கோவிந்தகிரி
கோவிந்தகிரி அல்லது கோவிந்த குரு (Govindgiri, also known as Govind Guru), (1858–1931) சமூக மற்றும் சமய சீர்திருத்தவாதி ஆவார். 1900-ஆண்டுகளின் முற்பகுதியில் தற்கால குஜராத்-இராஜஸ்தான் எல்லைப்பகுதிகளில் ஆரவல்லி மலைத்தொடர்களில் வாழ்ந்த பில் பழங்குடி மக்களின் சமூக மற்றும் சமயச் சீர்திருத்தத்திற்காக பாடுபட்டவர்.[1] இவர் பகத் இயக்கத்திற்காக நன்கறியப்பட்டவர்.[2]
கோவிந்தகிரி | |
---|---|
பிறப்பு | 1858 பன்சியா, துங்கர்பூர் சமஸ்தானம், இராஜபுதனம் முகமை, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 30 அக்டோபர் 1931 லீம்புடி அருகில் காம்போய் கிராமம், பஞ்சமகால் மாவட்டம், குஜராத், இந்தியா | (அகவை 72–73)
மற்ற பெயர்கள் | கோவிந்த குரு |
பணி | சமூக மற்றும் சமய சீர்திருத்தவாதி |
இளமை வாழ்கை
தொகுலம்பாடி எனும் பஞ்சாரா நாடோடிக் குடும்பத்தில் (தற்கால இராஜஸ்தான் மாநிலத்தில்) துங்கர்பூர் சமஸ்தானத்தில் கோவிந்தகிரி பிறந்தார்.[1] கிராமக் கோயில் பூசாரியின் உதவியுடன் இளமைக் கல்வியை தானாக கற்றார்.[1] இவரது இளமைக் காலத்தில் பில் பழங்குடி மக்களை துங்கர்பூர் சமஸ்தானம் மற்றும் சந்திராபூர் சமஸ்தானங்களில் கூலி வழங்காமல் கொத்தடிமைகள் போன்று வேலை வாங்கப்பட்டனர்.[3][4] இவரது மனைவி மற்றும் குழந்தை His பஞ்சத்தால் உயிரிழந்தனர். பின்னர் துங்கர்பூர் சமஸ்தானத்திலிருந்து அருகில் உள்ள சந்திராப்பூர் சமஸ்தானப் பகுதிக்கு கோவிந்தகிரி குடிபெயர்ந்தார்.[5] அங்கு தனது சகோதரனின் விதவை மனைவியை மணந்தார். அங்குள்ள ஒரு இந்து துறவியிடம் சீடராக சேர்ந்து கொண்டு, தனது பெயரை கோவிந்தகிரி எனும் மாற்றிக் கொண்டார்.[6]
செயற்பாடுகள்
தொகுசமூக மற்றும் சமய நிலைகள்
தொகுபில் மக்கள், லம்பாடி போன்ற பழங்குடி மக்களின் ஒழுக்கம், சமூக மற்றும் சமய வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக கோவிந்தகுருவே கள், சாராயம் போன்ற மது வகைகளை குடிக்காதும், அசைவ உணவுகளை உண்ணாதிருந்தும் இருந்தார்.[7] கோவிந்த குரு பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக சம்பா சபா எனும் அமைப்பை நிறுவினார்.[1][8] கோவிந்தகுரு ஓரிறை கோட்பாட்டை வலியுறுத்தினார். கள் மற்றும் மாமிசம் உண்ணாமை, நிதானத்தை கடைபிடித்தல், குற்றங்களை கைவிடுதல், மூட நம்பிக்கைகளை ஒழித்தல், வேளாண்மை செய்தல் போன்ற நற்பழக்கங்களை பழங்குடி மக்களிடையே வலியுறுத்தினார். தங்களுக்கான தீ வழிபாட்டுச் சடங்குகளையும், வீடுகளில் கட்டுவதற்கு கொடியை அறிமுகப்படுத்தினார்.
