சங்கிலிவாடி

சங்கிலிவாடி (Sangilivadi) என்கிற ஜங்கல்வாடி(Jangalvadi) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

சங்கிலிவாடி
ஜங்கல்வாடி (வனவாடி)
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636 903

இது ஒரு இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமம் ஆகும்.

கிராமத்தின் பழமையான பெயர்: வனவாடி/வனவாசல் என்கிற ஜங்கல்வாடி (இன்றும் ஜங்கல்வாடி எனும் பெயரே அரசிதழில் உள்ளது)

ஊர் பெயரின் காரணம்:

ஆங்கிலத்தில் ஜங்கல் (Jungle) என்றால் வனம் + தமிழில் வாடி என்றால் முற்றம், வீடு,அடைப்பிடம்,விற்கும் இடம் அல்லது வாசல் என பல பொருள் வரும் = வனவாடி.

வனத்தின் வாசலில் இக்கிராமம் அமைந்ததாலும், வனத்தின் அருகில் அமைந்த வீடுகள் மற்றும் அக்காலத்தில் விறகு விற்கும் இடமாக இருந்ததால் வனவாடி என அழைக்கப்பட்டிருக்கலாம்.[சான்று தேவை]

பின்பு ஆங்கிலேயர்களால், அவர்களின் பேச்சுக்கு தகுந்தாற்போல் ஆங்கிலம் கலந்த ஜங்கல்வாடி என அழைக்கப்பட்டது

காலப்போக்கில் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில், ஜங்கல்வாடி எனும் பெயர் சங்கிலிவாடி என மருவியது.

இந்த ஊர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.

முக்கிய வேளாண்மை பயிர்கள்: சிறுதானியம் (கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை & திணை), நெல், பருத்தி,கரும்பு மற்றும் காய்கறிகள்

ஊர் மக்களின் முக்கிய தெய்வம்: மாரியம்மன், பொங்காளம்மன், பச்சையம்மன், காளியம்மன், கரியபெருமாள் மற்றும் முனியப்பன்/வேடியப்பன்.

இந்த ஊரில் நடைபெறும் மாரியம்மன் தெப்பத்தேர் விழா சிறப்பு பெற்றது.

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும், சென்னையிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'34.3"N 78°30'40.2"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 175 குடும்பங்களும் 688[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 362 ஆண்களும், 326 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "Sangilivadi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B004%2734.3%22N+78%C2%B030%2740.2%22E/@12.0761922,78.5089863,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.076187!4d78.511175
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 688
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலிவாடி&oldid=3743941" இலிருந்து மீள்விக்கப்பட்டது