கோவை மருத்துவக் கல்லூரி
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசு மருத்துவக் கல்லூரி. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ளது.
வகை | அரசு மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1966 |
துறைத்தலைவர் | மரு. காளிதாசு |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சுருக்கப் பெயர் | சி எம் சி கோவை |
இணையதளம் | www.coimbatoremedicalcollege.in |
அமைவிடம்
தொகுகோயம்புத்தூரின் பீளமேடு பகுதியில் கோவை விமான நிலையத்திற்கு அண்மையில் அவினாசிச் சாலையில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இப்பகுதியில் மேலும் பல கல்லூரிகளும், மருத்துவமனைகளும் அமைந்துள்ளன. 1966ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் கு.காமராசரிடம் கோவையின் தொழிலதிபர்கள் கொடையாக அளித்த நிலத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
கல்லூரியின் மருத்துவமனை
தொகுஇந்தக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனை திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட தலைமையக மருத்துவமனையாக அறியப்பட்ட மருத்துவமனை இன்று சி.எம்.சி மருத்துவமனை என அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்போதுள்ள கட்டிடங்கள் 1909ஆம் ஆண்டு பணி தொடங்கி 1914ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன. சுவர்களின் வெளிப்புறம் கற்களாலும் உட்புறம் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. கதவுகள், சன்னல்கள் மற்றும் மாடிப்படிகள் தேக்கினால் ஆனவை. கடப்பாக் கற்களால் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் நூற்றாண்டு விழா 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
கோவை மருத்துவப் பள்ளி ஒன்று 1914ஆம் ஆண்டு தற்போதைய அரசு கலைக்கல்லூரியின் தனிக் கட்டிடமொன்றில் துவங்கப்பட்டது.1930ஆம் ஆண்டு இப்பள்ளி சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்த கோழிக்கோட்டிற்கு மாற்றப்பட்டது. மருத்துப்பள்ளி இயங்கியக் கட்டிடம் கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறைக்குக் கொடுக்கப்பட்டது.
1916ஆம் ஆண்டு பிணக்கிடங்கு கட்டப்பட்டது. 1937ஆம் ஆண்டு காசநோய்ப் பிரிவு துவங்கப்பட்டு பின்னர் பெருந்துறைக்கு மாற்றப்பட்டது. 1934ஆம் ஆண்டு செவிலியர் குடியிருப்புக் கட்டப்பட்டது.[1]
கல்லூரியின் இணைப்புகள்
தொகு- இந்தக் கல்லூரி தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
- பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
- மருத்துவக் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகமாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பின்பு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பாடப் பிரிவுகள்
தொகு- இக்கல்லூரியில் முதன்மை பட்டமாக மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ் (M.B.B.S.,) பட்டப்படிப்பு உள்ளது. பட்டமேற்படிப்புகளாக பொது மருந்தியல், (MD General Medicine)
- பொது அறுவை மருத்துவம் (MS General)
- குழவியர் அறுவை மருத்துவம் (M.Ch.).
- மருத்துவப் பட்டயக் கல்விபடிப்புகளாக சில படிப்புகள் (D.G.O, D.C.H, D.A.), மருத்துவம் சார்புப் படிப்புகளான செவிலியர் மற்றும் மருந்தாளுமை பட்டயப்படிப்புகள்.
வசதிகள்
தொகுகல்லூரி வளாகம் நாட்டின் பிற கல்லூரிகளை ஒப்பிடும்போது சற்றே கூடுதலாக இருப்பினும் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை நகரின் வேறு பகுதியில் அமைந்துள்ளது. கல்லூரி முப்பதிற்கும் மேலான துறைகளில் தனியான நூலக வசதியுடனும் நல்ல மருத்துவ ஆய்வுக்கூடங்களுடனும் இயங்குகிறது. இக்கல்லூரியில் மூன்று ஆண்கள் விடுதிகளும் ஓர் பெண்கள் விடுதியும் உள்ளன. இக்கல்லூரியில் மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானமும், தனியான உள்ளரங்கமும் கல்விசாரா செயல்களுக்கு வசதி செய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மருத்துவமனை வரலாறு". Archived from the original on 2009-09-14. பார்க்கப்பட்ட நாள் 2010-03-10.
வெளியிணைப்புகள்
தொகு- Coimbatore Medical College பரணிடப்பட்டது 2010-03-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.coimbatore.net/education/cbemedicalcollege.html பரணிடப்பட்டது 2008-01-19 at the வந்தவழி இயந்திரம்
- The Tamilnadu Dr.M.G.R. Medical University பரணிடப்பட்டது 2006-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Bharathiar University
- University of Madras
- Universities in Coimbatore பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம்
- Medical and Dental Colleges in Coimbatore பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம்
- http://www.tnhealth.org/mecmcc.htm பரணிடப்பட்டது 2007-06-26 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகள் பரணிடப்பட்டது 2009-04-15 at the வந்தவழி இயந்திரம்