கோலார் தங்க வயல்


கே.ஜி.எப். (K .G .F.) அல்லது கோ.த.வயல் முழுமையாக, "கோலார் தங்க வயல்" (ஆங்கிலத்தில் : Kolar Gold Fields), கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில், பங்காருபேட்டை தாலுக்காவில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்.

  • இது அதே பெயரில் உள்ள "கே.ஜி.எப்." நகரியத்தையும் இணைத்தது ஆகும்.
கே.ஜி.எப்.
கோலார் தங்க வயல்
—  பெங்களூர் தமிழர்களின் தாய் வீடு —
— நகரியம் —
இராபர்ட்சன்பேட்டை நகராட்சி
  —
கே.ஜி.எப்.
கோலார் தங்க வயல்
அமைவிடம்: கே.ஜி.எப்.
கோலார் தங்க வயல், கருநாடகம்
ஆள்கூறு 13°38′N 95°35′E / 13.63°N 95.58°E / 13.63; 95.58
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் கோலார்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
இராபர்ட்சன்பேட்டை நகராட்சி தலைவர் ஆர். சேகர்
ஆணையர்
மக்களவைத் தொகுதி கே.ஜி.எப்.
கோலார் தங்க வயல்
மக்கள் தொகை 1,44,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

இது "டோடு பெட்டா " மலையின் கிழக்கு சரிவில் , கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,196 அடி உயரத்தில் உள்ள "தங்க சுரங்கம்" மற்றும் அதை சார்ந்த ஊரும் ஆகும்.

வரலாறு

தொகு

இது தமிழர் நாகரிக வரலாற்றுக் காலத்தில் இருந்தே தங்கம் வெட்டுதலில் புகழ் பெற்றது. அரப்பா , மொகன்சதாரோவில் கிடைத்த வரலாற்றுப் புதையலில் இருந்த தங்கத்துடன் , ஒன்றுபோல் குணம் கொண்டுள்ளது.

எனவே தமிழர் நாகரீகம்.... தமிழகத்தில் இருந்து தற்போதைய இந்திய கண்டத்தின் ஹரப்பா மொகஞ்சதாரோ வரை பரவி இருந்தது என்பதற்கு இங்கு உள்ள தங்கமும், அங்கு அகழ்வாய்வில் கிடைத்த தங்க புதையல் தங்கமும் ஒரே மாதிரியாக இருப்பதுமே சாட்சி.

இங்கு தங்கம் வெட்டும் பணி கி.மு முதலாம் நூற்றாண்டு முதலே நடந்து வருவதாய்த் தகவல்கள் உள்ளன.

ஏனென்றால் கி.மு க்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இது தற்போதைய இந்தியாவின் தென் பகுதிகளை ஆண்டுவந்த சேர சோழ பாண்டியர் போன்ற தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வந்துள்ளது

இந்தியா பிரித்தானிய அரசிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு, அப்போதைய மாகாணங்கள் யாவும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, சில தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய தமிழர் அல்லாத அரசியல்வாதிகளால், இங்கு வாழும் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழ் நாட்டில் இருந்து பிரித்து இது கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.

நகரியம் உருவாக்கம்

தொகு

1800 களில் , ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது . இதற்காகப் பெருமளவில் மக்கள் , தமிழ்நாட்டின் வடாற்காடு மாவட்டத்தில் இருந்தும் , சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் வரவழைக்கபட்டனர். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகட்டித் தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் உருவாகியது.

மக்கள் தொகை மற்றும் வகைப்பாடு

தொகு

கோலார் தங்க வயலின் மக்கள் தொகை 3,00,000 க்கும் அதிகம் ஆகும். எனினும் தங்க சுரங்கம் மூடப்பட்ட காரணத்தால் , மக்கள் பெங்களூருக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இதன் மக்கள் தொகை 1,44,000 ஆகக் குறைந்தது . இது தமிழர் பெரும்பான்மையாய் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு தமிழர்கள் 90% வசிக்கின்றனர்.[1] மேலும் தெலுங்கர்களும் உள்ளனர் . கன்னடர்கள் மிக குறைந்த அளவே உள்ளனர் .

பெங்களூர் தமிழர்களின் தாய் வீடு

தொகு

இன்று பெங்களூர் நகரில் வாழும் பழைய தமிழ்மக்கள் பலரும் கே.ஜி.எப் ஐத் தாய்வீடாக கொண்டவர்கள் ஆவர்கள். இவர்கள் கே.ஜி.எப் சுரங்கம் 1950 களில் பணி குறைந்த போது "பெங்களூருக்கு" வேலை தேடி சென்றோராவர்.

தட்பவெப்பநிலை

தொகு

இது 3200 அடி உயரத்தில் உள்ளதால் , தட்பவெப்பம் மலைப்பகுதியை ஒத்து இருக்கும். அதனால் இது "குட்டி இங்கிலாந்து" என வழங்கப்படுகிறது.

தற்போதைய நிகழ்வுகள்

தொகு

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் அணுக் கழிவுகள் இங்கு கொட்டப்படும் என்று தகவல் வந்ததால் , மக்கள் பெரும் கிளர்ச்சி செய்தனர் .

தமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தினமணி செய்தி
  2. Rice, Benjamin Lewis (1894). Epigraphia Carnatica: Volume X: Inscriptions in the Kolar District. Mangalore, British India: Department of Archeology, Mysore State. பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_தங்க_வயல்&oldid=3924914" இலிருந்து மீள்விக்கப்பட்டது