சச்சித்திர சேனநாயக்கா

சச்சித்திர சேனநாயக்கா (Sachithra Senanayake, பிறப்பு: 9 பெப்ரவரி 1985) இலங்கைத் துடுப்பாட்ட வீரர். பல்-துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை துடுப்பாட்டக்காரரும், வலக்கை விலகுசுழல் பந்து வீச்சாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு முதல் இவர் கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழகத்திற்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு பற்றி வருகிறார்.[1]

சச்சித்திர சேனநாயக்கா
Sachithra Senanayake
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேனநாயக்கா முதலியன்செலாகே சச்சித்திர மதுசங்கா சேனநாயக்கா
பிறப்பு9 பெப்ரவரி 1985 (1985-02-09) (அகவை 39)
கொழும்பு, இலங்கை
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விலகுசுழல்
பங்குபல்-துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 150)சனவரி 20 2012 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபசூலை 31 2013 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006–சிங்கள விளையாட்டுக் கழகம்
2012-ஊவா
2013-சிட்னி சிக்சர்சு
2013-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒரு இ20ப முத பஅ
ஆட்டங்கள் 21 8 68 92
ஓட்டங்கள் 160 2 1,223 639
மட்டையாட்ட சராசரி 17.77 1.00 20.91 15.75
100கள்/50கள் 0/0 0/0 0/4 0/1
அதியுயர் ஓட்டம் 42 1* 89 51*
வீசிய பந்துகள் 996 168 14,492 4,429
வீழ்த்தல்கள் 18 12 346 145
பந்துவீச்சு சராசரி 43.77 13.25 19.91 19.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 29 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 5 எ/இ
சிறந்த பந்துவீச்சு 2/14 3/14 8/70 5/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 0/– 59/– 44/–
மூலம்: ESPN Cricinfo, ஆகத்து 27 2013

சேனநாயக்கா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சார்பில் முதற் தடவையாக பன்னாட்டுப் போட்டி ஒன்றில் 2012 சனவரியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இலங்கையின் நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். இலங்கைப் பிரீமியர் இலீகு மட்டுப்படுத்த்கப்பட்ட ஒவர் போட்டிகளில் பங்கு பற்றி அதிக எண்ணிக்கையான இலக்குகளைக் கைப்பற்றியமைக்காக இவர் இலங்கை அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.[1] 2013 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் 625,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டார்.

பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தடை

தொகு

2014 சூன் மாதத்தில் நடைபெற்ற இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் சச்சித்திர சேனநாயக்கா பந்தை வீசி எறிவதாக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிட்டனர்.[2] அவர் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த சந்தேகத்திற்கிடமான நான்கு பந்துவீச்சுக்களின்போது, முழங்கை மூட்டு விரியவேண்டிய 15-பாகை அளவையும் தாண்டி விரிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் அவர் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Sachithra Senanayake: Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2012.
  2. "Sri Lanka's Senanayake reported to ICC over bowling action". பிபிசி. 2 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2014.
  3. Sachithra banned from bowling by ICC, டெய்லிமிரர், சூலை 12, 2014

வெளி இணைப்புகள்

தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சச்சித்திர சேனநாயக்கா

"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சித்திர_சேனநாயக்கா&oldid=2719635" இலிருந்து மீள்விக்கப்பட்டது