சடகோப்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

சடகோப் (Sadgop) என்பது வங்காள இந்து யாதவ துணைச் சாதி குழுவாகும். இந்த இனக்குழுவானர் மேற்கு வங்கம், ஒடிசா, சார்க்கண்ட் மற்றும் இந்தியாவில் பீகார் பகுதிகளில் வாழ்கின்றனர்.[1]

வரலாறும் தோற்றமும் தொகு

சடகோப் என்ற பெயரானது சமஸ்கிருத வார்த்தையான 'சட' என்பதிலிருந்து வந்தது. சட என்பதன் பொருள் “நல்லது” என்பதாகும். கோபா என்பது “பால்காரர்” என்று பொருள் படும். இவர்கள் இந்து கடவுளான கிருஷ்ணரின் சந்ததியினர் ஆவார். 11ஆம் நூற்றாண்டில் பலர் குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் கீழைக் கங்கர் வம்சத்தின் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், மீதமுள்ளோர் 15ஆம் நூற்றாண்டில் காமரூப பேரரசின் போது இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் நாளாகமம் கூறுகிறது. கயா மற்றும் விருந்தாபன் இவர்களின் புனித தலங்களாகும். சடகோப், குலின் மற்றும் முலிகா என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குலின் குழுவானது கிழக்கு மற்றும் மேற்கு குலின்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு குலின் கோப் மேற்கு வங்காளத்தில் வாழ்கிறார். இக்குழுவானது கோஷ் மற்றும் சர்ஷியா என மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு குலின் மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரிலிருந்து கிழக்கு வங்கத்தின் சில பகுதியிலிருந்து பீகார் சென்றார். சத்கோப் பெங்காலி பேசுகிறார், ஆனால் பீகாரில் உள்ளவர்களும் இந்தி பேசுகிறார்கள். [1]

1910ல், சடகோப் ஏனைய சக இனக்குழுக்களான அகிர், கோப் மற்றும் கோபால் சமூகங்களுடன் இணைந்து கிருஷ்ண பரமாத்வாவின் பண்டைய யது வம்சாவளியான யாதவர் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறியது.[2]

தற்போதைய சூழ்நிலைகள் தொகு

சட்கோப் பல துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவர்கள் ஒரு எண்டோகாமஸ் குழுவாகும் கோத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் எக்சோகாமியாக உள்ளனர். சடகோப் சமூகத்தினர் நில உரிமை சமூகமாக உள்ளது. பலர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பிற நகரங்களில் குடியேறினர். இவர்களின் சமூக அமைப்பானது பங்கியா சடகோப் சமிதி என்று அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 People of India Bihar Volume XVI Part Two edited by S Gopal & Hetukar Jha pages 827 to 831 Seagull Books
  2. William R. Pinch (18 June 1996) (in en). Peasants and Monks in British India. University of California Press. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-91630-2. https://archive.org/details/peasantsmonksinb0000pinc. பார்த்த நாள்: 9 July 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடகோப்&oldid=3505038" இலிருந்து மீள்விக்கப்பட்டது