கோ. க. மணி (ஜி. கே. மணி) ஒரு தமிழக அரசியல்வாதி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக 2022 வரை பணியாற்றினார்.[1]

கோ. க. மணி
தொகுதி மேட்டூர்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 6, 1952 (1952-03-06) (அகவை 71)
கோவிந்தபாடி, மேட்டூர் சேலம் மாவட்டம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
பிள்ளைகள் தமிழ்குமரன் (மகன்)
இருப்பிடம் சென்னை
சமயம் இந்து

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார்.[2] 1996, 2001 ஆகிய இருமுறை பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

இவரது மகன் தமிழ்குமரன் மக்கள் தொலைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் தொகு

  1. http://www.kalaimalar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=228
  3. http://www.livechennai.com/pennagaram_constituency.asp
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2021-05-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._க._மணி&oldid=3519750" இருந்து மீள்விக்கப்பட்டது