சக்ராதா

இந்தியாவின் உத்தர்காண்டில் உள்ள நகரம்

சக்கரதா (Chakrata) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அமைந்த இராணுவப் பாசறை நகரம் ஆகும்.[1]

சக்கரதா
चक्राता G S A
நகரம்
चकराता
சக்கரதா is located in உத்தராகண்டம்
சக்கரதா
சக்கரதா
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அமைவிடம்
சக்கரதா is located in இந்தியா
சக்கரதா
சக்கரதா
சக்கரதா (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°42′07″N 77°52′08″E / 30.702°N 77.869°E / 30.702; 77.869
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்டேராடூன்
ஏற்றம்
2,118 m (6,949 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,498
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
248001
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in
சக்கரதாவிலிருந்து தேவதாரு வனத்தின் காட்சி
வனத்துறையின் ஓய்வு விடுதி
ஓய்வு விடுதி, தேவதாரு காடு
மரத்தாலான மகசு தேவதைக் கோயில்

இந்நகரம் டோன்ஸ் ஆறு மற்றும் யமுனை ஆற்றின் நடுவில், இமயமலையில் 2118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது டேராடூன் நகரத்திலிருந்து 98 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் இமாச்சல பிரதேசம், கிழக்கில் முசோரி (73 கிமீ) மற்றும் கார்வால் கோட்டம் அமைந்துள்ள்து.

இவ்வூரில் சிறப்பு எல்லைப்புறப் படையின் தலைமையகம் உள்ளது.

இராணுவப் பாசறை உள்ளாட்சிக் குழு தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் இவ்விடத்தில் 1886-இல் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் பாசறை நிறுவப்பட்டது.[2] 6 வார்டுகளும், 12 உறுப்பினர்களும் கொண்ட குழு, சக்கரதா பாசறை நகரத்தின் உள்ளாட்சி அமைப்பை நிர்வகிக்கிறது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 759 வீடுகளும், 15.70 சதுர கிலோ மீட்டர் பரப்பும் கொண்ட சக்கரதா இராணுவப் பாசறை நகரத்தின் மொத்த மக்கள்தொகை 5,117 ஆகும். அதில் ஆண்கள் 3,717 மற்றும் 1,400 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 377 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 367 (7.17%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.38% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 57.30%, இசுலாமியர் 1.54%, பௌத்தர்கள் 38.28%, சமணர்கள் 0.80%, கிறித்தவர்கள் 0.68% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[4] இவ்வூரில் இந்தி மொழியுடன், இவ்வட்டார மொழியான ஜௌன்சரி மொழியும் பேசுகின்றனர்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1.    "Chakrata". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 5. (1911). Cambridge University Press. .
  2. Chakrata பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் Official website of Dehradun city.
  3. "CANTONMENT BOARD : CHAKRATA". Archived from the original on 8 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Chakrata Population Census 2011
  5. "Census of India 2011: Data from the District Handbook" (PDF). Census India. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
  6. "District Census Handbook 2011" (PDF). Census India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ராதா&oldid=3929494" இலிருந்து மீள்விக்கப்பட்டது