கௌதாரி (துணைக் குடும்பம்)

கௌதாரிகள் (ஆங்கிலம்: Grouse), கல்லிபார்மசு வரிசையில் பெசனிடாய் குடும்பத்திலுள்ள பறவைகளின் ஒரு குழுவாகும். கௌதாரிகள் அடிக்கடி டெட்ரோனினாய் துணை குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் டெட்ரோனிடாய் குடும்பத்தின் கீழும் வகைப்படுத்தப்படுகின்றன. இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி ஆய்வுகள்[1] இந்த வகைப்படுத்தலுக்கு ஆதரவாக உள்ளன. கௌதாரிகள் மிதவெப்ப மண்டல பகுதி முதல் வடக்கு அரைக்கோளத்தில் ஆர்டிக் துணை பகுதிகள் வரை பரவி காணப்படுகின்றன. இப்பரப்பளவில்  இவை பைன் காடுகள் முதல் மலைப்பகுதிகள்[2] வரை பரவியுள்ளன. 28° வடக்கு  நிலநேர்கோட்டில் டெக்சாசில் காணப்படும் அட்வாட்டரின் புல்வெளி கோழி முதல் 83° வடக்கு நிலநேர்கோட்டில் வடக்கு கிரீன்லாந்தில் வாழும் பாறை தார்மிகன் வரை இவை பல்வேறு இடங்களில் வசிக்கின்றன.[3]

கௌதாரி
புதைப்படிவ காலம்:ஆரம்ப பிலியோசீன் முதல் தற்காலம் வரை
SageGrouse21.jpg
ஆண் சேஜ் கௌதாரி
Centrocercus urophasianus
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: கௌதாரி
விகோர்ஸ், 1825
பேரினங்கள்

போனசா, Bonasa
பல்சிபென்னிஸ், Falcipennis
சென்ட்ரோசெர்கஸ், Centrocercus
டென்ட்ராகபஸ், Dendragapus
லகோபஸ், Lagopus
டெட்ரோ, Tetrao
லைருருஸ், Lyrurus
டெட்ராஸ்டேஸ், Tetrastes
டைம்பனுசஸ், Tympanuchus
மற்றும் பல

வேறு பெயர்கள்

டெட்ரோனிடாய், Tetraonidae விகோர்ஸ், 1825

விளக்கம்தொகு

கோழிகள் போன்ற மற்ற கல்லிபார்மாஸ் வரிசை இனங்களைப் போலவே கௌதாரிகளும் வலுவான உடலை கொண்டுள்ளன. இவை 31 முதல் 95 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். 0.3 கிலோ முதல் 6.5 கிலோ வரை எடை இருக்கும். ஆண் பறவைகள் பெண் பறவைகளை விட பெரியதாக இருக்கும். கௌதாரி இனத்திலேயே பெரிய இனமான மரக் கௌதாரியில் ஆண்கள் பெண் பறவைகளைப் போல இரு மடங்கு  எடையுடன் இருக்கும். கௌதாரிகளுக்கு மூக்கின் அருகிலும் சிறகுகள் இருக்கும். இவற்றின் கால்கள் விரல்கள் வரை சிறகுகளுடன் காணப்படும். குளிர்காலத்தில் விரல்களிலும் சிறகுகள் அல்லது பக்கவாட்டில் சிறிய செதில்கள் காணப்படும். பனிபடர்ந்த பகுதிகளில் நடப்பதற்கும் உறைவிடத்திற்காக வளைகளை தோண்டுவதற்கும் இத்தகைய தகவமைப்பை இவை பெறுகின்றன. மற்ற கல்லிபார்மஸ் வரிசை பறவைகளை  போல் இவற்றிற்கு உடல் பகுதிகளில் நகங்கள் தோன்றுவதில்லை.[3]

உசாத்துணைதொகு

குறிப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tetraoninae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Phasianidae