அரசியல் செயற்பாடுகள்
தொகுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த பான்ஸ்வாரா சமஸ்தானம், சந்திராப்பூர் சமஸ்தானங்களின் நிலக்கிழார்கள் பழங்குடி மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு கோவிந்தகுரு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள நிலங்கள அனைத்தும் பில் பழங்குடி மக்களுக்கே உரிமையானது என்று போதனை செய்தார். மேலும் 800 ஆண்டுகளுக்கு முன்னர் பில் இராச்சியம் இருந்ததை மக்களுக்கு நினைவுப்படுத்தினார்.
ஆதரவும் எதிர்ப்பும்
தொகுகோவிந்தகுரு ஆரவல்லி மலைத்தொடர் பகுதிகளில் இருந்த சந்த் சமஸ்தானம், துங்கர்பூர் சமஸ்தானம் மற்றும் பான்ஸ்வாரா சமஸ்தானம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த பஞ்சமகால் மாவட்டப் பகுதிகளில் இருந்த பில் பழங்குடி மக்களை பெரிய அளவில் ஒன்று திரட்டினார்.[9] கோவிந்தகுருவின் போதனைகளால் பழங்குடி மக்கள் கள் மற்றும் சாராயம் போன்றவைகள் குடிப்பதை நிறுத்தியதால், சமஸ்தானங்களுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டது. இதனால் கோவிந்த குரு மீது சமஸ்தான மன்னர்கள் வெறுப்புற்றனர்.[7]
முதல் கைது மற்றும் விடுவிப்பு
தொகுமது விலக்கு பிரச்சாரம் செய்தமைக்காக துங்கர்பூர் சமஸ்தான காவலர்கள் கோவிந்தகுருவை 1912-இல் கைது செய்தனர்.[10] கைது காரணமாக அவரைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றியதாக அரசு குற்றம் சாட்டியது. மேலும் அவருடைய சேமிப்பைப் பறிமுதல் செய்தது மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தையை சிறையில் அடைத்து அவரது இயக்கத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தது.[7] இருப்பினும் ஏப்ரல் 1913-இல் துங்கர்பூர் சமஸ்தானம் கோவிந்தகுருவை நிபந்தனையின்றி விடுவித்தது.[7]
மன்காட் மலை நிகழ்வுகள்
தொகுஇதர் சமஸ்தானப் பகுதியின் சந்த் சமஸ்தானம் மற்றும் பான்ஸ்வாரா சமஸ்தானத்தின் மன்காட் மலைக்குன்றுகளில் தனது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்த கோவிந்தகுருவை இதர் சமஸ்தானத்தின் காவலர்கள் பிடிக்க முயன்றனர்.[11] 31 அக்டோபர் 1913 அன்று கோவிந்தகுருவை அவரது ஆதரவாளர்களையும் சந்த் சமஸ்தானத்தின் இரண்டு காவலர்களை கோவிந்தகுருவும் அவரது ஆதரவாளர்களும் பிடித்தனர்.[8] 1 நவம்பர் 1913 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் உதவியுடன் வந்த சமஸ்தானங்களின் படைகள் பான்ஸ்வாராவில் உள்ள பில் மக்களின் வீடுகளை சூறையாடி, 1,500 பில் மக்களை கொன்று குவித்தும், கைதும் செய்தனர். 17 நவம்பர் 1913 அன்று மன்காட் மலைக்குன்றுகளில் இருந்த கோவிந்தகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடிக்கும் முயற்சியில் பல பில் மக்கள் மாண்டனர் மற்றும் கோவிந்தகுருவும் அவரது ஆதரவாளர் ஒருவரும் பிடிபட்டார்.[12]
சிறை தண்டனை
தொகுமன்காட் மலைக்குன்றுகளில் பிடிப்பட்ட கோவிந்தகுரு மற்றும் ஆதரவாளர்களை 2 பிப்ரவரி 1914 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றம் கோவிந்தகுருவுக்கு தூக்குத் தண்டனையும், அவரது ஆதரவாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டால் கோவிந்தகுருவின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பிந்தைய வாழ்க்கை
தொகு1919-இல் அரசியல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் கோவிந்தகுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[13][14] He was also prohibited from entering several princely states.[15]
கோவிந்தகுரு 30 அக்டோபர் 1931 அன்று இறக்கும் வரை தற்கால குஜராத் மாநிலத்தின் பஞ்சமகால் மாவட்டத்தின் லீம்புடி அருகில் உள்ள் காம்போய் கிராமத்தில் காலத்தை கழித்தார்.[10][15]
மரபுரிமை பேறுகள்
தொகு31 சூலை 2012 அன்று குஜராத் அரசின் முதலமைச்சர் நரேந்திர மோதி, கோவிந்தகுரு சமாதி இருக்கும் காம்போய் கிராமத்தில் கோவிந்தகுரு பெயரில் ஒரு பூங்கா ஒன்றை நிறுவினார்.[15][16] 1 நவம்பர் 2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கோவிந்தகுருவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இராஜஸ்தான் மாநிலத்தின் மன்கார் தாம் பகுதிக்குச் சென்று கோவிந்த குருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.[17][18]
கோத்ரா நகரத்தில் கோவிந்தகுரு பெயரில் சிறி கோவிந்த குரு பல்கலைக்கழகம் 2015-இல் நிறுவப்பட்டது.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Natani, Prakash (1998). राजस्थान का स्वाधीनता आंदोलन. Jaipur: Granth Vikas. pp. 54–58.
