கோவில் பாப்பாகுடி
கோவில்பாப்பாகுடி என்னும் ஊராட்சி, தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது[4].
இது மதுரை மாநகராட்சியின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு வளர்நகர்ப் பகுதியாகும். இவ்வூராட்சியில் சிக்கந்தர் சாவடி கிராமமும், தினமணி நகர், எஸ்.வி.டி நகர் உள்ளிட்ட சில விரிவாக்கப் பகுதிகளும் அடங்கும்.
கோவில்பாப்பாகுடி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கட்தொகை
தொகு2011ல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1909 வீடுகளுள்ள இவ்வூரில் 7419 பேர் வசித்தனர். இதில் 49.5% பெண்கள். 50.5% பேர் ஆண்கள். (திருநங்கைகள் தனித்துக் குறிப்பிடப்படவில்லை). இந்த எண்ணிக்கையில் ஆறு வயதுக்குட்பட்ட 865 குழந்தைகளும் அடங்குவர். ஏறத்தாழ 17% தாழ்த்தப்பட்டவர்கள். ஆண்களில் 79% பேரும், பெண்களில் 67% பேரும் எழுத்தறிவு பெற்றவர்கள் [5].
நீர்நிலைகள்
தொகுகோவில் பாப்பாகுடி கிராமத்தில் பெரிய கண்மாய், சின்னக் கண்மாய், ஊருணி ஆகிய முக்கிய நீர்நிலைகள் உள்ளன. இது பெரியாறு கால்வாய் மூலம் பெறப்பட்ட நீரினால் பாசன வசதி பெறும் பகுதிகளில் ஒன்றாகும்.
போக்குவரத்து
தொகுகிழக்கே சிக்கந்தர்சாவடியில் மதுரை-பாலமேடு ஆரச்சாலையுடனும்; தெற்கில் விளாங்குடியிலும், மேற்கில் பரவையிலும் தேசிய நெடுஞ்சாலை -7 உடனும் இவ்வூரை இணைக்கும் தார்ச்சாலைகள் உள்ளன. வடக்கில் உள்ள கிராமங்களான பொதும்பு, அதலை ஆகியவற்றுடனும் சாலைவசதி உள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலம் மூலமாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்து (தடம் எண் 43H) நாளொன்றுக்கு 12 முறைகள் வந்துசெல்கிறது. இவை தவிர சிற்றுந்து, பகிர்வு தானிகள் வசதியும் உண்டு.
கல்வியகங்கள்
தொகுஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல அலுவலகம் இவ்வூராட்சிக்குட்பட்ட பகுதியில்தான் அமைந்துள்ளது.
1921ல் இவ்வூரில் துவங்கப்பட்டு, நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வரும் பள்ளி உள்ளது. சிக்கந்தர்சாவடியிலும் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இவை மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி நிர்வாகத்துக்குட்பட்டவை. இவை தவிர தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்றும், தனியார் மழலையர் & துவக்கப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றன.
சுகாதாரம்
தொகுஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் இவ்வூராட்சியில் உள்ளது[6].
தொழிலகங்கள்
தொகுமோட்டார் வாகனங்களுக்கு கூடு கட்டும் பல கூடங்கள் இப்பகுதியில் செயல்பட்டுவருகின்றன.
கேளிக்கை வசதி
தொகுகோவில் பாப்பாகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திரையரங்கம் ஒன்று செயல்பட்டுவருகிறது.
உள்ளாட்சி மன்றம்
தொகு2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இரா. சரவணன் பணியாற்றி வருகிறார். உறுப்பினர்களாக சொ. பாலமுருகன், ச. ஜெயா, சு. கணேசன், பா. காவேரி, சு.லட்சுமணன், பா. குமார், மு. சாந்தி, ஆர். சுப்புராஜ் ஆகியோர் உள்ளனர். வி. ராமர் மறைவுக்குப் பிறகு ஒரு இடம் காலியாக உள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-08-10.
- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=696356
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=543916&Print=1