கௌரேலா (Gaurella, also known as Pendra road), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 618 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வடமேற்கே 234 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் அமர்கண்டக் தீர்த்தக் குளம் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் பெந்திரா சாலை எனுமிடத்தில் உள்ளது.

கௌரேலா
பெந்திரா சாலை
அடைபெயர்(கள்): கௌரெல்லா
கௌரேலா is located in சத்தீசுகர்
கௌரேலா
கௌரேலா
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கௌரெலா மாவட்டத்தில் கௌரேல நகரத்தின் அமைவிடம்
கௌரேலா is located in இந்தியா
கௌரேலா
கௌரேலா
கௌரேலா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°46′N 81°52′E / 22.767°N 81.867°E / 22.767; 81.867
Country இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்கௌரேலா-பெந்திரா-மார்வாகி
அரசு
 • வகைபேரூராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்18,165
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
495117
தொலைபேசி குறியீடு07751
வாகனப் பதிவுCG 10

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 15 வார்டுகளும், 4,221 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 18,165 ஆகும். அதில் ஆண்கள் 9,424 மற்றும் பெண்கள் 8,741ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 928 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,704 மற்றும் 3,923 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 79.8%, இசுலாமியர் 13.05%, சமணர்கள் 1.03%, சீக்கியர்கள் 0.63%, கிறித்தவர்கள் 5.29%, மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[1]

தட்ப வெப்பம்

தொகு

ஆண்டு முழுவதும் மழைபெறும் இந்நகரம், சூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு கொண்டிருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், கௌரேலா (1981–2010, உச்சபட்சம் 1903–2011)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.0
(91.4)
36.0
(96.8)
40.0
(104)
43.2
(109.8)
46.2
(115.2)
44.6
(112.3)
38.6
(101.5)
35.2
(95.4)
34.6
(94.3)
36.9
(98.4)
35.5
(95.9)
30.6
(87.1)
46.2
(115.2)
உயர் சராசரி °C (°F) 24.5
(76.1)
27.5
(81.5)
32.4
(90.3)
37.3
(99.1)
39.3
(102.7)
35.5
(95.9)
30.0
(86)
29.3
(84.7)
29.9
(85.8)
30.0
(86)
27.7
(81.9)
25.4
(77.7)
30.7
(87.3)
தாழ் சராசரி °C (°F) 11.1
(52)
13.6
(56.5)
17.9
(64.2)
22.6
(72.7)
25.4
(77.7)
24.8
(76.6)
23.2
(73.8)
22.9
(73.2)
22.1
(71.8)
18.7
(65.7)
14.4
(57.9)
11.2
(52.2)
19.0
(66.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2.6
(36.7)
1.7
(35.1)
8.7
(47.7)
12.4
(54.3)
15.5
(59.9)
16.7
(62.1)
18.1
(64.6)
17.9
(64.2)
15.5
(59.9)
11.5
(52.7)
6.1
(43)
3.9
(39)
1.7
(35.1)
மழைப்பொழிவுmm (inches) 25.5
(1.004)
24.7
(0.972)
27.6
(1.087)
18.7
(0.736)
39.5
(1.555)
204.0
(8.031)
324.8
(12.787)
323.7
(12.744)
231.0
(9.094)
60.3
(2.374)
17.1
(0.673)
12.1
(0.476)
1,308.9
(51.531)
ஈரப்பதம் 49 40 31 24 30 55 79 81 76 62 54 50 53
சராசரி மழை நாட்கள் 2.1 2.3 2.1 1.8 3.4 10.2 17.5 16.4 11.4 3.6 1.3 0.7 72.7
ஆதாரம்: India Meteorological Department[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gaurella Population, Religion, Caste, Working Data Bilaspur, Chhattisgarh - Census 2011
  2. "Station: Pendra Road Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 607–608. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  3. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M43. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரேலா&oldid=3515699" இலிருந்து மீள்விக்கப்பட்டது