- ↑ Sahoo, Sarbeswar (2013). Civil Society and Democratization in India: Institutions, ideologies and interests. Oxon: Routledge. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780203552483.
- ↑ Shah, Ghanshyam (2004). Social Movements in India: A Review of Literature. New Delhi: Sage Publications. pp. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761998334.
- ↑ Yajnik, Indulal (1921). Agrarian Disturbances in India. Lahore B.P.L. Bedi. pp. 85.
- ↑ Sehgal, K.K. (1962). Rajasthan District Gazetteers: Dungarpur. Jaipur: Directorate, District Gazetteers. pp. 51.
- ↑ Fuchs, S. (1965). "Messianic Movements in Primitive India". Asian Folklore Studies 24 (1): 11–62. doi:10.2307/1177596. https://nirc.nanzan-u.ac.jp/nfile/801. பார்த்த நாள்: 2022-11-03.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Vashishtha, Vijay Kumar (1992). The Bhil Revolt of 1913 under Guru Govindgiri among the Bhils of Southern Rajasthan and its Impact, in Proceedings Of The Indian History Congress. New Delhi: Indian History Congress. pp. 522–527.
- ↑ 8.0 8.1 Sharma, G.N. (1986). Tribals of Rajasthan: Social Reforms and Political Awakening [in G.N. Sharma (Ed.) Social and Political Awakening Among the Tribals of Rajasthan]. Jaipur: Centre for Rajasthan Studies. pp. 5–10.
- ↑ Parmar, Ladhabhai Harji (1922). The Rewakantha Directory. Rajkot: Parmar Press. pp. 25.
- ↑ 10.0 10.1 Vashishtha, Vijay Kumar (1991). "The Bhil Revolt of 1913 Under Guru Govindgiri Among the Bhils of Southern Rajasthan and its Impact". Proceedings of the Indian History Congress 52: 522–527.
- ↑ Sehgal, K.K. (1962). Rajasthan District Gazetteers: Banswara. Jaipur: Directorate, District Gazetteers. pp. 34.
- ↑ Report On The Administration Of The Dungarpur State for the Samvat Year 1970-71 (AD 1913-14). Rawalpindi. 1914. pp. 4.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Hardiman, David (2003). Gandhi in His Time and Ours: The Global Legacy of His Ideas. New York: Columbia University Press. pp. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231131148.
- ↑ Kothari, Manohar (2003). भारत के स्वतंत्रता संग्राम मैं राजस्थान. Jaipur: Rajasthan Swarna Jayanti Prakashan Samiti. p. 113.
- ↑ 15.0 15.1 15.2 Mahurkar, Uday (1999-11-30). "Descendants of Mangad massacare seek recognition for past tragedy". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ K. Bhatia, Ramaninder (2012-07-24). "63rd van mahotsav to be a tribute to tribal freedom fighters". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ PM Modi pays tribute to Bhil freedom fighter Govind Guru
- ↑ PM Modi pays tribute to Bhil freedom fighter Shri Govind Guru in Rajasthan’s Banswara
- ↑ "Govind Guru University inaugurated in Godhra | Vadodara News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.