சக்சினிமைடு
சக்சினிமைடு (Succinimide) என்பது C4H5NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வளைய இமைடு சேர்மமாகும். பல்வேறு வகையான கரிமத் தொகுப்பு வினைகளிலும், சில தொழிற்சாலைகளில் வெள்ளி முலாம் பூசுவதற்கும் சக்சினிமைடு பயன்படுகிறது. அமோனியம் சக்சினேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தி சக்சினிமைடைத் தயாரிக்கலாம்[2].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பிர்ரோலிடின்-2,5-டையொன்
| |||
வேறு பெயர்கள்
சக்சினிமைடு
சக்சினிக் அமில இமைடு | |||
இனங்காட்டிகள் | |||
123-56-8 | |||
ChEBI | CHEBI:9307 | ||
ChEMBL | ChEMBL275661 | ||
ChemSpider | 10955 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 11439 | ||
வே.ந.வி.ப எண் | WN2200000 | ||
| |||
UNII | 10X90O3503 | ||
பண்புகள் | |||
C4H5NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 99.09 g·mol−1 | ||
தோற்றம் | வெண்மையான படிகத்தூள் | ||
அடர்த்தி | 1.41 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 125 முதல் 127 °C (257 முதல் 261 °F; 398 முதல் 400 K) | ||
கொதிநிலை | 287 முதல் 289 °C (549 முதல் 552 °F; 560 முதல் 562 K) | ||
1 g/3 மி.லி | |||
காடித்தன்மை எண் (pKa) | 9.5 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் இலேசாகத் தீப்பிடிக்கும் | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
இடர், பாதுகாப்புக் கூற்று | S24/25 S28 S37 S45 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
14 கி/கி.கி (எலி, வாஅய்வழி)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சக்சினிமைடுகள்
தொகுசக்சினிமைடு தொகுதியைக் கொண்டுள்ள சேர்மங்கள் சக்சினிமைடுகள் எனப்படுகின்றன. இச்சேர்மங்கள் சில தனித்தன்மையான குறிப்பிட்ட சில பயன்களைக் கொண்டுள்ளன. எத்தோசக்சிமைடு, பீன்சக்சிமைடு மற்றும் மெத்சக்சிமைடு போன்ற பல்வேறு சக்சிமைடுகள் வலிப்புத் தடுப்பு மருந்துகளாகப் பயன்படுகின்றன. புரதங்கள் அல்லது பெப்டைடுகள் மற்றும் நெகிழிகளுக்கு இடையில் சகப்பிணைப்பளை உருவாக்கவும் பல்வேறு அளவீடுகளிலும் சக்சினிமைடுகள் பயனாகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 12th Edition, 9040
- ↑ [1]