சத்யவதி ரத்தோடு
சத்தியவதி ரத்தோடு (Satyavathi Rathod) (பிறப்பு: அக்டோபர் 31, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தெலங்காணாவின் பட்டியல் சாதி நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக 2019 முதல் பணியாற்றி வருகிறார்.[1] தெலங்காணாவில் அமைச்சராக பணியாற்றிய முதல் பழங்குடி பெண்ணான இவர் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தெலங்கானா சட்ட மேலவையில் உறுப்பினராக உள்ளார். இவர் முன்பு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2009இல் ஆந்திர மாநில சட்டசபைக்கு தொர்னாங்கல் சட்டமன்ற தொகுதி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சத்யவதி ரத்தோடு | |
---|---|
சாக்சி தொலைகாட்சியில் ஒரு பேட்டியின்போது சத்யவதி, 2019 | |
பட்டியல் சாதி நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர். தெலங்காணா அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 செப்டம்பர் 2019 | |
தெலங்காணா சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மார்ச் 2019 | |
தொகுதி | மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
தொகுதி | தொர்னாங்கல் (சட்டமன்ற தொகுதி) (ப.சா) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 அக்டோபர் 1969 பெத்த தண்டா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்போது தெலங்காணா) |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி (1989–2014) |
துணைவர் | கோவிந்த் ரத்தோடு (இற. 2009) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | ஐதராபாத்து |
சொந்த வாழ்க்கை
தொகுசத்தியவதி, 1969 அக்டோபர் 31ஆம் தேதி தெலங்கானாவின் இன்றைய மகபூபாபாத் மாவட்டத்தின் குரவி மண்டலத்திலுள்ள பெத்த தண்டா என்ற குக்கிராமத்தில் (பிரிக்கப்படாத ஆந்திரா) இலிங்கிய நாயக் - தாஸ்மி பாய் ஆகியோருக்கு ஐந்து உடன்பிறப்புகளில் இளையவராக பிறந்தார்.[2][3]
எட்டாம் வகுப்புக்குப் பிறகு, இவர் பள்ளியை விட்டு வெளியேறி கோவிந்த் ரத்தோட் என்பவரை மணந்தார்.[3] ஜூலை 2009 இல் சாலை விபத்தில் இவரது கணவர் இறந்தார்.[4] இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[3]
பின்னர் ஒரு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3]
தொழில்
தொகுஇவர், 1989 இல் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து, அதே ஆண்டு தொர்னாங்கல் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ரெட்டிய நாயக்கிடம் தோற்றார். 1995இல், இவர் குந்திரதிமடுகு ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006 இல், நரசிம்முலபேட்டையின் மாவட்டத் தலைவரானார்.[3]
2009 ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில், இவர், தொர்னாங்கல் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] மார்ச் 2014 இல், இவர் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு வெளியேறி தெலங்காணா இராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார்.[6] 2014ஆம் ஆண்டில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் காங்கிரசின் ரெட்டிய நாயக்கிடம் மீண்டும் தோற்றார்.[5] 2018 சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.[7]
மார்ச் 2019 இல், இவர் தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] க. சந்திரசேகர் ராவின் இரண்டாவது அமைச்சரவையில் பட்டியல் சாதி நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக 2019 செப்டம்பரில் பதவியேற்றார்.[9] தெலங்காணாவில் அமைச்சராக பணியாற்றிய ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Telangana State Portal Council of Ministers (Present)". தெலங்காணா அரசு. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Telangana CM Chandrasekhar Rao to present Budget in Assembly". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Mahender, Adepu (9 September 2019). "A dropout who scripted her destiny". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Dornakal MLA's husband dies in bike 'accident'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 21 July 2009. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ 5.0 5.1 "Dornakal (ST) Assembly constituency profile". தெலுங்கானா டுடே. 6 October 2018. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Telangana: KCR rejects merger with the Congress". தி டெக்கன் குரோனிக்கள். 4 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "TRS nominates 4 candidates for upcoming MLC polls, offers one seat to AIMIM". தி நியூஸ் மினிட். 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 9 March 2019.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Telangana Home Minister among 5 elected to Council". அவுட்லுக் (இதழ்). 12 March 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Apparasu, Srinivasa Rao (8 September 2019). "KCR expands cabinet with 6 ministers; re-inducts son KTR, nephew Harish Rao". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.