சங்கராபாளையம் அப்பிச்சிமார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சங்கராபாளையம் அப்பிச்சிமார் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சங்கராபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு அப்பிச்சிமார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:சங்கராபாளையம், பவானி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பவானி
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:அப்பிச்சிமார்
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

அப்பிச்சிமார்

தொகு

[2]

நாமக்கல்லில் உள்ள வாழவந்தி நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் 'உசர வேட்டுவரில்' "மாரய்யன்" நல்லாட்சி புரிந்து வந்தார். அவருக்கு சின்ன மாரய்யன், பிள்ளை மாரய்யன், உத்தண்டராயன், ஆவுடையான் என சகோதரர்களுடன் நல்லாட்சி புரிந்து வந்தார். அண்ணன் தம்பதிகளுக்கு மொத்தம் 70 ஆண் மக்கள் இருந்தனர். அனைவருக்கும் ஒன்றாகவே திருமணம் நடக்க வேண்டும் என சபதம் செய்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் 'பூந்துறை' நாட்டில் திருமணம் பேசி முடிக்கின்றனர். அப்போது பூந்துறை நாட்டாருக்கும் 'தென் பூவாணிய' நாட்டு 'ஆவணிப் பேருரை' தலைநகராக கொண்டு ஆண்டு வந்த 'பூவாணிய வேட்டுவர்' "போத்திராயன்" என்பவருக்கும் கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இதில் 'போத்திராயன்' போர்களத்தில் "அப்பிச்சிமாராயனால்' கொல்லப்படுகிறார். படுகாயமடைந்த அப்பிச்சிமாராயனும் இறந்து விடுகிறார். மணமக்களின் சிலர் இறக்க மீதி இருந்தவர்களும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி இறந்தனர். மசரி என்ற பெண்ணின் மகன்களான இரண்டு சகோதரர்கள் போரில் இறந்தனர். திங்களூர், சிங்காநல்லூர், பிரிதி மற்றும் திடுமல் ஆகிய இடங்களில் உள்ள அப்பிச்சிமார் மடங்கள் எனப்படும் இடங்களில் இந்நாயகர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். எழுபது வேட்டுவர்களும் சைவ தெய்வங்களாக உள்ளனர். பூந்துறை நாட்டிலுள்ள கொங்கு வேட்டுவ கவுண்டர் மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர்களின் பெருந்தாலி பிரிவைச் சேர்ந்தவர்களாலும் குலதெய்வமாக வணங்கப்படுகின்றனர். இதில் கொங்கு வேளாளர்களில் 'பயிர' குலத்தினர் மற்றும் 'சாத்தந்தை' குலத்தினர் அமைச்சராக "அப்பிச்சிமாரய்யன்" அரசவையில் இடம்பெற்றிருந்தனர். பழங்கால காவியமான அப்பிச்சிமார் காவியம் அவர்களைப் பற்றியது. நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் புதிதாகத் திருமணமான அறுபது வாலிபப் போராளிகள் , தாரமங்கலம் பூவாணிய நாட்டுப் பொத்தி பட்டக்காரருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாள நாட்டுக்கவுண்டர்களுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி இறந்தனர். மசரி என்ற முஸ்லிம் பெண்ணின் மகன்களான இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் போரில் இறந்தனர். திங்களூர், சிங்காநல்லூர் மற்றும் திடுமல் ஆகிய இடங்களில் உள்ள அப்பிச்சிமார் மடங்கள் எனப்படும் இடங்களில் இந்நாயகர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அறுபது வேட்டுவர்களும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிம் மாவீரர்களுக்கு தனியாக மிருகபலி கொடுக்கப்படுகிறது. பூந்துறை நாட்டிலுள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் நாட்டார் மற்றும் வேட்டுவ கவுண்டர்களின் பெருந்தாலி பிரிவைச் சேர்ந்தவர்களாலும் குலதெய்வமாக வணங்கப்படுகின்றனர். பழங்கால காவியமான அப்பிச்சிமார் காவியம் அவர்களைப் பற்றியது.[2]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 Dr.Mailer Ravindran. அப்பிச்சிமார் காவியம்.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)