சதுபதி பிரசன்ன சிறீ
சதுபதி பிரசன்ன சிறீ (Sathupati Prasanna Sree)(பிறப்பு 2 செப்டம்பர் 1964)[3] என்பவர் இந்திய மொழியியலாளர் ஆவார்.
சதுபதி பிரசன்ன சிறீ Sathupati Prasanna Sree | |
---|---|
நாரி சக்தி விருது 2022-ல் சிறீ பெற்றபோது | |
பிறப்பு | 2 செப்டம்பர் 1964 |
தேசியம் | இந்தியர் |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது |
|
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | சர்தார் படேல் மகாவித்யாலயா (முனைவர்), ஆந்திரப் பல்கலைக்கழகம் (முதுகலை), மாண்டிசோரி மகிளா கலாசாலா (இளங்கலை)[1][2] |
கல்விப் பணி | |
துறை | ஆங்கில இலக்கியம், மொழியியல் |
Sub-discipline | பிரித்தானிய கவிதை |
கல்வி நிலையங்கள் | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
தொழில்
தொகுசிறீ ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், ஆய்வுக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[4] சிறீ தனது வாழ்நாள் முழுவதும் சிறுபான்மை பழங்குடி மொழிகளைப் பாதுகாப்பதிலும், இந்தியாவிற்குள் பழங்குடி மொழிகளுக்கான புதிய எழுத்து முறைகளை உருவாக்குவதிலும் பணியாற்றியுள்ளார்.[5][6]
சிறீ குபியா, கோயா, லிங்குவா போர்ஜா, ஜடாபு, கோண்டா-டோரா, கடபா, கோலம், கோண்டி, லிங்குவா கோதியா, சவரா, குர்ரு, சுகாலி, லிங்குவா கவுடு, முகதோரா மற்றும் ராணா மொழிகள் ஆகியவற்றிற்கான எழுத்து முறைகளை உருவாக்கியுள்ளார்.[1][7] 2022ஆம் ஆண்டுஅனைத்துலக பெண்கள் நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருதுவழங்கினார்.[4]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகுசிறீயின் வெளியிடப்பட்ட எழுத்துக்கள்:
- கிழக்கு மற்றும் மேற்கின் பின் நவீன இலக்கியத்தில் பெண்களின் மனோவியல் (Psychodynamics of the Women in the Post Modern Literature of the East and the West)
- மௌனத்தின் நிழல்கள் (Shades of Silence)
- ஷஷி தேஷ்பாண்டேவின் நாவல்களில் பெண் - ஒரு ஆய்வு (Woman in the Novels of Shashi Deshpande - A Study)[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Curriculum Vitae of Dr. Sathupati Prasanna Sree" (PDF). Andhra University. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017."Curriculum Vitae of Dr. Sathupati Prasanna Sree" (PDF). Andhra University. Retrieved 10 November 2017.
- ↑ "Professor Sathupati Prasanna Sree". LinkedIn. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
- ↑ "CV" (PDF). ijmer.in. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
- ↑ 4.0 4.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/.
- ↑ "Language gets a new face". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
- ↑ "Scripting it!". Yo! Vizag. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
- ↑ "Professor Prasanna Sree". Omniglot. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.