September 2016. Archived from the original on 25 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)